திடீர் பரபரப்பு -முதல்வர் மீதே லஞ்ச ஊழல் பிரிவில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர் …

………………………………………………..

…………………………………………………

லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையின் வாசலில்
நின்று கொண்டு சவுக்கு சங்கர் சற்று முன்
கொடுத்த பரபரப்பான பேட்டி கீழே….

தமிழகம் ஒரு வித்தியாசமான சூழ்நிலையை
சந்தித்துக் கொண்டிருக்கிறது …..

Savukku Shankar Files Corruption Complaint
against Cm mk stalin at DVAC –

……………….

.
…………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to திடீர் பரபரப்பு -முதல்வர் மீதே லஞ்ச ஊழல் பிரிவில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர் …

  1. vgchandrasekaran சொல்கிறார்:

    தற்போதைய சூழ்நிலையில் திரு சவுக்கு சங்கர் போன்றோரை ஒரு அரசியல் பரபரப்பு நெருப்பை பற்ற வைக்கும் தீக்குச்சியாக் தான் பார்க்க முடியுமே தவிர வேறு விதத்தில் பார்க்க இயலாது. ஸ்டாலின் மேல் சுமத்தப்படும் லஞ்ச ஊழல் வழக்கு என்பது சமூக ஊடகங்களுக்கு ஓரிரு நாட்களுக்கான தீனியாக இருக்குமே தவிர வேறு ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை.சவுக்கு பிஜேபியின் செயல் திட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளார் என்ற ஊடகங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ஊழல் குற்றச்சாட்டு. ஆளுநரை சந்திப்பாரா நீதிமன்றம் செல்வாரா இல்லை வழக்கம் போல் பெரிய கோட்டினை சிறிதாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மட்டுமே போய்விடுமா என்பதை காலம் முடிவு செய்யும். பொறுத்திருந்துதான் பார்ப்போமே..

  2. புதியவன் சொல்கிறார்:

    1. சவுக்கு சங்கர், திமுக எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார். அரசு, அவரை அவரது வேலையிலேயே விட்டுவைத்திருந்தால், இந்தப் புதிய தலைவலி வந்திருக்காது. அவரும் பொது விஷயங்களைப் பற்றிய தன் எதிர்ப்பைப் பதிவு செய்துகொண்டிருப்பதைத் தொடர்ந்திருப்பார் அல்லது அரசு வேலை என்பதால் எதையும் செய்யாமல் இருந்திருப்பார்.

    2. சவுக்கு சங்கரின் பின்னணி என்ன, ஏன் இதைச் செய்கிறார் என்றெல்லாம் ஆராய்வதை விட்டுவிட்டு, அவர் சொன்ன இந்தக் குற்றச் சாட்டுகளில் உண்மை இருக்கிறதா என்று மாத்திரம் ஆராயவேண்டும்.

    3. அரசு இயந்திரம், ஆளும் கட்சியின் ஏவல் துறையாக ஆகிவிட்டது. திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசியல் பதவிகளில் உள்ளவர்கள் செய்யும் எந்தத் தவறையும் காவல்துறை கண்டுகொள்வதில்லை. அதே சமயம் திமுக எதிர்ப்பாளர்களின் எந்தச் சிறு குரலையும் அடக்குவது மட்டுமல்ல, பயங்கரமான செக்‌ஷன்களில் வழக்கு பதிந்து உடனே சிறையில் அடைக்கிறது. பத்திரிகைச் சுதந்திரத்திற்காகப் போராட்டங்கள் நடத்திய போலிகள் (வைகோ, திருமா, திருமுருகன், உதயசங்கர், கனிமொழி, ஊடகங்கள்…..என்று மிகப் பெரிய லிஸ்ட்) தற்போதைய அடக்குமுறை ஆட்சியில் வாய்பொத்தி கொத்தடிமைகளாக இருக்கின்றனர். பயங்கரவாதச் செயலை, சிலிண்டர் வெடித்தது, கார் விபத்து என்று ரிப்போர்ட் செய்வதாகட்டும், கொலைகாரர்களைப் பாதுகாப்பதிலாகட்டும் (உதாரணம் திமுக எம்பி), தலைவர்களுக்கு கொலைமிரட்டல் விடும் திமுக பயங்கரவாதிகளாகட்டும், காவல்துறை அதிகாரிக்கே பாலியல் தொந்தரவை வெளிப்படையாகச் செய்த திமுக நிர்வாகிகளாகட்டும், சாதீய வன்கொடுமை செய்த அமைச்சர்களாகட்டும் யாரையுமே காவல்துறை எந்த வழக்கையும் பதிவு செய்யாமல் பாதுகாக்கிறது. அதனால் காவல்துறை செயலிழந்துவிட்டது என்று சவுக்கு சங்கர் குற்றம் சாட்டுவதில் உண்மை இருக்கிறது. ஏன் கவர்னர் கொடுத்த குற்றச்சாட்டையே கண்டுகொள்ளாமல் விடும் அளவு காவல்துறை அதிகாரிகள் திமுக கட்சியைச் சார்ந்தவர்கள் போலச் செயல்படுகின்றனர் என்று சவுக்கு சங்கர் பல்வேறு தளங்களில் குற்றம் சாட்டுவதில் உண்மை உண்டு.

    திமுக அரசு அமைந்ததிலிருந்து பல ஊழல் குற்றச்சாட்டுகள், நில அபகரிப்புகள், திமுகவின் தலைமையின் குடும்பத்தின் அபார வளர்ச்சி, அரசு இயந்திரம் முழுவதும் அவர்கள் குடும்பத்திற்காகவே செயல்படுவது என்று நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. பொதுமக்களின் ரெப்ரெசெண்டேடிவ் என்ற முறையில் சவுக்கு சங்கர் கவர்னர் மற்றும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டும். அரசியல் கட்சிகளும் சவுக்கு சங்கர் போன்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். விலைபோன ஊடகவியலாளர்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.