சுடச்சுட செய்தி – ஆனால், இதை எந்த அளவுக்குநம்பலாம் …???

………………………

………………………….

டெல்லியிலிருந்து இயங்கும் ஒரு மூத்த
பத்திரிகையாளர் இவர்…
ஆனால், ஒரு தீவிர பாஜக ஆதரவாளர்.
சாதாரணமாக சாணக்கியா மட்டும் தான்
இவர் பேட்டிகளை வெளியிடும்…

முதல் முறையாக – வெளியேயிருந்தும் ….!!!

செய்தி சூடாகத்தான் இருக்கிறது…

ஆனால், இதை எந்த அளவுக்கு
நம்பலாம் …???

…..

.
………………………………………………………………………………………………………..………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

5 Responses to சுடச்சுட செய்தி – ஆனால், இதை எந்த அளவுக்குநம்பலாம் …???

 1. புதியவன் சொல்கிறார்:

  ராஜகோபாலன் சார் சொல்வது ரசிக்கும்படி இருக்கும், especially பாஜக சார்பானவர்களை அல்லது திமுக எதிர்ப்பாளர்களைக் கவரும். ஆனால் அவர் சொல்வது நடந்தால்தான் அதிசயம்.

  இருந்தாலும், திமுக அரசுக்கு, குறிப்பாக ஸ்டாலின் தலைமைக்கு பல் பிடுங்கும் நேரம் வந்துவிட்டது என்றே நான் நினைக்கிறேன். இல்லாவிடில் இப்போதுள்ள நிலைமை இன்னும் மோசமாகும். வெள்ளைக் குடையை எல்லாம் பொருட்படுத்தாமல் கடுமையாக மத்திய அரசு ரியாக்ட் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற நிலைமை திமுகவுடன் சரியாக இருக்காது.

  ஸ்டாலின் நடந்துகொண்டது பற்றி, கவர்னர் ரவி பற்றி அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பு என்னை மிகவும் கவர்ந்தது. எவ்வளவு மெச்சூர்டா இந்த விஷயத்தை அண்ணாமலை அணுகுகிறார் என்பது மிக மிக ஆச்சர்யமாக இருந்தது. நம் பாராட்டுதலுக்கு உரியவர் அண்ணாமலை. இவ்வளவு அறிவுபூர்வமாக ஒருவர் ரியாக்ட் செய்து நான் பார்த்ததே இல்லை…ஒருவேளை காமராசர் பற்றிச் சொல்வதைப் படித்திருப்பதால், அவர் இப்படி ரியாக்ட் செய்திருப்பாராயிருக்கும்.

 2. புதியவன் சொல்கிறார்:

  சட்ட சபையில் நடந்தது எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. சபாநாயகர் தலையாட்டி ஆதரவு அளித்தது, உரைக்கு முன்னமே ஜால்ரா கோஷ்டிகளின் கூச்சல், உரை முடிந்த அடுத்த நொடியே தயார் செய்யப்பட்ட பேச்சை வாசித்தது, போஸ்டர்கள் வெளியில் ஒட்டப்பட்டது, ஹேஷ்டேக் என்று எல்லாம் செய்துவிட்டு, தங்களுக்குச் சம்பந்தமில்லாததுபோல ஸ்டாலின் நடந்துகொண்டது, ராஜகோபாலன் அவர்களுக்குப் புரியாமல் போனது விந்தையாக இருக்கிறது.

  கருணாநிதி, எப்படி தன் தொண்டர்களைத் தூண்டுவாரோ அதையே ஸ்டாலினும் காப்பியடித்திருக்கிறார். இதனைத் தெரிந்துகொள்ள ஆராய்ச்சி தேவையில்லை.

  பாஜக மத்தியத் தலைமை அல்லது உள்துறை இதற்கு எப்படி ரியாக்ட் செய்யும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

  • புதியவன் சொல்கிறார்:

   திமுக ஸ்போக்ஸ்பெர்சன் ஆர்.எஸ்.பாரதி எப்படி அநாகரீகமாக அவன் இவன் என்று ஏகவசனத்தில் கவர்னரை பேசினார் என்பதை நீங்கள் கேட்டிருந்திருக்கலாம். எல்லாம் தலைமையின் ஆசி இல்லாமல் நடக்குமா? GetOutRavi என்று எழுதத் துணிவார்களா?

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  லேடஸ்ட் சுடச்சுட ….
  …..
  உல்ட்டா பல்ட்டி –

  ….
  சேது சமுத்திர திட்டம் – முதல்வர் கொண்டுவந்த
  தீர்மானத்திற்கு – தமிழ்நாடு பாஜக முழு ஆதரவு

  …………..

  .
  ……………………

  • புதியவன் சொல்கிறார்:

   காவிரி தண்ணீர் கர்நாடக காங்கிரஸ் அரசு திறந்துவிடணும் என்ற தீர்மானத்தை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பது போன்றது இது. ஒரு உபயோகமும் கிடையாது. மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் என்றெல்லாம் திமுக ஆரம்பித்தால் அப்போது தமிழக பாஜக பின்வாங்கிவிடும்.

   முன்பு, சேது சமுத்திரத் திட்டம் என்ற பெயரில் கடல் மண்ணை அள்ள டி.ஆர்.பாலு காண்டிராக்ட் எடுத்து அத்தனை கோடிகள் ஆற்றோடு…இல்லை இல்லை கடலோடு போய்விட்டன. மீண்டும் சேதுவாம் சமுத்திரமாம் திட்டமாம். நல்ல நகைச்சுவை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.