…………………………….

……………………………..
குமுதத்தில் அண்ணாமலை அவர்களின் பேட்டியின் முதல் பகுதி, நேற்று காலை விமரிசனத்தில், இடுகையாக – வெளியாகி இருக்கிறது….
இப்போது 2-வது பகுதியும்
வெளியாகி இருக்கிறது…. கீழே –
பாவம், தயாரிப்பு எதுவும் இல்லாமல் வந்திருப்பாரோ என்று முதல் பகுதியை பார்த்தபோது நினைத்திருப்போம். ஆனால், கடைசி 4-5 நிமிடங்களை பார்க்கும்போது தெரிகிறது – இவர்களை ஓட விடுவது என்கிற முடிவோடு தான் வந்திருக்கிறாரென்று….!!!
…………………………………………………..
வீடியோவுக்கு அவர்கள் வைத்திருக்கும் தலைப்பு –
” DMK எதிர்ப்பு என் ரத்தத்துல கலந்துருக்கு | அண்ணாமலை
ஆவேச பேச்சு | BJP State President | Part 2 “
ஆனால், நாம் தலப்பு போட்டிருந்தால் அது எப்படி இருந்திருக்கும்….?
” கில்லாடிக்கு கில்லாடி ….”
” ஓண்ணரை மணி நேரம் ஓனக்காக செலவழிச்சிருக்கேன். மரியாதையா – வெட்டி-ஒட்டும் வேலையையெல்லாம் விட்டு விட்டு, முழு பேட்டியையும் வெளியிடு…. இல்ல – நடக்கறதே வேற… மிரட்டுகிறார் மலை….!!!
………………………………………………………………………………………
.
………………………………………………………………………………………………………………………………….
//” ஓண்ணரை மணி நேரம் ஓனக்காக செலவழிச்சிருக்கேன். மரியாதையா – வெட்டி-ஒட்டும் வேலையையெல்லாம் விட்டு விட்டு, முழு பேட்டியையும் வெளியிடு…. இல்ல – நடக்கறதே வேற… மிரட்டுகிறார் மலை….!!!//
காரணம் இளையராஜா சுத்திச் சுத்தி ஏதோ காரணத்துக்காக கேள்விகள் கேட்டதுதான். The moment he realized, this is another paid person, Annamalai showed his face. இப்படித்தான் எனக்கு நினைக்கத் தோணுது.
கேள்விகளுக்கு நல்லாவே பதில் சொல்லியிருக்கார் அண்ணாமலை. பாராட்டவேண்டியதுதான்.
அண்ணாமலைக்கும், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சி தலைவர்களுக்கும் வித்தியாசம், காங்கிரஸ் கட்சில அடிமைகளாகத்தான் இருப்பதால், அதைத் தாண்டி எதையுமே அவர்களால் பேசமுடியாது. தலைவனின் குடும்பம் பில்லியன்களில் கொள்ளையடித்துள்ளதால், தாங்களும் ஒரு ரேஞ்சுக்கு பணம் தேற்றிவிடுகின்றனர், ப.சி குடும்பம் உட்பட. அதனால் அவர்களால் நேர்மையாகப் பேச முடியாது, நேர்மையாக பேட்டிகளை எதிர்கொள்ள முடியாது.
From a different perceptive..if I run a party, I will be very careful to give position to persons like Annamalai, who have ethics and to some extent வெளிப்படைத் தன்மை. இப்படி ரொம்பவே வெளிப்படைத் தன்மையோடு இருப்பதால் சிக்கல்கள் வரும். and to some extent, Annamalai like persons will grow beyond the party. If I were in Annamalai’s postion, கவர்னர் தமிழ்நாடு, தமிழகம் என்ற பிரச்சனை கொண்டுவருகிறாரே என்ற கேள்விக்கு, ‘இரண்டுக்கும் என்ன வேறுபாடு? இரண்டுமே ஒரே அர்த்தம்தானே. நீங்களும் தமிழக அமைச்சர்னு சொல்றீங்க, கருணாநிதி சமாதில தமிழகம்னுதான் எழுதியிருக்கீங்க. ஆரம்பத்துல மத்திய அரசிடம் ‘தமிழகம்’னு பெயர் வைக்கணும்னு நீங்க சொன்னதுக்கு, அந்த வார்த்தை வடநாட்டவர்கள் வாயில் சரியாக நுழையாது அதனால் தமிழ்நாடு என்று இருக்கட்டும் என்று அவங்க சொன்னப்பறம்தானே தமிழ்நாடுன்னு பெயர் வச்சிருக்கீங்க. அதனால இரண்டுமே ஒன்றுதான்னு சொல்லியிருப்பேன். ஆனால் அண்ணாமல, ‘கவர்னரின் அந்தச் சர்ச்சை தேவையற்றது’ன்னு சொன்னார். (ஒருவேளை அவர் பாஜக தலைமைப் பீடத்தின் குரலை வெளிப்படுத்தியிருக்கலாம்.. எனக்குத் தெரியாது.).
அண்ணாமலையின் வெளிப்படைத் தன்மை, ஆணித்தரமான வாதங்கள், தைரியம், எளிமை போன்றவற்றைப் பாராட்டுகிறேன். காமராஜரையே பின்னங்காலில் பிடறிபட விரட்டியவர்களான, கொள்ளையர்களை தலைக்கு மேல் கொண்டாடுபவர்களான, ஊழல்வாதிகளை மாற்றமுடியாது அதனால் நாமே ஊழல்வாதிகளாக மாறிவிடுவோம் என்று நினைப்பவர்களான தமிழர்கள், இவருக்கு என்ன வைத்திருப்பார்கள் என்று யோசிக்கிறேன்.
வாட்ச் விஷயத்திற்கும் அண்ணாமலை, தான் வேண்டுமென்றேதான் இந்தச் சர்ச்சையை வளரவிட்டதாகவும், அதனால்தான் அதிக மக்களுக்கு கஞ்சிக்கு வக்கில்லாதவர்கள் 14கோடி வாட்ச் கட்டுவதும், அரசுப் பதவியில் இருந்துகொண்டு 3 கோடி வாட்ச் கட்டுவதும் பலருக்குப் போய்ச்சேர்ந்திருக்கிறது என்கிறார். ரொம்பவே carefulஆகவும் திட்டத்துடனும்தான் அவர் செயல்படுகிறார் என்று தோன்றுகிறது.
நிருபர்கள் பேட்டியில் (ஊடக செய்தியாளர்கள் சந்திப்பில்) அவர் அளவிற்கு மரியாதையாகவும், அதே நேரத்தில் substanceஉடனும் பேசுபவர்களை நான் இதுவரை கண்டதில்லை. இந்த நிருபர்கள் (பெரும்பாலானவர்கள், கட்சி சார்பு கொண்டவர்கள்), ஏமாந்தவனென்றால் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், அதிகாரத்தில் இருப்பவர்களென்றால் பூட்ஸ் காலைத் துடைத்துவிட்டுப் பம்மலாம் என்ற attitudeஉடன் இருக்கின்றனர். விஜயகாந்தும் முழு ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால், இரண்டு பக்கங்களிலும் இவர்களுக்கு ரிவிட் கிடைத்திருக்கும்.
முதல் பாதியில் சற்று அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு மாறாக இரண்டாவது பகுதி மெதுவாக ரபேல் வாட்ச் மற்றும் காயத்ரி ரகுராம் அவர்களின் பக்கம் நகர்ந்து அண்ணாமலையை சீண்டிப் பார்க்கும் வகையில் அமைந்ததை திறம்பட கையாண்டார். குரங்கு போல தாவுரீங்க, புதிய தலைமுறை சேனலுடனான சர்ச்சை போன்றவை ஊதி பெரிதாக்கப்பட்ட அளவிற்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் மேடைப்பேச்சு தமிழக ஊடகங்களால் பேசப்படாததை கவனிப்போருக்கு புரியும் குமுதம் இதழ் உடனான நேர்காணலில் அண்ணாமலையின் நேரடி எச்சரிக்கை.
இனியாவது தமிழக ஊடகங்கள் அண்ணாமலையுடனான நேர்காணலின்போது ஆக்கபூர்வமான அறிவுப்பூர்வமான கேள்விகளால் அவரை திணறடிக்க முயல வேண்டும் அதை விடுத்து மலின விளம்பரத்திற்கு அவரது வாயைக் கிளறி வாங்கிக் கட்டிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளலாம்.
அருமை…..
பேட்டியின் இறுதிப்பகுதிகள் எனக்கு மயிர் கூச்செரிய வைத்தன….
என்னே வீரம், என்னே தீரம்…
நேரடி மிரட்டல்…கடைசியில் ஆனானப்பட்ட குமுதமே பம்முவது, சிரிப்பை தான் வரவழைத்தது ….
அண்ணாமலை,பாண்டே போன்ற வரலாறு,சரித்திரம், சட்ட அறிவு , current events, data ஞானம் உள்ளவர்களை பேட்டியெடுப்பதற்கு தகுந்த ஆட்கள் இல்லை என்பது கண்கூடு…
இப்பொழுது உள்ள youtube பேட்டியாளர்கள் அனைவரும் , எளிதில் உணர்ச்சிவசப்படும் H .RAJA , அர்ஜுன் சம்பத் போன்றவர்களிடம் உணர்ச்சிகளை தூண்டி பேட்டி எடுத்து அவர்களை வைத்து தங்கள் youtube channel யை நடத்தி கொண்டிருக்கிறாரகள்.
பேட்டி எடுத்தவர் ஓரளவு நன்றாகவே அண்ணாமலையை சமாளித்திருக்கிறார், என்றே கருதுகிறேன் ..
அருமையான interview ..