
……………………..

……………………………………..
தோசை, ரவா தோசை எல்லாம் நமக்கு சர்வ சாதா…!!!
ஆனால், இங்கே லண்டனில், நம்ம ஊர் சங்கீதா’வில்
( Sangeetha Restaurant, Hounslow – London )
ரவா தோசையும், pizza ஊத்தப்பமும் தயாரிப்பதை
பார்க்கும்போதே, வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது….
Value Addition – மதிப்பு கூட்டுதல் என்றால் என்ன
என்பதை இங்கே தோசை தயாரிக்கும் விதம் நமக்கு
மிக எளிதாக புரிய வைக்கிறது.
வாங்கும் கஸ்டமருக்கு – ( ஆங்கிலேயர்…!!! ),
அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன…
எப்படி சுத்தமாக, சுகாதாரமான, சத்துள்ள – பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது
என்பதை விளக்கமாக காட்டுவதன் மூலம்,
அந்த தோசையின் மதிப்பு கூட்டப்படுகிறது…..
பாருங்களேன் …லண்டன் சங்கீதா ஹோட்டல் ….
( Sangeetha Restaurant Hounslow London )
………………………..
.
………………………………………..
நீங்க வேற… இப்படீல்லாம் பண்ணிட்டிருந்தா கடை வியாபாரம் நடக்காது. அபூர்வமா விளம்பரத்துக்கு இப்படிச் செய்வாங்க.
எங்கள் ஹாஸ்டலில் ஒரே நேரத்தில் 40 ஊத்தாப்பங்களோ இல்லை சாயிறு ஸ்பெஷல் சாதா தோசை 20 கடகடவென காரைக்குடி மாஸ்டர் செய்தது நினைவுக்கு வருது. 250 பேர்களுக்கு ஆயிரம் தோசைகள் தயாரிப்புன்னா சும்மாவா?