….எடப்பாடி’க்கு இருக்கும் “தில்” -பாஜகவுக்கு இல்லையா …???

…………………………..

குறைந்த இடைவெளிக்குள், தொடர்ந்து –
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை,

முதலில் எடப்பாடி அவர்களும்,
பிறகு ஓ.பி.எஸ். அவர்களும்,

சந்தித்திருக்கின்றனர்.

எடப்பாடி – நாங்கள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது
என்று முடிவு செய்திருக்கிறோம்…… பாஜக அதற்கு ஆதரவு
தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்….

(ஆக, அவர் செய்து விட்ட முடிவிற்கு பாஜக -வின் ஆதரவை
கேட்டிருக்கிறார்….. ) பாஜக ஆதரவு தந்தாலும், தரா விட்டாலும் –
அவர் எடுத்த முடிவு – முடிவு தான்….!!!

ஆக, நீங்கள் ஆதரிக்கிறீர்களா – இல்லையா என்பது
குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்று சொல்லாமல் சொல்கிறார்….

ஆனால், ஓபிஎஸ் அவர்கள், தாங்கள் ஈரோடு தேர்தலில்
போட்டியிட உத்தேசித்துள்ளதாகவும்,
ஒருவேளை- பாஜக போட்டியிட விரும்பினால், நாங்கள் விட்டுத்தந்து,
ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்றும் கூறி இருக்கிறார்….

பாஜக என்ன முடிவெடுக்கப் போகிறது….?

பாஜக ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்
நாங்கள் போட்டியிடுவோம் என்று வெளிப்படையாக அறிவிக்கும்
எடப்பாடியின் துணிச்சல் பாஜகவுக்கு ஏன் இல்லை….?

காங்கிரஸ் கட்சி, திமுகவின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றது என்று சொல்லும் தகுதி, எடப்பாடியின் காலடியில் விழுந்து கிடந்தால் பாஜகவுக்கு எப்படி கிடைக்கும்…..?

ஒரு தேசிய கட்சிக்கு இதைவிட வேறு அவமானம் உண்டா….?

வெட்கமின்றி, மூஞ்சியை துடைத்துக்கொண்டு,
எடப்பாடிக்கு ஆதரவு என்று பாஜக அறிவிக்கப்போகிறதா ….?

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to ….எடப்பாடி’க்கு இருக்கும் “தில்” -பாஜகவுக்கு இல்லையா …???

 1. bandhu சொல்கிறார்:

  இதில் தேசிய கட்சி, காலில் விழுந்து கிடப்பது என்றெல்லாம் பார்க்காமல், பிஜேபி போட்டியிட இது சரியான சமயம் என்று நினைத்தால் போட்டியிடும், இல்லையேல் ஆதரவு என்று தங்களுக்கு சாதகமான நிலையையே எடுப்பார்கள். வெற்று ஈகோ பார்க்கமாட்டார்கள் என நினைக்கிறேன்!

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .
  bandhu,

  நான் சொன்னது –

  // காங்கிரஸ் கட்சி, திமுகவின் காலடியில்
  வீழ்ந்து கிடக்கின்றது என்று சொல்லும் தகுதி,

  – எடப்பாடியின் காலடியில் விழுந்து கிடந்தால்
  பாஜகவுக்கு எப்படி கிடைக்கும்…..? //

  நீங்கள் இந்த கோணத்தை (வேண்டுமென்றே)
  தவிர்க்கிறீர்களென்று நினைக்கிறேன்.

  பாஜக தனக்கு லாபமானதை செய்கிறது –
  ( அதற்காக, தன்மானத்தை விட்டுக்கொடுக்கிறது )
  என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

  காங்கிரசும் அதையே தானே,
  திமுக கூட்டணி தேவை என்று கருதி செய்கிறது…..?

  இரண்டுக்கும் என்ன வித்தியாசம்…..?

  இந்த லட்சணத்தில், காங்கிரசை குறை சொல்ல
  பாஜகவுக்கு ஏது தகுதி என்று நான் கேட்பதில்
  என்ன தவறு ….???

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • bandhu சொல்கிறார்:

   கேட்பதில் எந்த தவறும் இல்லை. இந்த விஷயத்தில் இரு கட்சிகளுக்கும் இடையில் ஒரு வித்யாசம். காங்கிரஸ் எத்தனை வருடங்கள் ஆனாலும், தனியாக கட்சியை வளர்க்கவேண்டும் என்று நினைக்கவில்லை. பிஜேபி நினைக்கிறது. இந்த இடை தேர்தலில் நிற்பதனால் தனக்கு ஏதாவது ஆதாயம் இருக்கும் என்று நினைத்தால் பிஜேபி நிற்கும். இல்லையேல் நிற்காது. அதன் முடிவு, மற்றவர் என்ன நினைப்பார்கள் என்பதில் இல்லை என்று நினைக்கிறேன்

 3. புதியவன் சொல்கிறார்:

  //நாங்கள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்திருக்கிறோம்…… பாஜக அதற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்// – இதுவரை அதிமுக யாரிடமாவது அப்படிக் கேட்டிருக்கிறதா? அதிலும் தேசியக் கட்சியிடம்? இதுவே அண்ணாமலையின் மிகப்பெரிய வெற்றியல்லவா?

  //ஓபிஎஸ் அவர்கள், தாங்கள் ஈரோடு தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளதாகவும், ஒருவேளை- பாஜக போட்டியிட விரும்பினால்,// – இவரை மாதிரி பச்சோந்தியை, சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்பவரை, எம்ஜிஆர் ஜெ வளர்த்த கட்சிக்கு, தன்னை முதலமைச்சராக நிறுத்தியவர்களுக்கு துரோகம் செய்பவரை நான் அரசியலில் கண்டதில்லை. அவ்வளவு வெளிப்படையாக சாதி அரசியல் மற்றும் சொந்தக் கட்சிக்கே பள்ளம் தோண்டுபவரை, அடுத்த கட்சியின் கொத்தடிமையை எவ்வளவு குறை கூறினாலும் தகும். அதிமுகவைத் தோல்வியுறச் செய்து, திமுக வெற்றிக்கு உழைத்தவருக்கு காலம், அவருக்கு உரிய இடத்தைக் காட்டும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.

  //எடப்பாடியின் காலடியில் விழுந்து கிடந்தால் பாஜகவுக்கு எப்படி கிடைக்கும்…..?// – எடப்பாடியின் காலடியில் பாஜக விழுந்துகிடப்பதாக எதை வைத்துச் சொல்கிறீர்கள்? ஒரு உதாரணம் சொல்லுங்கள். ‘தன் மானத்தை அண்ணாமலை எங்கு விட்டுத் தந்திருக்கிறார்’? என் அநுமானம் (தவறா இருக்க வாய்ப்பு இருக்கிறது, ஏனென்றால் ஆளும் கட்சி, துக்கத்திற்காக ஓட்டளிக்கும் மக்கள் என்ற சாதகத்தை மீறி, ஒருவேளை, காங்கிரஸ் 35, அதிமுக 25, பாஜக 15 என்று வாக்கு பெற்றுவிட்டால் (5 சதம் குறைத்து அல்லது கூட்டிக்கொள்ளலாம்) யாருக்கு நஷ்டம்? அதிமுக மற்றும் பாஜகவுக்குத்தானே. அல்லது அண்ணாமலை, பாதயாத்திரை, தோல்விக்குப் பிறகு ஆரம்பிப்பது சரியான முடிவாக இருக்காது என்று நினைக்கலாம்.

  //காலடியில் விழுந்துகிடப்பது// – இதற்கு அர்த்தம்… திமுக சும்மா இருப்பது போல இருந்து, திமுகவிற்கு மேலாக வாங்கின காசுக்குக் கூவுகிறார்களே கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், திருமா போன்றவர்கள். அது ‘காலடியில் விழுந்து கிடப்பது’. என்னுடைய கட்சிச் சின்னம் வேஸ்ட், நான் கட்சி நடத்துவதே வேஸ்ட். உன் சின்னத்தில் நிற்கிறேன் என்று சொல்லி நிற்கிறார்களே விசிக, மதிமுக போன்ற பல கட்சிகள்..அதற்குப் பெயர் காலடியில் விழுந்துகிடப்பது. எனக்கு சீட் குறைத்துக் கொடுத்தாலும் பரவாயில்லை, அன்றாடம் காய்ச்சிகளுக்காக உழைக்கும் என் கட்சிக்கு கோடிகளில் பணம் கொடு, நீ எப்படி ஆடச் சொன்னாலும் அதைவிட நன்றாக ஆடிக்காண்பிக்கிறேன் என்று சொல்கிறார்களே, அந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்வது ‘காலில் விழுந்துகிடப்பது’. இவர்களுக்கு லீலாவதி போன்றவர்களின் இறப்பு முக்கியமில்லை. ஒருவேளை பாஜக 30 கோடி கொடுக்கிறேன் என்று சொன்னால், பாஜகவிற்கு சலாம் போடவும் இந்த கம்யூனிஸ்டுகள் தயங்கமாட்டார்கள்.

  தனிப்பட்ட முறையில், பாஜக, அதிமுக தனித்தனியாக நின்றிருக்க வேண்டும். பாஜக, அதிமுகவின் பிரிவுகளின் ஆதரவை எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்போதுதான் அவர்களின் செல்வாக்கு தெரியும். ஆனால் எதிரில், எல்லாக் கட்சிகளையும் கூட்டணியாகக் கொண்டு திமுக நிற்கிறது. அதனால் அப்படி தனியாக நிற்பது சரியாக இருக்காது என்று பாஜக நினைத்திருக்கலாம்.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .
  ஒரிஜினல் பாஜஜ-காரரை விடவும்
  அதிகமாகவே கூவுவது, திமுக-காரரை
  விட அதிகமாக கூவும் வீரமணி அவர்களை
  நினைவுபடுத்துகிறது…

  ராஜாவுக்கு மிஞ்சிய ராஜவிசுவாசம்
  என்பது இது தானோ……………. 😀😀😀

  • புதியவன் சொல்கிறார்:

   ஆஹா… என்னை பாஜக என்றே நினைத்துவிட்டீர்களா? அதிமுக நிலையை எண்ணி வருத்தப்படுகிறேன். ஆனால் அண்ணாமலை, அதிமுக காலடியில் இருப்பதாக நம்பவில்லை.

   அது சரி… கி வீரமணி, திமுக அதிமுக ஆண்டபோது அவர்களுக்கு அளவுக்கதிகமாக ஜால்ரா அடிப்பாரே… கருணாநிதிக்குப் பட்டங்கள் கொடுக்காமல் சமூக நீதி காத்த வீராங்கனையைப் புகழ்ந்தவரல்லவா அவர்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.