……………………….

…………………………..
தமிழ் நாட்டில், பாஜக ஆட்சிக்கு வந்தால், முதல் காரியமே
” இந்து சமய அறநிலயத்துறையை ” ஒழிப்பது தான் என்று
அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
கூறியதற்கு பதிலாக –
பல கேள்விகளை சவாலாக
முன் வைக்கிறார் சுகி சிவம் அவர்கள்…..
…………………………
…………………………
எனக்கும் இது குறித்து சில கேள்விகள் உண்டு….
இதற்கான, விவரமான பதிலை, அண்ணாமலை அவர்களிடமிருந்து
மட்டுமல்ல….. இந்த விமரிசனம் தள வாசக நண்பர்களிடமிருந்தும்
நான் எதிர்பார்க்கிறேன்…..
( பின் குறிப்பு – ஒரு விஷயத்தில் நான் சுகி சிவம்
அவர்களோடு ஒத்துப்போகிறேன்….
” அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா…??? “
ஒரே ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட தனியாக
போட்டியிட பயந்து, எக்கச்சக்கமான தயக்கங்களுடன்
(கூவத்தூர் புகழ்) எடப்பாடியிடம் சரணாகதி அடைகிற பாஜக
என்றைக்கு சட்டமன்ற தேர்தலில் தனியாக வெற்றி பெற்று,
ஆட்சியமைத்து, அறநிலையத்துறையை ஒழிப்பது….???? “
அண்ணாமலை அவர்களையே முடிவெடுக்க விட்டால், அவர்
நிச்சயம் கௌரவமான அளவில் ஓட்டுகளை பாஜக-வுக்கு
பெற்றுத் தருவார்… அதில் சந்தேகமில்லை – ஆனால்,
அகில இந்திய தலைமை அதற்கு விட்டால் தானே….? )
.
……………………………………………..
சுகி சிவம் அவர்கள் உளறல்களின் உச்சகட்டம். கும்மிடிப்பூண்டிக்கு அப்பால் என்ன நடக்குது என்பதே அவருக்குத் தெரியாது. அவர் இருப்பது 1700களில்.
இவர் வாழ்க்கைல பாண்டிச்சேரி பக்கம் ஒதுங்கியிருக்கிறாரா இல்லை ஏதாவது கோயிலுக்குச் சென்றிருக்கிறாரா? இல்லை கர்நாடக கோயில்களை எட்டியாவது பார்த்திருக்கிறாரா? கிடைத்த மேடையில் பேசிக்கொண்டிருப்பது தவிர, நடப்பது எதையும் இவர் அறிந்திருப்பதுபோலத் தெரியவில்லை.
1. கர்நாடக கோயில்கள் எப்படி நடக்கின்றன என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். அரசின் கட்டுப்பாடு, ஆனால் அரசின் தலையீடு கிடையாது. கோயில் சொத்தை எடுத்து பொதுநலத்துக்கு உபயோகிக்கிறேன் என்று சொல்வதும், கோயில் வருமானத்தில் மாற்று மதத்திற்கு வாக்குக்காகப் பணம் கொடுப்பதும் கிடையாது. கோயில்களில் ‘கடவுள் இல்லை’ என்று சொல்லும் கேஸ்களும், திக கும்பல்களும், திருடுவதற்கும் இந்துக்கோயில்களை ஒழித்துக்கட்டுவதற்குமான திட்டங்கள் கிடையாது. நிச்சயம் கர்நாடக கோயில்கள் மிக நன்றாகவே நிர்வகிக்கப்படுகின்றன.
2. திருநள்ளாறு சமீபத்தில் போயிருந்தேன். எனக்குக் கிடைத்ததெல்லாம் நல்ல அனுபவம். அதே நேரத்தில் தமிழக கோயில்களுக்குச் சென்றிருந்தேன். அவற்றில் நான் அவலத்தைத்தான் பார்த்தேன். இதைப்பற்றி விவரமாகவே எழுதலாம்.
3. அரசின் பிடியில் இல்லாமல், கிறித்துவ இஸ்லாமிய கோயில்கள் எவ்வாறு செயல்படுகின்றன? அதில் ஏன் கிறித்துவர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை வேலைக்கு எடுப்பதில்லை? எதற்காக மதச்சார்பற்ற அரசு, அவர்களின் கோயில் பணியாளர்களுக்கு பணம் தரவேண்டும்? எதற்காக கார் வாங்கிக்கொடுப்பது, வளர்ச்சி நிதி தருவது என்று செயல்படவேண்டும்?
4. கோயில் சொத்தை நாத்திகர்களுக்குக் கொடுத்தது ஆத்திகர்கள் என்று எதை வைத்து சுகி சிவம் சொல்கிறார்? அப்படிப்பட்டவர்களின் லிஸ்டை அவர் வெளியிட வேண்டியதுதானே. எதற்காக, சிவன் கோயிலுக்காகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் லயோலா கல்லூரி நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது? கொடுத்தவர் யார்? அதன் குத்தகையை நீட்டிப்பது யார்? ஆத்திகர்களா இல்லை நாத்திகர்களா இல்லை சுகி சிவமா?
5. கோயில்களில் என்ன என்ன நடைமுறைகள் மீறப்படுகின்றன என்று சுகி சிவத்திற்குத் தெரியுமா? கோயில் நிலங்களை ஏன் அரசு ஒழுங்குபடுத்துவதில்லை? கோயில் நிலங்களை ஆக்கிரமித்திருப்பது கழகங்களும், இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் என்பது அரசுக்குத் தெரியாதா இல்லை சுகி சிவத்துக்குத் தெரியாதா? ஏதோ ஆலோசனைக் குழு பதவி கொடுத்த உடனேயே யோக்கியர் போல திமுக அரசுக்கு ஜால்ரா அடிக்கிறார் சுகி சிவம். இப்படிப் பேசுகின்ற சுகி சிவம், ஜாஹிர் ஹுசேன் போன்றவர்களுக்கு, கிறித்துவர்களுக்கு, இந்து அறநிலையத்துறை, கோயில் சம்பந்தமான வேலை கொடுத்தபோது (இதுபோல பல உதாரணங்கள்) எங்கே சென்றிருந்தார்? கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் நிர்வாகம் நடத்தி கிறித்துவ மதமாற்றத்துக்குத் துணைபோகும் லயோலா போன்ற கல்லூரிகள், தனியார் பல்கலைக் கழகமாக ஆக்கவேண்டும் என்று application போட்டபோது, கோயில்களின் காவலர் சுகி சிவம் இந்தியாவில்தான் இருந்தாரா?
ஏன் அண்ணாமலை இந்துக் கோயில்கள் அரசின் பிடியிலிருந்து வெளியே வரவேண்டும் என்று சொல்கிறார்? காரணம், அரசு அதனை கொள்ளையடிக்கும் இடமாகவும், அந்தப் பணத்தை வைத்து கோயில்களை மாற்று மதத்தினரின் இடமாகவும் ஆக்குவதற்குத்தான் முயல்கிறது. கோயிலில் ஒவ்வொரு நிர்வாகிக்கும் என்ன சம்பளம் கொடுக்கிறார்கள், என்ன என்ன facility வழங்கப்படுகிறது என்பதைப் பாருங்கள். இதனை சாதாரண மக்களுக்குப் புரியச் செய்வது கடினம். அதனால் அவர், ‘முதல் கையெழுத்து’ என்று அரசியல் செய்கிறார். அவருடைய நோக்கம் பழுதல்ல. அவர் சிந்திக்காமல் எதையும் செய்யப்போவதில்லை, குறிப்பாக சுகி சிவம் போன்றவர்களுக்கு பதவி கொடுத்து எதை வேண்டுமானாலும் ஆதரிக்கச் செய்யப்போவதில்லை. ஆனால் இதனை மக்கள் உணர்வுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக அண்ணாமலை முன் வைக்கிறார்.
சிபிஐ என்பதும் நீதித்துறை என்பதும் தேர்தல் கமிஷன் என்பதும் தனிப்பட்ட அதிகாரங்கள் கொண்ட அமைப்பு. ஆனால் அவைகளின் பிடி அரசிடம் இருக்கும், இருக்க வேண்டும். இங்கு அரசு என்று குறிப்பிடப்படுவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. அதைப்போல கோயில்களையும் தனி நிர்வாகம், இந்து பக்தியாளர்களைக் கொண்டு நிர்வகிக்கும், அரசின் தலையீடு இல்லாமல். இதை நோக்கித்தான் அண்ணாமலை செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன். சுகி சிவம் திரிப்பது போல, அண்ணாமலைக்கு 5 கோயில் நிர்வாகம், ஹெச் ராஜாவுக்கு இன்னொரு 5 கோயில் என்று பட்டா போட்டுக்கொள்வதல்ல.
சுகி சிவத்தின் வேலை திமுக அரசுக்கு ஜால்ரா போட்டு பணம் சம்பாதிப்பதல்ல, பாஜக ஆட்சியைப் பிடிக்காது என்று சொல்லி ஸ்டாலின் மனதைக் குளிரவைத்து நாலு காசும் அரசு ஆதரவில் கூட இருபது மேடைகளையும் நோக்கிய பயணம் அல்ல, என்பதை சுகி சிவம் இனியாவது நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.
suki sivam is an opportunist and always after money. He lost his stature once he
started praising dmk people . He will get some govt programmes by praising them.
I hope he does not become another Leoni.
உண்மை
கோவிலை அறநிலையத்துறை எப்படி பராமரிக்கிறது என்பது கோவிலுக்கு செல்லும் அனைவருக்குமே தெரியும். கூட்டம் வரும் கோவிலில் எல்லா வழியிலும் பணத்தை பிடுங்குவது. அவ்வளவாக வராத கோவிலில் சொத்தை முழங்குவது. குத்தகைக்கு கொடுப்பதில் கோவிலுக்கு மிகக்குறைந்த வருமானம் வருமாறு பார்த்துக்கொள்வது. (அதுவும் பெரும்பாலும் வசூலிக்க முடியாது! ). அறநிலையத்துறை அட்டகாசங்களை யூடியூபில் டி ஆர் ரமேஷ் அவர்கள் விளக்கமாக சொல்கிறார். பார்க்க பார்க்க கண்களில் ரத்தம் வருகிறது!
இந்த பிரச்சனை நான் சமீபத்தில் சென்ற திருநள்ளாறில் பார்க்கவில்லை. கர்நாடக கோவில்களின் பராமரிப்பு பற்றி சுகி சிவம் தெரிந்து தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. உண்மையிலேயே மன நிம்மதி தரும் ஆலய தரிசனம் நான் தரிசித்த கோவில்களில்.
இங்கு அப்படியா இருக்கிறது?
அவர் சொன்ன இரண்டு பாயிண்ட்.
1. பிஜேபி இங்கு ஆட்சிக்கு வரும் என நினைப்பது வெறும் கனவு.
கட்சி நடத்தும் எல்லோருக்கும் ஆட்சிக்கு வருவதே குறிக்கோள். அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிஜேபி. பொறுமை நிறைந்த கட்சி. வெறும் 2 எம்பிக்கள் பாராளுமன்றத்தில் இருந்தது ஒரு காலத்தில். அதன் பிறகு மூன்றாம் முறையாக ஆட்சியில். இப்போது நான்கு எம் எல் ஏக்கள் என்பதால் அப்படியே இருக்கப்போவதில்லை. அதேபோல், கட்சித்தலைவர் அதை நோக்கியே ஒவ்வொரு முறையும் பேசுவார்.பேசவேண்டும்.
2. பாண்டியில் , கர்நாடகாவில் அறநிலையத்துறை இருக்கும்போது பிஜேபி அதை ஏற்றுக்கொள்ளும்போது இங்கு அதை சொல்வது விதண்டாவாதம்.
சிம்பிள். அங்கு அறநிலையத்துறை உருப்படியாக இருக்கிறது. இங்கு உளுத்துப்போய் இருக்கிறது. அதனால் அதை ஒழித்துக்கட்டவேண்டும் !
Annamali talked about temple mismanagement , Corruption in HR&CE dept., Most luxuries spending of temple ‘Hundi’ money offered by poor devotees and poor maintenance of temple premises etc for more then an hour. To side track the main issue suki and sun tv made this hatred speech. Now the discussion will be annamalai and suki by the rest of the red light media. Core issue is buried. This is how they fool masses for the past five decades. Sun TV is agenda based media and should be boycotted.
.
என் கேள்விகளுக்கு இன்னமும்
விடை கிடைக்கவில்லை;
ஒரு நண்பர் சொல்கிறார் –
// பாண்டியில் , கர்நாடகாவில் அறநிலையத்துறை
இருக்கும்போது பிஜேபி அதை ஏற்றுக்கொள்ளும்போது
இங்கு அதை சொல்வது விதண்டாவாதம்.
சிம்பிள். அங்கு அறநிலையத்துறை உருப்படியாக
இருக்கிறது. //
மற்றொரு நண்பர் சொல்கிறார் –
// கர்நாடக கோயில்கள் எப்படி நடக்கின்றன
என்பதை நீங்கள் பார்க்கவேண்டும்.//
//திருநள்ளாறு சமீபத்தில் போயிருந்தேன்.
எனக்குக் கிடைத்ததெல்லாம் நல்ல அனுபவம். //
எங்கெங்கோ இருந்தவர்கள்/இருப்பவர்கள்,
பாண்டிச்சேரியிலும், கர்நாடகாவிலும் இயங்கும்
அரசுகளுக்கு சர்டிஃபிகேட் கொடுக்கிறார்கள்…..உம்ம்…!!!!
ஆனால், அங்கே இருக்கும் மக்கள் இதை
ஆமோதிக்கவில்லையே…!!!
நானும் பார்த்திருக்கிறேன்…. பாண்டியிலும்,
கர்நாடகாவிலும் சில காலம் வசித்தும் கூட
இருக்கிறேன்….திருநள்ளாறுக்கான அனுபவ
பாக்கியமும் கிடைத்தது…நான் மட்டும் பாவம்
செய்தவன் போலிருக்கிறது…. நண்பருக்கு கிடைத்த
“நல்ல” அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை…!!!
…………
சரி – உங்கள் வாதப்படியே, பாஜக அமைச்சர்கள்
அத்தனை பேரும் உத்தமர்கள், பாஜக ஆட்சியில்,
அதிகாரிகள் அத்தனைபேரும் லஞ்சம் என்றால்
என்ன என்று டிக்-ஷனரியில் பார்த்து தான்
தெரிந்து கொள்வார்கள் – என்றே வைத்துக்
கொள்வோம்.
கர்நாடகாவிலும், பாண்டியிலும் – மக்கள்
பாஜகவுக்கு என்ன அரசாட்சியை ஆயுள் சாசனம் செய்தா
கொடுத்திருக்கிறார்கள்…. ??? அடுத்த தேர்தலில்,
குமாரசாமியே மீண்டும் முதலமைச்சரானால் கூட –
நிலைமை பாஜக ஆட்சி போல் (…!!!)
லஞ்சமோ, ஊழலோ இல்லாமல் நடக்குமா…?
இப்போது அங்கே ஆட்சியில் இருக்கும்
பாஜக ஏன் இதற்கு ஒரு நிரந்தர தீர்வை,
ஊழல் செய்ய முடியாத ஒரு சிஸ்டத்தை
உருவாக்கவில்லை ……???
————————–
சரி தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம்…
ஹிந்து அறநிலையத்துறையை அரசிடமிருந்து
பிடுங்கியாயிற்று என்றே வைத்துக் கொள்வோம்.
அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்….?
கோவில்களின் பொறுப்பை / நிர்வாகத்தை யாரிடம்
கொடுக்கப்போகிறீர்கள்….?
பரம புண்ணியவான், பூஜ்யஸ்ரீ “ஜக்கி”யானந்த
சுவாமிகளிடமா….?
– நான் கேட்பதெல்லாம் …..
“மாற்று வழி என்ன….? ” என்பதைத்தான்.
என்ன செய்தால் இவை சீரடையும்…?
அமைச்சரின், அரசு அதிகாரிகளின் – லஞ்ச ஊழல்,
கோவில் சொத்துகள் கொள்ளை,
வேண்டியவர்களுக்கு குத்தகை,
வீண் செலவு, திருட்டுக் கணக்கு,
கோவில் பணிகளில் கட்சிக்காரர்கள்,
பிற மதக் காரர்கள் உள் நுழைவதை தவிர்ப்பது
– இவற்றிற்கெல்லாம் என்ன வழி வைத்திருக்கிறீர்கள்…?
கர்நாடகாவில், பாண்டியில் என்றேல்லாம்
பேசுவது – வெறும் கதை…. ஊழல் செய்யாத
அரசியல்வாதிகள், அதிகாரிகள் –
எங்கே தான் இல்லை…??? எந்த கட்சியில் தான் இல்லை…?
தயவு செய்து, உருப்படியான மாற்று யோசனைகளுடன் –
அறநிலையத்துறை ஒழிப்பைப்பற்றி பேச
வாருங்கள்….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஊழல் என்று பொதுப்படையாகப் பேசவேண்டாம். ஊழல் எல்லா இடங்களிலும் இருக்கிறது பொதுமக்கள், அவர்கள் வீடுகள் உட்பட. ஊழலை எதிர்கட்சிகள் கண்காணிக்கும் (என்று நம்புவோம்) அல்லது மற்றவர்கள் கண்காணிப்பார்கள்.
கோயிலுக்குள்ள நடைமுறைகள் மீறப்படுகின்றன. கோயிலுக்குள்ள கடைகள் மாற்று மதத்தினருக்குக் கொடுக்கக் கூடாது. கோவிலுக்கான செலவுகள், கோயில் உண்டியல் பணத்திலிருந்துதான் செலவழிக்கப்படவேண்டும். நிர்வாக அதிகாரி போன்றவர்களுக்கு அரசு பணம் செலவழிக்கவேண்டும்.
கேரள கோயில்களில் அரவணைப் பிரசாதம், மற்ற பிரசாத விற்பனைகள் உண்டு. அதன்மூலம் பண வரவு உண்டு. ஆனால், எந்தக் காரணம் கொண்டும் கோயில் நடைமுறைகளில் யாரும் தலையிட மாட்டார்கள். 8 மணிக்கு நடை சாத்திவிடுவார்கள் என்றால், 8 மணிக்கு நடை சாத்திவிடுவார்கள். அதுபோல நம்பூதிரிகளின் நடைமுறைகளில் யாரும் தலையிட முடியாது. அவர்களைத் தொடக்கூடாது என்பது விதி. தொட்டால் மீண்டும் குளித்துவிட்டு அதற்கான பூசைகள் செய்யவேண்டும், அதனால் வழிபாடுகள் பாதிக்கும் என்பதால், தொடுபவருக்கு இத்தனை பணம் அபராதம் என்றும் வைத்திருக்கிறார்கள். கேரள நடைமுறைகளின்படி நடைபெறும் கோயில்களில் சட்டம் அனைவருக்கும் சமம். அது ராஜீவ் காந்தியாக இருந்தாலும், சட்டை போடாமல், வேஷ்டியுடந்தான் உள்ளே நுழைய முடியும். இல்லையென்றால் தரிசனம் நஹி.
//லஞ்சமோ, ஊழலோ இல்லாமல் நடக்குமா…?// – கர்நாடகாவிலும் பாண்டியிலும் ஊழல் இருக்கலாம். ஆனால் கலாச்சாரத்தை, நடைமுறைகளை மாற்றும் அளவு அங்கு எதுவும் நடைபெறுவதில்லை. கர்நாடக கோயில்களைப் பற்றி அதிகம் எழுதலாம்.
கோயில்களில் அரசின் வேலை என்னவென்றால், அதன் சொத்தை கணக்கெடுத்து பராமரிப்பது, அனைவருக்கும் கோயிலில் வழிபட உரிமையை நிலைநிறுத்துவது. ஆனால் திமுக என்ன செய்கிறது? 8 ஆண்டு ஆகமப் படிப்பு, அல்லது அதற்கான நடைமுறைகளை மாற்றுவது (பெருமாளுக்கான குடையை, ஸ்டாலின் மனைவி துர்காவிற்கு சமீபத்தில் ஒரு கோயிலில் பிடித்திருந்த படத்தைப் பார்த்திருப்பீர்கள்), யாரை வேண்டுமானாலும் உள்ளே கொண்டுவரலாம் என்று திட்டமிட்டு ஹிந்துக் கோயில்களை அழிப்பது, (புஷ்கரத்தின்போது, கோயில் உற்சவர்களை தாமிரவருணியில் திருமஞ்சனம் செய்யக்கூடாது என்று பல கோயில்களில் அரசு அதிகாரிகள் மிரட்டினர். இதன் காரணம், இந்துக்கள் ஒன்று சேரக்கூடாது, அது மதமாற்றத்துக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கிறித்துவ மிஷினரிகள் கொடுத்த அழுத்தம். உங்களுக்கே தெரியும், உதயநிதி, தான் கிறித்துவன் என்று சொல்லியது) கோயில் நிலங்களை கட்சிக்காரருக்கும் பிற மதத்தினருக்கும் கொடுப்பது என்று செயல்படுகிறது. உதாரணமாக அன்பில் என்ற ஊரில், கோயிலுக்கு 3000 ஏக்கர் சொந்தம். ஆனால் அவற்றைப் பலர் ஆக்கிரமித்துள்ளனர் (அன்பில் என்ற ஊர் எங்கிருக்கிறது என்று கேட்பவர்களுக்கு தர்மலிங்கம், மெய்யாமொழி, பொய்யாமொழி கதைகளெல்லாம் தெரியாது என்று வைத்துக்கொள்கிறேன்)
எப்படி தேர்தல் கமிஷன், சிபிஐ, நீதித்துறைகள் செயல்படுகின்றன? அவற்றில் ஊழல் இல்லையா? இருந்தாலும் ஓரளவு நம்பிக்கையை அவை பெறவில்லையா? ஊழல் செய்தால் அந்தக் குழுவை, தலைவரை மாற்றும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு. அதைப்போல தனி தேவசம் போர்ட் கோயில்களை நிர்வகிக்கலாம். கேரளாவில், முஸ்லீம்களை நம்பூதிரிகளின் இடத்தில் உட்கார வைக்கிறேன், கோயில்களில் வேலைக்கு வைக்கிறேன் என்று அரசு செய்வதில்லை. ஆனால் இங்கு திமுக அதனைச் செய்கிறது.
இதனாலெல்லாம் திருட்டுக்கணக்கு, ஊழல் போன்றவற்றை ஒழிக்கமுடியுமா என்று கேட்டால், ஒழிக்க முடியாது. ஒருவேளை இந்த நிர்வாகத்தை கார்ப்பொரேட்டுகளுக்குக் குத்தகை விட்டால் நேர்மையாக நடக்க வாய்ப்புள்ளது. (பாஸ்போர்ட் processஐ குத்தகைக்கு விடுவதைப் போல).
அண்ணாமலை செய்வது கருத்துருவாக்கம். சுகி சிவம் செய்வது பணத்துக்காக பச்சைத் துரோகம். இந்த மாதிரி பணம் சம்பாதித்து அவர் எங்கே கொண்டுபோகப்போகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
I REPEAT –
/// சரி – ஹிந்து அறநிலையத்துறையை அரசிடமிருந்து பிடுங்கியாயிற்று என்றே
வைத்துக் கொள்வோம்.
அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்….?
கோவில்களின் பொறுப்பை / நிர்வாகத்தை
யாரிடம் கொடுக்கப்போகிறீர்கள்….?
– நான் கேட்பதெல்லாம் …..
“மாற்று வழி என்ன….? ” என்பதைத்தான்.
.
…………………………………….
.
நண்பர் paiya,
விவாதங்களில் புது நண்பர்கள்
பங்கு கொள்வதை வரவேற்கிறேன்….!!!
நீங்கள் சொல்லி இருப்பது –
…………………..
Now the discussion will be
annamalai and suki by the
rest of the red light media.
Core issue is buried.
……………………
இங்கே, இந்த தளத்தில் –
நான் என்ன எழுதி இருக்கிறேன் / எழுதுகிறேன்
என்று பார்த்து விட்டு சொல்லுங்கள்…
முக்கிய விஷயத்தை புதைத்து விட்டா
நான் எழுதி இருக்கிறேன்…?
சுகி சிவத்தை நான் தலைப்பில் போட்டதோடு
விட்டு விட்டேன்.
மற்றவர்கள் வேறு பக்கம் போனாலும்,
முக்கிய விஷயத்தை தான் இப்போதும் நான்
விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.
மேலே நான் எழுதியிருக்கும்
கருத்துகளை பாருங்கள்….
ஜக்கியின் கைகளில் கோயில்களை
கொடுக்கவா போராட்டம் ….?
இதற்கான, உருப்படியான, மாற்று வழிகளை
முதலில் முன் மொழிந்து விட்டு –
இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் அதை
ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா
என்பதை பார்த்து விட்டு,
பிறகு இருப்பதை ஒழிப்பது பற்றி –
பேசுவதோடு மட்டும் நிற்காமல் …………
ஒரு நாள் ஆர்ப்பாட்டத்தோடு நின்று விடாமல்,
மாற்று வழிகளை நிறைவேற்றும் வரை
தொடர்ந்து, நின்று போராடுவோம்.
அத்தைக்கு மீசை முளைக்கும் வரை
காத்திருக்க வேண்டாம் …!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
தேன் எடுத்தவன் புறங்கையை நக்கித்தான் தீர்வான் என்பது பழமொழி இது அனைத்து சித்தாந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.
இந்து சமய அறநிலையத்துறையை ஒழிப்பது என்பது, அத்துறை சீரமைக்கப்பட வேண்டும் என்பதை அரசியல் ரீதியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க உதவும் ஒரு வார்த்தை அவ்வளவுதான்.
நீங்கள் குறிப்பிடுவது போல் இந்து சமய அறநிலையத்துறை கூடாது என்பவர்கள் எல்லாம் கோவில்களை ஜக்கி ஆனந்தாக்களிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறிவிடவில்லை. இன்னமும் சொல்லப்போனால் ஒரு ஜாயின் கமிஷனர் ஒரு அசிஸ்டன்ட் கமிஷனர் ஏகப்பட்ட ஆணையாளர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் உடன் வரும் வானளாவிய அதிகாரம் என்று இருந்தும் இவர்களது நிர்வாகத்தில் கோயில்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன. இதனுடன் ஒப்பிடும்பொழுது நீங்கள் குறிப்பிடும் ஜாக்கி ஆனந்தாக்கள் நடத்தும் நிர்வாகம் சிறப்பாக தான் இந்த நடந்து கொண்டிருக்கின்றது.
இனி நீங்கள் கேட்பது போல் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
1) ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் தனியார் நிர்வாகத்தில் இருக்கும் கோவில்கள் என்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் குறித்தான கணக்கு மற்றும் ஜியோ டேக்கிங் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
2)அக் கோவில்களின் வருமானம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த சரியான விவரங்கள் ஆவணப் படுத்தப்பட்ட வேண்டும்.
3) பிரச்சனைக்குரிய ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்கள், நீதி மன்ற வழக்குகளில் சிக்கியிருக்கும் சொத்துக்கள் குறித்தான தனி கணக்கெடுப்பின் மூலம் உண்மைத் தன்மையை அறிந்து சட்ட நடவடிக்கைகள் துரிதப் படுத்தப் படவேண்டும்.
4) பெருங் கோவில்களிலிருந்து சிறு கோவில்கள் வரை அவை எந்த ஆகம விதிப்படி அல்லது வழிபாட்டு நடைமுறைகளில் நடத்தப்படுகின்றது என்று கணக்கெடுப்பதும் அவசியம்.
5) கோவில்கள் தோறும் உள்ள சிற்பங்கள், கட்டிட அமைப்பு தகுந்த தரவுகளின் அடிப்படையில் ஆவணப் படுத்துதல் அவசியம்.
6)இணை ஆணையர் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை உள்ளோரின் பட்டியலில் மாற்று மதத்தினர் எண்ணிக்கை குறித்தான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்கள் அரசின் வேறு துறைகளில் பணியமர்த்தப் படவேண்டும்.
7) கோவில் சொத்துக்களை அனுபவித்து வரும் மாற்று மதத்தினர், உள் குத்தகைகார்களை கண்டறிந்து குத்தகை காலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் இது போன்று நடைபெறாது தடுக்க வேண்டும்.
8) திருக்கோயில் சொத்துக்கள் குறித்தான எந்த ஒரு ஒப்பந்தமும் இணைய வழியில் வெளிப்படையாக இந்து சமூகத்தினர் மட்டுமே பங்குபெறும் வகையில் நடத்தப் படவேண்டும்.
.
vgchandrasekaran,
நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான்….
ஆனால் இவற்றை எல்லாம்
செய்யப்போவது யார்… ?
நிறைவேற்றப் போவது யார்…?
எந்த அமைப்பு ..?
– என்பது தான் கேள்வி…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
மாற்று வழிகள் பற்றி யோசனைகள்
கேட்டிருந்தேன்.
நண்பர்கள் அதை கருத்தில் கொள்ளவில்லை;
தற்போது நிலவி வரும் குறைகளைப்பற்றியே
பெரும்பாலும் தெரிவித்துள்ளனர்.
எனக்கு, இது குறித்து சில யோசனைகள்
இருக்கின்றன… அடுத்த 2-3 நாட்களில்
அது குறித்து தனியே ஒரு இடுகை எழுதுகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்த்ன்
எனக்கு கிரேசி மோகன் வசனம் தான் ஞாபகம் வருகிறது..
‘கேள்வி கேட்பது ஈசி…பதில் சொல்லி பாருங்கள்’.
(சு)சுகி. இதே போல அரசிடமும் (இவ்ளோ புகார் வருதே..என்ன செய்ய போகிறீர்கள்) என்று கேள்வி கேட்கட்டும்
கர்நாடகாவில் muzrai dept என்ற பெயரில் அறநிலைய துறை இயங்குகிறது.மிகவும் சிறப்பாகவே
அங்கு கோவில்கள் பராமரிக்க படுகின்றன . குறிப்பாக கொல்லூர் , குக்கே சுப்ரமண்யா ,
போன்ற கோவில்களுக்கு வருமானம் அதிகம். கொல்லூரில் வரும் பக்தர்களுக்கு இரு வேளை சுவையான
உணவு வழங்கப்படுகிறது. சுப்ரமண்யாவிலும் அப்படியே. இதை தவிர்த்து தர்மஸ்தலாவின்
நிர்வாகத்தை வீரேந்திர ஹெக்டே என்பவர் 50 வருடங்களாக சிறப்பாக நடத்தி வருகிறார்.
சிருங்கேரி கேட்கவே வேண்டாம். சிறப்பான நிர்வாகம்.திருநள்ளாறு மிகவும் சிறிய ஊரானாலும் நன்றாக வசதிகள் உள்ளன.
மோசமான நிர்வாகத்தில் தமிழக கோவில்கள் என்றால் பழனி,திருச்செந்தூர் ,ராமேஸ்வரம் ஸ்ரீ ரங்கம் ஆகியன உதாரணம். அரசின் தலையீடு மிகவும் அதிகம். தனியார்கள் கோவில் நிர்வாகத்தில் குறுக்கிடுகிறார்கள். சுகி சிவம் கர்நாடக கோவில்களுக்கு சென்றாரா என்ற
சந்தேகம் உள்ளது. தமிழ்நாட்டில் உண்டியல் பணம் கொள்ளை போகிறது. குத்தகை ஒழுங்காக வசூல் செய்வதில்லை. பக்தர்கள் தங்குவதற்கு தரும் விடுதிகள் மோசமாக பராமரிக்க படுகின்றன.
சுகி சிவம் மந்த்ராலயா (ஆந்திர மாநிலம் ), மற்றும் கர்நாடக கோவில்களுக்கு சென்று வந்த பிறகு
பேசட்டும்.
திமுக உறுப்பினர் சுகி சிவம், ஏன் பழனி தண்டாயுதபாணி மண்டலாபிஷேகம் 48 நாட்களுக்குப் பதிலாக 3 நாட்களில் முடித்துக்கொள்ளவேண்டும் என்று அரசைக் கேட்டாரா? பொதுநல அவசர வழக்காக ஒருவர் நீதிமன்றத்திற்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றபோது, 28ம் தேதி, உயர்நீதிமன்றம், 48வது நாளில்தான் மண்டலாபிஷேகம் நடத்தணும் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது. இந்து கோயில் நடைமுறைகளில் இஷ்டப்படி மாற்றங்கள் செய்ய அறமற்ற துறைக்கு யார் அனுமதி கொடுத்தது? இந்த விஷயத்தைப் பற்றி சுகி சிவம் வாயைத் திறந்தாரா இல்லை ஊடகங்களில் இது விரிவாக விவாதிக்கப்பட்டதா?
ரம்ஜான் இனி டிசம்பர் 25ல்தான் கொண்டாடவேண்டும், அதுவும் 2 மணி நேரம்தான் என்று அரசு மூக்கை நுழைக்கமுடியுமா? இல்லை, கிறித்து டிசம்பர் 25ல் பிறந்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை, அதனால் ஃபெப்ருவரி 10ம்தேதிதான் அரசு கிறிஸ்துமஸ் விடுமுறை விடும் என்று அறிக்கை கொடுக்கமுடியுமா?
சமயங்களைப் பற்றிய தெளிவும், கோயில்கள் மற்றும் அவைகளின் நடைமுறைகளைப்பற்றிய அறிவும் சுகி சிவத்திற்கு இருந்திருந்தால், அண்ணாமலையைக் கேள்வி கேட்டிருக்கமாட்டார்.
ஒரு பதவி, அது தரும் பணம், எப்படி துரோகிகளை உருவாக்குகிறது பாருங்கள். சுகி சிவம், பொருளாதாரப்புளி ஜெயரஞ்சன் என்று பெரிய லிஸ்ட் இருக்கிறது.