…………………………………..

………
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நியமன சர்ச்சை குறித்து,
உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து செய்தித்தாள்களில்
இன்று வெளியாகியுள்ளது.
செய்தியின் முக்கியத்துவம் கருதி, வாசக நண்பர்கள் படிக்க
வேண்டும் என்று கீழே அப்படியே தரப்பட்டுள்ளது… (இப்போதைக்கு
இதில் என் விமரிசனம் எதுவுமில்லை….)
……………………………………………
SC Collegium reiterates appointment of
advocate as HC judge …
…………….
The Supreme Court Collegium headed by
Chief Justice of India D Y Chandrachud has
reiterated its recommendation for the elevation
of advocate R John Sathyan as a judge of Madras
High Court, overruling the central government’s objection on the ground that he had shared an
article critical of the Prime Minister.
The Collegium also comprising Justices Sanjay
Kishan Kaul and K M Joseph said that all the
consultee-judges at the relevant time, viz
Justices Kaul, Justice Indira Banerjee, Justice
V Ramasubramanian and Justice M M Sundresh had
found him suitable for elevation.
A statement by the Collegium cited an intelligence bureau (IB) report, which said: “As per open
sources, two posts made by him, i e, sharing of
an article published in ‘The Quint’, which was
critical of the Prime Minister, Narendra Modi;
- and another post regarding committing of suicide
by medical aspirant Anitha, who ended her life
in 2017 since she was unable to clear NEET,
portraying it as a killing by ‘political betrayal’
and a tag stating ‘shame of you India’ came to
notice.”
The Collegium said all the consultee judges had
a favourable opinion about the suitability of
Sathyan.
“The Intelligence Bureau has reported that he
enjoys a good personal and professional image and
that nothing adverse has come to notice against
his integrity. Sathyan belongs to the Christian community. The IB report notes that he does not
have any overt political leanings,” the statement
said.
It further added that in this backdrop, the
adverse comments of the IB in respect of posts
made by Sathyan i.e. sharing an article published
in ‘The Quint’ and another post regarding
committing of suicide by a medical aspirant
candidate in 2017 will not impinge on the
suitability, character or integrity of Sathyan.
The Collegium reiterated its recommendation of
February 16, 2022, for the appointment of Sathyan
as Judge of the Madras High Court. The Collegium
further recommends that he be given precedence
in the matter of appointment as judge over
certain names separately recommended on January 17, 2023, for appointment as judges in the Madras High Court.
.
……………………………………………….
இந்த செய்திக்கு விமரிசனம் வேண்டாமென்று தான்
நினைத்தேன்…
ஆனால், சில நண்பர்களுக்கு, இதன் பின்னணி மற்றும்
முக்கியத்துவம் புரியவில்லை என்று தெரிகிறது….
எனவே, ஒரு சின்ன க்ளூ மட்டும் தருகிறேன்….
மீண்டும் படித்துப் பாருங்கள் – முக்கியத்துவம் தெரிய வரும்….!!!
க்ளூ – அந்தந்த மாநிலத்தில் இருக்கும் உயர்நீதிமன்றங்களுக்கு
ஜட்ஜுகளை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்,
மாநில முதலமைச்சர்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு….!!!
(வெளிப்படையாக பார்த்தால், இது தெரியாது….!!!)
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
எனக்கு ஒரு சந்தேகம்! . நேரடியாக உயர்நீதிமன்ற/ உச்சநீதிர்மன்ற கோர்ட் ஜட்ஜ் பதவிக்கு என்று ஒரு படிப்பை/தேர்வை (IAS போல்) ஏற்படுத்தினால் என்ன. ஒருவர் வக்கீலாக பணிபுரிந்து பின்னர் (ரெகமெண்ட் செய்யப்பட்டு) தான் ஜட்ஜ் ஆக வேண்டும் என்பது ஏன்
.
சேந்தன் அமுதன்,
உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.
ஜட்ஜுகளாக நியமனம் பெறுவதற்கு, ஏற்கெனவே,
அடிமட்டத்தில், தேர்வுகள் உண்டு. (Indian Judicial
Service Examination ) UPSC-தான் அதற்கான
தேர்வுகளையும் நடத்துகிறது…. சட்டம் படித்தவர்கள்
மட்டுமே அதில் பங்கு கொள்ளலாம். மாநில அளவில்
அடிமட்ட அளவில் அவர்கள் நியமிக்கப்பட்டு, படிப்படியாக
பதவி உயர்வின் மூலம் ஹைகோர்ட் வரை வருகிறார்கள்.
ஆனால், ஹைகோர்ட் மட்டத்தில் மட்டும், இந்த தேர்வில்
பங்கு கொள்ளாதவர்கள் கூட, ஆனால் 10 வருடங்களுக்கு
மேலாக வழக்கறிஞராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள்
நேரடியாக ஜட்ஜுகளாக நியமிக்கப்பட தகுதி
உடையவர்களாகிறார்கள்.
இந்த மட்டத்தில் தான் அரசியல் புகுந்து கொள்கிறது….
அவ்வப்போது ஆளுகிற கட்சியின் ஆதரவு உள்ளவர்கள்,
ஜட்ஜுகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Receipt இல்லாத வருமானம் எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கங்கெல்லாம் தவறுகள் நிச்சயமாக நடக்கும்.
//இந்த மட்டத்தில் தான் அரசியல் புகுந்து கொள்கிறது….// – அரசியல்வாதிகளை நீதித்துறையில் அனுமதிக்கவிட்டது, அந்த நீதித் துறைதான். நீதித்துறை, இந்திய நாட்டின் பெருமிதத்துக்கு எதிராக நடந்துகொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் கொலீஜியத்துக்கு கடிவாளம் இட அரசு முனைகிறது. இதனை வரவேற்கவே செய்யணும்.
ஒரு வாட்சப் தகவலில், 200-300 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே உச்ச உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக ஆகின்றனர் என்று சொல்லியிருந்தார்கள்.
மத்திய அரசு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. அதுதான் நாட்டின் முகம். மற்ற துறைகளெல்லாம், இந்திய அரசின் உச்சபட்ச மன்றங்கள் இயற்றும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவையே.
/// மத்திய அரசு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. அதுதான் நாட்டின் முகம். மற்ற துறைகளெல்லாம், இந்திய அரசின் உச்சபட்ச மன்றங்கள் இயற்றும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவையே.///
இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது தானே –
” அரசியல் சாசனம் எழுதியவர்கள் எல்லாரும்
வடிகட்டிய முட்டாள்கள்….
துட்டு அல்லது சாராயம்
வாங்கிக்கொண்டு போதையில் ஓட்டுபோட்ட
உதவாக்கரைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான்
அனைத்தையும் விட உயர்ந்தது… “👌👌👌
—————————————————————–
அடியேனுக்கு ஒரு சின்ன சந்தேகம்…
அடுத்த தேர்தலில் பாஜக அல்லாத ஒரு அரசு
அமைந்து விட்டால் அப்போதும் நீங்கள்
இதையே சொல்வீர்களா…. ???
அல்லது அப்போது நாட்டாமை தீர்ப்பை
மாற்றி விடுவாரா … ???
.
அரசியல் சாசனங்கள் எழுதியவர்கள் வடிகட்டிய முட்டாள்கள் – னு நான் சொல்லமாட்டேன். ஆனால் வாக்களிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உதவாக்கறைகள். இல்லைனா, இட ஒதுக்கீடு சில வருடங்கள்தாம் இருக்கணும்னு சொன்ன அம்பேத்காரையே, உனக்கு என்ன தெரியும்? நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னவர்களல்லவா இவர்கள்?
// ஆனால் வாக்களிப்பவர்களில்
பெரும்பாலானவர்கள் உதவாக்கறைகள். //
// மத்திய அரசு என்பது மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.
அதுதான் நாட்டின் முகம்.
மற்ற துறைகளெல்லாம், இந்திய அரசின்
உச்சபட்ச மன்றங்கள் இயற்றும் சட்டங்களுக்குக்
கட்டுப்பட்டவையே //
– ஆக, உதவாக்கறைகளால்
தேர்ந்தெடுக்கப்பட்டது தான் மத்திய அரசு….
ஆனால், அது தான் நாட்டின் முகம்..
அது சொல்வது தான் சட்டம் …
மற்ற அமைப்புகள் அனைத்தும்
அதற்கு கட்டுப்பட்டவையே என்கிறீர்கள்…
பேஷ்….பேஷ்….!!!
..
காங்கிரஸ் சார்பானவர்கள் நீதி மற்றும் பல்வேறு துறைகளில் பல்கிப் பெருகி, நீதி நேர்மை நியாயத்தை வளைத்துவிட்டனர். பாஜகவும் அப்படி நடந்துகொண்டு தங்கள் சார்பானவர்களை அந்த அந்த இடங்களுக்குக் கொண்டுவரட்டுமே… அப்படியாவது தேசபக்தி உள்ளவர்கள் பெருகட்டுமே…
காலையில் ஜால்ரா சப்தம் ரொம்ப அதிகமாகிவிட்டதோ?
// அப்படியாவது தேசபக்தி உள்ளவர்கள் பெருகட்டுமே…//
மீண்டும் மீண்டும் வீரமணி என்பதை நிரூபிப்பதாகத்
தெரிகிறது….
“பாஜக-வுக்கு எதிராக
பேசுபவர்கள் எல்லாருமே
தேசபக்தி இல்லாதவர்கள்” –
பாஜக சொல்லி வரும் அதே கருத்தைத் தானே
இப்போது நீங்களும் சொல்கீறீர்கள்…?