
துபாய்-ல் பணத்திற்கென்ன குறைச்சல்….
எல்லாருமே வசதியாகத் தானே இருப்பார்கள் என்று
பொதுவாக நினைக்கத் தோன்றும். அந்தக் கருத்து மாற்றிக்கொள்ளப்பட
வேண்டும்.
இங்கிருந்து அங்கே போய் சம்பாதிப்பவர்களில்,
குறைந்த வருமானம் பெறும் பலர், தங்கள்
சம்பளப்பணத்தில் பெரும்பகுதியை, குடும்பத்திற்கு
அனுப்பி விட்டு, அங்கே அரைகுறையாக வயிற்றை
நிரப்பிக்கொள்ளும் சம்பவங்கள் உண்டு.
அத்தகையோரின் வயிற்றுப்பசியை தீர்க்க
இப்படி ஒரு வழி காணப்பட்டிருக்கிறது.
இதே ஏடிஎம்-ல் நிதியுதவி செய்ய விரும்புவோருக்கும்
வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நல்ல யோசனை…!!!
……………..
.
……………………………………………..
வெளிநாட்டவர்களில்தான், அடிமட்ட உழைப்பாளர்கள் நிறைய கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும். இது எந்த எந்த இடங்களில் வைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்த்த பிறகு, சில தினங்களில் இதைப்பற்றி எழுதுகிறேன். (யூஏஇ மட்டுமல்ல, பஹ்ரைன், ஓமன் என்று பல இடங்களில் ஏழைகள் உண்டு. ) அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் முடிந்தால் எழுதுகிறேன்.
புதியவன்,
உங்கள் பெரும்பாலான பின்னூட்டங்கள் எனக்கு
மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன… ( அவை சில சமயங்களில்,
என் இடுகைக்கு, என் கருத்துக்கு எதிராக கருத்துகளை தாங்கி இருந்தாலும் கூட….!!!)
உங்களுக்கு பரந்த அனுபவம் இருப்பதை என்னால் உணர முடிகிறது.
உலகின் பல பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறது.
வெளிநாடுகளில், பல வருடங்கள் பணிபுரிந்த அனுபவம்…
தொழில் முறையில் சென்ற நாடுகள்… சந்தித்த அனுபவங்கள்… ஆட்கள்.. என்று பல வகை; எதையும் தெரிந்துகொள்ள
வேண்டுமென்கிற உங்களது ஆர்வம் கூடுதல் ப்ளஸ்.
எனவே, உங்கள் அனுபவங்களை அவ்வப்போது பின்னூட்டங்களின் மூலம் எழுதுவதை நான் முழுமனதோடு வரவேற்கிறேன்….
என் இடுகைகள் பலவும் மற்றவர்களின் எண்ணங்களுக்கு இடம் கொடுக்கும் வகையிலேயே அமைவதை பார்க்கலாம்.
இத்தகைய பின்னூட்டங்கள், இந்த வலைத்தளத்திற்கு மேலும்
வலுவும், திறனும் சேர்க்கின்றன…( Value Addition… )
எழுதுங்கள்… நிறைய எழுதுங்கள்….
……………………………………………..
இதுபோல் இன்னும் சில நண்பர்களின் பின்னூட்டங்களும்
இடுகைக்கு மெருகூட்டுகின்றன….
உதாரணத்திற்கு நண்பர் BANDHU -வின் பின்னூட்டங்கள்..
அவர் அதிக அளவில் பின்னூட்டங்கள் போடுவதில்லை
என்றாலும் கூட…..எழுதுவதை, அக்கறையோடு எழுதுகிறார்….
– இதுபோல் இன்னும் சில நண்பர்களும் ….
நான் எல்லா வாசக நண்பர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
உற்சாகமாக, உங்களுக்கு தெரிந்ததை, நீங்கள் அறிந்ததை –
இங்கே பின்னூட்டங்களின் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தயக்கம் ஏதும் வேண்டாம்… எழுத எழுத -பழக்கம் வந்து விடும்.
அனுபவங்கள்- மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது தான்
முழுமை பெறுகின்றன….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கல்ஃப் தேசங்களைப் பற்றிய என் அனுபவம் மிகச் சுருக்கமாக.
1. Employee exploitation உண்டு. குறைந்த சம்பளம் வாங்குபவர்கள் ஏகப்பட்டபேர், கட்டிடத் தொழில், சுத்தம் சுகாதாரம், அடிமட்டப் பணியாளர்கள் என்று நிறைய துறைகளில் உண்டு. அரசு, முடிந்தவரை அவர்களின் தங்குமிடம், வேலை செய்யும் சூழல் போன்றவற்றை ஓரளவு கண்காணிக்கிறது. சில நாடுகளில், குறிப்பாக எமிரேட்ஸ் போன்றவைகள், தொழிலாளர்களுக்கு சம்பளப் பட்டுவாடா, தொழிலாளி விலகும்போது அவனது கம்பெனி அவனுக்குச் சேரவேண்டிய எல்லாவற்றையும் கொடுத்துவிட்டதா என்று கண்காணிக்கிறது. தொழிலாளர்களுக்குச் சார்பாகத்தான் அரசு செயல்படுகிறது. இதனை ஓரளவு உறுதியாக நான் சொல்லமுடியும் (UAEஐப் பொருத்தவரையில் இதுதான் நடைமுறை. பஹ்ரைனில் அப்படி இல்லை). நீதித் துறை நியாயமாக நடக்கிறது. சட்டதிட்டங்களை மதித்தோமானால் இந்த தேசங்கள் நமக்கு சுவர்க்கம்தான் (உதாரணமா அரசியலில் மூக்கை நுழைப்பதோ பேசுவதோ கூடாது. தேசத்தின் அரசர்களையோ அரச குடும்பங்களையோ எதையும் பேசக்கூடாது)
2. Exploitation – இதற்கு இரண்டு உதாரணங்கள். அலுவலகங்களைச் சுத்தம் செய்ய, அதற்குரிய கம்பெனிகளுக்கு contract கொடுத்துவிடுவார்கள். ஒவ்வொரு கம்பெனிக்கும் ஏகப்பட்ட அலுவலகங்கள், கடைகள் என்று பல இருக்கும். நான் இருந்த கம்பெனியில் 200 locations within the country உண்டு. அந்தக் கம்பெனி அதன் தொழிலாளர்களை எப்படி treat செய்கிறார்கள் என்பது இவர்களின் பிரச்சனை இல்லை. கொடுத்த வேலையை ஒழுங்காக அந்தக் கம்பெனி தொழிலாளர்கள் செய்யவேண்டும். Contract எடுத்த கம்பெனி, சம்பளம், சாப்பாடு, இருப்பிடம் தருகிறேன் என்று சொல்வார்கள். அதிக நேரம் வேலை வாங்குவார்கள், அவர்களின் லேபர் கேம்ப் அவ்வளவு சரியாக இருக்காது, உணவின் தரம் ஓகே என்ற அளவில்தான் இருக்கும், உணவுக்குப் பொறுப்பானவர்கள் தொழிலாளர்களை exploit செய்வார்கள் (உதாரணமா, முன்பு, எவ்வளவு வேணுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று இருந்ததை அளவுச் சாப்பாடு, இத்தனை சப்பாத்திகள் என்று restrict செய்வது). வேலை நேரம் அதிகமாக இருக்கும். சொன்னபடி கேட்கவில்லை என்றாலோ பிடிக்கவில்லை என்றாலோ உடனே கேன்சல் செய்து அனுப்புவது என்பது போல. இதையெல்லாம் சில தேசங்களில் எதிர்த்துக் கேட்கும் அளவு, அரசின் துறைகளில் வசதி இருக்காது. மிக உயர கட்டிடங்களில் வெளிப்புற cleaningக்கு இன்ஷ்யூரன்ஸ் போன்ற பல கட்டுப்பாடுகளை செயல்படுத்தமாட்டார்கள். மாதம் 7,000ரூ அதிகம் தருகிறேன், இந்த வேலையைச் செய், ஒருவேளை விபத்து ஏற்பட்டால் கம்பெனி பொறுப்பல்ல என்பதுபோலச் செயல்படுவார்கள்.
3. கஷ்டப்படும் தொழிலாளர்களில் இந்தியர்கள், பங்களாதேசிகள், பாகிஸ்தானியர்கள் அடக்கம் (காரணம், கல்ஃபில் இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் இந்த தேசங்களிலிருந்து அனேகம் பேர் அடிமட்ட வேலைக்கு வருகிறார்கள்). அவர்களுக்கு, இலவச உணவு என்பது மிகப் பெரிய உபயோகம். பஹ்ரைனில், அரசினால் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் கோதுமை மாவு, ரவா, கபூஸ் எனப்படும் இத்தகைய ரொட்டிகள், அதற்கான தொடுகறி என்று எனக்குத் தெரிந்து 30 வருடங்களுக்கு மேல் நடைமுறையில் இருக்கிறது. 5 ரொட்டி மொத்தம் 12 ரூபாய் விலையில். யார் வேணுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். கோதுமை மாவு கிலோ 9-18 ரூபாய் ரேஞ்சில். அதாவது 2010க்குப் பிறகு 18 ரூ ஆனது என்று நினைவு. பத்து வருடங்களுக்கு முன்பு வரை எந்தப் பொருளுமே விலை அதிகமாக ஆகி நான் பார்த்ததே . அதன் பிறகு 5 சதம் விலையேற்றம்.
4. தொழிலாளர்கள் இப்படி கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தை, அவர்களின் பெற்றோர் வீணாக்குவது, தொழிலாளர்களில் பலர், வேலை எப்போதும் இருக்கும் என்ற எண்ணத்தில் குடியில் ஈடுபடுவது என்ற அவலங்களும் உண்டு. கல்ஃப் வேலைக்காக, கந்துவட்டியில் பணம் வாங்கி, அதற்கான கடன் அடைவதற்குள் மூச்சு முட்டுவது போன்ற நிகழ்வுகளும் பல உண்டு. நம் embassy தொழிலாளர்களுக்குச் சாதகமாக எதையுமே செய்வதில்லை என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன். இந்திய மதிப்பு உயர்ந்திருக்கும் இந்தப் பத்து ஆண்டுகளை மனதில் கொண்டு, நம் இந்தியன் எம்பஸியும், தொழிலாளர்களுக்கு முனைப்புடன் உதவவேண்டும்
5. எனக்குத் தெரிந்து சௌதி தவிர, மற்ற தேசங்கள், நம் சொந்த விஷயங்களில், மதங்களில், நடைமுறை வாழ்க்கையில் குறுக்கிடுவதில்லை. பிறருக்குத் தொந்தரவு இல்லாத வரையில், நமக்கு எப்போதுமே பிரச்சனைகள் இருக்காது. (நாம் அந்த நாடுகளின் பிரதான மதத்தையும் நடைமுறைகளையும் செண்டிமெண்ட் களையும் நிச்சயம் மதிக்கவேண்டும். இல்லைனா களிதான்)
உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். நான் கல்ஃபில் சேர்ந்த புதிதில், அபீஸ் டாய்லெட் facilityஐ (அதாவது ஒவ்வொரு floorக்குமான மொத்த டாய்லெட்facility) புகைப்படம் எடுத்திருக்கிறேன் (நாம் 20 வருடங்கள் பின்னோக்கி இருந்திருக்கிறோம்), அவர்கள் landscape பராமரிப்பு, விளம்பரங்கள், காசு போட்டு பெப்சி, கோலா போன்றவைகளை எடுப்பது (ஒவ்வொரு தெருவுக்கும் இருக்கும்), போன் பேசும் facility போன்றவைகள் வெகு ஆச்சர்யம். Of course, Singapore was pioneer in many things. வெளிநாட்டில் வாழ்ந்து, அந்த நாட்டைக் குறை சொல்லும் இந்தியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பது என் அனுபவம்.