
……………………………………………………………………………….
கொஞ்ச நாட்களாகவே யோசித்து வந்தேன்…
முதுகுத் தண்டு வடத்தில், (Spinal cord)
2 ஃப்ராக்சர்கள், இதயத்தில்
கொஞ்சம் டேமேஜ், மூளயின் ஒரு பகுதிக்குச் செல்லும் ரத்தக்குழாயில் கொஞ்சம் பிரச்சினை, ( அவ்வளவு தான்…!!! )
உடல் வலிகளும், இயலாமையும்,
கூடவே – வயதும் …கூடிக் கொண்டே போகிறது……
இந்த இயலாமைகளைப் பற்றி யோசித்துக்
கொண்டிருந்தால், அவை மேலும் கூடுமே தவிர,
குறைவதற்கு வாய்ப்பே இல்லை.
சிறந்த வழி –
அவைகளை சுத்தமாக Ignore செய்து விட்டு,
எதிலாவது நம்மை தீவிரமாக ஈடுபடுத்திக்
கொள்வது தான்…
எனவே, மிச்சம் இருக்கும் நாட்களை
மேலும் – பயனுள்ள வழியில் – (அகமும், புறமுமாக )
இன்னும் வேகமாக, இன்னும் உற்சாகமாக
செலவழிக்க விரும்புகிறேன்….
எப்படி….? …
( ஆன்மிகத்தில் என் வழி தனி வழி –
அது பெர்சனல் – இங்கே வேண்டாம்…!!!)
உருப்படியாக, பிறர் நம்மை நல்ல விதமாக,
நினைவில் வைத்துக் கொள்ளும்படியாக நிறைய
செய்ய விரும்புகிறேன்… என்னால் இயன்ற வழிகளிலெல்லாம்…. ( உடலால் உதவக்கூடிய நிலையில் நானில்லை; மனதால், கவுன்சலிங் போன்றவை,
நலிந்தவர்களுக்கு – மிகச்சிறிய, சின்னஞ்சிறு நிதியுதவிகள் மூலம் – இயன்றதை செய்வதுண்டு….)
விமரிசனம் தளத்திற்காகவும் இன்னமும் கூடுதலாக
உழைக்கப் போகிறேன்….
இன்னுமொரு புதியதொரு பகுதியை விமரிசனத்தில் துவங்கலாம் என்று நினைக்கிறேன்.
ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்….
என்னுடைய முன்னுதாரணம், வழிகாட்டி, மானசீக குரு எல்லாம் ஆசிரியர் “சோ” அவர்கள் தானென்று.
அவர் வழியில், ஒரு கேள்வி-பதில் பகுதியை துவங்கலாமென்று நினைக்கிறேன்…..
நிச்சயமாக – நான் பெரிய புத்திசாலி என்றோ,
எனக்கு எல்லாம் தெரியும் என்றோ
நினைத்துக் கொண்டு அல்ல…
இதன் மூலம் –
நான் மேலும் பல வித்தியாசமான தலைப்புகளில்
பயணிக்க முடியும்;
வாசகர்களின் கேள்விகளுக்கு
விடை காண, நான் நிறைய தேட வேண்டி இருக்கும்; கூடுதலாக படிக்க நேரிடும். அதிகம் சிந்திக்க வேண்டி இருக்கும்.
இவையெலாம் என்னை –
பிஸி’யாக வைத்திருக்கும்…!!!( சுயநலம்…!!!)
சரி – ஆசிரியர் சோ அவர்களை ‘குரு’ என்று சொல்லிக்
கொள்ள எனக்கென்ன தகுதி இருக்கிறது….?
பல பத்தாண்டுகளாக அவரைப்
படித்து வருகிறேன்/ பார்த்து வருகிறேன்…
அவர் ஏறத்தாழ 40 ஆண்டுகளில் எழுதியவற்றில்
முக்காலே மூணு வீசம்,
அநேகமாக – 90 % படித்திருப்பேன்…
சில தடவைகள் நேரில் சந்தித்திருக்கிறேன்…
சில நிமிடங்கள் பொது விஷயங்கள் பற்றி
அவருடன் பேசி இருக்கிறேன் – இவை போதுமா….?
நிச்சயம் போதாது….
சோ அவர்களிடம் நாம் வியந்து பாராட்டும் அவரது
முக்கியமான குணாதிசயங்கள் –
நேர்மை…
அச்சமின்மை …
நகைச்சுவை உணர்வு …
சட்ட ஞானம் ….
எளிமை…
அரசியல் எதிரிகளிடமும் நட்பு பாராட்டல் ….
- சீடன் என்று சொல்லிக்கொள்ள –
இவற்றில் என்னிடம் உள்ளவை எவையெவை …?
நேர்மை – 100 சதவீதம் நேர்மையானவன்
என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லிக்கொள்ள
முடியும். ஏறக்குறைய 40 ஆண்டுகள் அரசு சேவையில்
இருந்தும், பணம் பண்ணவும், துரோகம் செய்யவும்,
ஊழல், லஞ்சத்துக்கு துணை போகவும், பங்காளியாக இருக்கவும், ஏமாற்றவும் –
எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும்
எதற்கும் ஆசைப்பட்டதில்லை; எதற்கும் துணைபோனதில்லை; விலை போனதில்லை….
நான் என் மனசாட்சிக்கு விரோதமாக என்றும்
இயங்கியதே இல்லை; அதனால் தான் இன்று,
இந்த முதிர்ந்த வயதில்,
இத்தனை உடல் கோளாறுகள்
இருந்தாலும் கூட – உள்ளத்தில் -எந்தவித
உறுத்தலும் இன்றி நிம்மதியாக, ஆனந்தமாக இருக்கிறேன்.
வக்கீலுக்கு படித்திருக்கிறேன் என்பதை
வைத்து மட்டும் பெரியதாக சட்ட ஞானம் உண்டு
என்று சொல்ல முடியாது.
- என்றாலும் யெஸ் – ஓரளவு உண்டு…..
பல துறைகளில், அனுபவங்கள் நிறைய உண்டு.
கட்சி சார்பில்லாதவன்…
நான் எந்த கட்சியையும் சார்ந்தவனல்ல,
எந்த கட்சிக்காகவும் நான் ஒருதலைப்பட்சமாக
பேச மாட்டேன் என்பதை நீங்கள் நடைமுறையில்
பார்த்து, ஏற்கெனவே தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
இவையெல்லாவற்றையும் விட,
அடிப்படையில் எனக்குள் ஒரு வித்து இருக்க வேண்டும்…
அது இருந்தால் தான், மேற்படி சூழ்நிலைகளில்
வளர்ந்து மேலே வர முடியும்….
அது என்னிடம் இருக்கிறதா….?
பொறுத்திருந்து பார்ப்போம்…!!!
மற்ற குணங்களில்,
கேள்வி-பதில் பகுதியில் அவை எப்படி, எந்த அளவுக்கு
பிரதிபலிக்கின்றன – என்பதை
வாசக நண்பர்களாகிய நீங்கள் தான் தீர்மானிக்க
வேண்டும் – அதுவும் கொஞ்ச நாட்கள் இந்த பகுதி
இயங்குவதை தொடர்ந்து பார்த்த பின்…!!!!
…………………….
பிறகென்ன…. பேசிக்கொண்டே தான் இருக்கப்
போகிறோம். மிச்சத்தை பிறகு தொடர்வோம்..
ஜனவரி 14 …. சோ அவர்களுக்கு விசேஷமான நாள்.
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 14-ந்தேதி – யன்று
பொங்கலாக இருந்தாலும் சரி, போகி’யாக
இருந்தாலும் சரி – துக்ளக் ஆண்டு விழாவில்
அவரை நிச்சயம் பார்க்கலாம்..
சென்னையில் இருந்தபோது, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தொடர்ந்து அவரை இந்த நாட்களில் நேரில் பார்த்தும்
கேட்டும் இருக்கிறேன்….
எனவே, நமது புதிய பகுதியையும் வருகிற 14-ந்தேதி
அன்று துவங்கலாமென்று தோன்றுகிறது….
இந்த பகுதி எந்த அளவு சுவாரஸ்யமாக இருக்கப்
போகிறது என்பது உங்களைப் பொறுத்தது …!!!
ஆமாம் – கேள்விகள் சுவாரஸ்யமாக இருந்தால் தானே,
பதில்களும் சுவாரஸ்யமாக அமையும்….?
வாசக நண்பர்களாகிய உங்கள் அனைவரையும்
நான் கேட்டுக் கொள்வது –
உற்சாகமாக, இந்த பகுதியில் கலந்து கொள்ளுங்கள்.
என்னை திணற வைக்கும் அளவுக்கு
கேள்விகளை எழுப்புங்கள் …
வேறு எந்த கேள்வி-பதில் தளங்களிலும் இல்லாதபடி,
இங்கு ஒரு விசேஷம்…
என் பதில்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை
என்றாலோ, அல்லது அது குறித்து வேறு எதாவது
கருத்து தெரிவிக்க விரும்பினாலோ,
அந்தந்த பகுதியின் கீழேயே –
பின்னூட்டத்தின் மூலம், தாராளமாக தெரிவிக்கலாம்…
அவை எனக்கு நிச்சயமாக உதவியாக இருக்கும்.
கேள்விகளை, “கேள்வி-பதில் பகுதிக்கு ” என்று
தலைப்பிட்டு, என் மின்னஞ்சல் முகவரி’க்கு
( kavirimainthan@gmail.com ) அனுப்புங்கள்.
முதல் பகுதி, வருகிற சனிக்கிழமை வர வேண்டும்
என்பதால், இப்போதே கேள்விகளை அனுப்பத்
துவங்கலாம்…. என் ஆர்வம், பயணம் எந்தெந்த
துறைகளில் என்பது உங்களுக்கு தெரியும்…. எனவே,
இயன்ற வரை அதே வழியில் பயணிக்க உதவுங்கள்…!!!
இந்த அனுபவத்துக்கு உங்கள் அனைவரின்
ஒத்துழைப்பையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.
.
( பின் குறிப்பு….
இந்த புதிய பகுதியை ஆரம்பிப்பது பற்றியும் –
( ஆரம்பிக்கலாமா -வேண்டாமா என்றும் கூட )
நீங்கள் உங்கள் கருத்துகளை இந்த இடுகையின் பின்னூட்டத்தில்
சொல்லலாம். ( ஆரம்பிப்பது என்று நான் ஏற்கெனவே,
உறுதியாக முடிவெடுத்து விட்டாலும் கூட….!!! )
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
……………………………………………
All the best, sir! Very good move.
Take care your health… real good news for us.. God bless you with long life !
All the best Sir, please take care of your health
//உடல் வலிகளும், இயலாமையும், கூடவே – வயதும் …கூடிக் கொண்டே போகிறது……// வேறு செயல்களில் கவனம் செல்லும்போது இயல்பான உடல் பற்றிய வலிகள் போன்றவையிலிருந்து மனம் விலகி இருக்கும். புதிய பகுதியை வரவேற்கிறேன் கா மை சார்.
கேள்வி பதில் பகுதியும் சிறக்க வாழ்த்துக்கள், சார்!
திரு சோ அவர்களின் கேள்வி பதில் வாசிப்பது மிகுந்த மகிழ்ச்சி தரும்
அவரின் பதில் மிகவும் தைரியமாக, வித்தியாசமான கோணத்தில் யாரும் எதிர் பாராத விதத்தில் கூடவே அவரின் நையாண்டியும் கலந்திருக்கும்
உங்களின் கேள்வி பதில் பகுதி சிறப்பாக அமைய வேண்டுகிறோம் KM Sir
.
புதிய கேள்வி-பதில் பகுதியை வரவேற்று,
வாழ்த்துகள் கூறிய அனைத்து வாசக நண்பர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்….
நாளை – முதல் பகுதி வெளிவரவிருக்கிறது….
உங்கள் கேள்விகளை அனுப்பி விட்டீர்களா….?
( kavirimainthan@gmail.com )
தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருங்கள்.
வித்தியாசமான, சுவாரஸ்யமான கேள்விகளாக
இருக்கட்டும். அனைவரும் ரசிக்கக்கூடிய
சப்ஜெக்டுகளாக இருக்கட்டும்….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
13, ஜனவரி, 2023