
நம்ம ஊர்களிலெல்லால் நிறைய தெரு ஓரக்கடைகள்
இருக்கின்றன. அவற்றில் நிறைய பண்டங்கள், மலிவான விலையில் சாப்பிடக் கிடைக்கின்றன.
ஆனால், சுத்தம்….? சுகாதாரம்….?
வலைத்தளத்தில், பலநாடுகளின் தெருவோரக் கடைகளைப்
பார்க்க முடிகிறது. சிலவற்றில் காணப்படும் சுத்தமும்,
வெளிப்படையான, பக்குவமான தயாரிப்பு முறைகளும்
மிகவும் மகிழ்ச்சி தருவதோடு, துணிந்து சாப்பிடவும் தூண்டுகின்றன.
அந்த மாதிரி ஆப்கனில், காபூலில் தெருவோர கடையொன்று –
10 வயது சிறுவன் ஒருவனால், தனி ஒருவனால் – நிர்வகிக்கப்படுகிறது.
அதைப்பற்றி நான் விவரிப்பதைவிட நீங்களே பார்த்து ரசிக்க
வேண்டும்… கீழே –
அந்த செய்யப்படும் பாங்கு, சுத்தம், பயன்படுத்தும் உபகரணங்களின் நேர்த்தி – பயன்படுதும் பொருட்கள், எல்லாமே – ரசிக்கப்பட வேண்டிய விஷயங்கள்….
………
.
…………………………………………..
இளமை, புதுமை, இப்படியும் ஒர் ரெக்கார்டு …..
………………………………………………………….
.
……………………………………………………………
ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பீட்சா….போன்ற மேற்கத்தைய உணவுகள், இந்தியாவில் பிராண்டட் ஆக நுழைந்தன. ஒப்பீட்டளவில் விலை உயர்ந்தவை. அதனால் ஸ்ட்ரீட் உணவாக இவைகளைத் தயார் செய்யும்போது விலை மலிவாகவும், ருசியில் அதிக வேறுபாடு இல்லாமலும் கிடைக்கிறது. நான் இந்த மாதிரி ரீடெயில் இண்டஸ்டரியில் வேலை பார்த்ததால் ஓரளவு இவற்றைப்பற்றி அறிவேன் (எங்கள் அவுட்லட்டில்-Branded, உருளை ரோஸ்ட் plate ஒரு தடவை ருசித்தேன். ரொம்ப அருமையாகவும் ருசியாகவும் இருந்தது. – நான் IT Head என்பதால், உள்ளே சென்று தயார் செய்யும் விதத்தைப் பார்த்தேன். Frozen formல வெளிநாட்டிலிருந்து வரும் அதனை, Ovenல் ரோஸ்ட் செய்கின்றனர். இத்தகைய உணவுக்கு, அவ்வப்போது தயார் செய்யப்படும் தெரு உணவுகள் எவ்வளவோ பரவாயில்லை).
இங்கும் சுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. அதனால் இன்னும் சில காலங்களில் நம்மிடமும் சுத்தமான தெரு உணவுகள் கிடைக்கும்.
90s kids – 1995ல், என்னுடன் வேலை பார்த்த குஜராத்தி, ஒரு மருத்துவரை-அவள் குஜராத்தில் படித்துக்கொண்டிருந்தாள், இவன் என்னுடன் கல்ஃப் தேசத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான், காதல் செய்தான். அவளை impress செய்ய, அவளுடைய பெயரின் ஒரு லெட்டர், ஒரு A3 sheetன் அளவு வரும்படியாக, அவனுடைய காதல் மெசேஜை, 30-40 பேப்பர்களில் print செய்து – அது கணிணிக்கான பேப்பர்கள் என்பதால், தொடர்ந்து வரும், தனித் தனித் தாளாக இருக்காது, என்னிடம் காண்பித்தான். (எனக்கு மனதில் இது என்ன சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்று தோன்றியது. 90s kids செய்வதைப் பார்த்ததும் எனக்கு அதே மாதிரித்தான் தோன்றியது). காதலுக்காக சிலர் செய்வதைப் பார்த்த எனக்கு, அது ஒரு தனி உணர்வு, அந்தச் சமயத்தில் அவர்கள் நடந்துகொள்வதை நாம் பைத்தியக்காரத்தனம் என்று எண்ணுவது தவறு என்றும் தோன்றியிருக்கிறது.