………………………………………….

………………………………………….
( மரபு, மாண்பு – காக்கப்பட்டது ….!!! )
கவர்னர் பேசிக்கொண்டிருக்கிறார்../ தன் உரையை
வாசித்துக் கொண்டிருக்கிறார்…
ஆனால், அவர் எதிரே கும்பலாக சூழ்ந்துகொண்டு,
ஆளும் கட்சியின் கூட்டணியினர், உரத்த குரலில்
கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்…
முதல்வர் மற்றும் அவைத்தலைவரின் முன்னிலையில்
இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
சட்டவிதிகள் இது குறித்து என்ன சொல்கின்றன …?
…………………………..
“தமிழ்நாடு சட்டசபை விதி எண் 17 என்ன சொல்கிறது என்றால் ஆளுநர் உரை நிகழ்த்தும் முன்பும், பின்பும்,
உரை நிகழ்த்தும் போதும் –
- அவரின் செயலுக்கு இடையூறு இருக்க கூடாது.
அவருக்கு இடையூறாக செயல்பட கூடாது. அவர்
அந்த அரங்கத்தை விட்டு வெளியேறும் வரை அவரின் செயலுக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்று விதி சொல்கிறது. இந்த விதி சபாநாயகருக்கும் பொருந்தும், முதல்வருக்கும் பொருந்தும்.
( https://tamil.oneindia.com/news/ )
…………
- இதைத் தான் அவையின் மரபுகள், மாண்புகள்
காக்கப்பட்டன என்று முதல்வர் சொல்கிறார்…!!!
……………………………………………………………………………………………………………………………………

…………………………………………………………………………………….
-கவர்னர் தனது உரையை படிக்க ஆரம்பித்த பிறகும்,
ஆளும் திமுக-வின் கூட்டணி கட்சியினர்
தொடர்ந்து கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தது
அவையின் மாண்புக்கு உரியதா…?
-கூச்சல் போட்ட உறுப்பினர்களை அடக்காத –
அந்தந்த கட்சியின் தலைவர்களும்,
முதல்வரும், அவைத்தலைவரும் நடந்துகொண்ட
முறை சரியா….? அவையின் மாண்புக்கு உரியதா….?
- கவர்னர் முன்னதாக, தனக்கு அனுப்பப்பட்ட
ட்ராஃப்ட் உரையில் மாற்றங்கள் செய்யச் சொன்னது
உண்மையா….? - உரை அச்சடிக்கப்பட்டு விட்டதால், மாற்றுவது
கடினம்…. கவர்னர் அந்த பகுதிகளை படிக்காமல்
விட்டு விடலாம் என்று அரசின் தரப்பில்
பதில் சொல்லப்பட்டதா..? - அரசு எழுதிக்கொடுக்கும் உரையை அப்படியே,
முழுவதுமாக கவர்னர் படிக்க வேண்டும் என்று எந்த
சட்ட விதிகளாவது கூறுகின்றனவா….? - மத்திய அரசை குறைகூறி, உரையில் எழுதப்பட்டிருந்தால்,
அதையும் கவர்னர் படிக்க வேண்டுமா…?
படிக்க வேண்டும் என்று அரசு வற்புறுத்துமா….? - கவர்னர் பதவி என்பது மாநில அரசு
போட்ட பிச்சையா…?
அல்லது அவர் திடீரென்று தானாகவே வந்து
உட்கார்ந்து கொண்டு விட்டாரா…?
இவர்கள் நொடிக்கொரு தடவை கூறும் டாக்டர் அம்பேத்கர்
அவர்கள் அரசியல் சட்டத்தில் கொண்டு வந்த
சட்டபூர்வமான பதவி தானே …?
கவர்னர், அரசியல் சட்டவிதிகளின்படி, ஜனாதிபதியால்
நியமிக்கப் பட்டவர் தானே…?
- சரி கவர்னர் படிக்காத பகுதிகளில் கூறப்பட்டுள்ளபடி –
தமிழகம் அமைதிப்பூங்காவாகவா திகழ்கிறது….? - தினமும் ஆளும் கட்சி கவுன்சிலர்களும், வட்டங்களும், மாவட்டங்களும்
போடும் ஆட்டங்கள், லஞ்சம் வாங்கும் மந்திரி பிரதானிகள்,
வீசப்படும் பெட்ரோல் குண்டுகள், கொலைகள்,
கற்பழிப்புகள், மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் …. இவற்றிற்கெல்லாம் யார் பொறுப்பு….?
–
-ஓருவேளை கவர்னர் மத்திய அரசுக்கு மாதந்தோறும்
அனுப்பும் ரிப்போர்ட்டில், இவை குறித்தெல்லாம்
குறிப்பிடப்பட்டிருந்தால் –
இப்போது அதற்கெதிராக சட்டமன்றத்தில் அவரே
எப்படி மாறுபாடான கருத்தை படிக்க முடியும்…..?
- எல்லாம் சட்டப்படியே என்கிறார்களே.
சட்டமன்றத்திற்கு வெளியே அவர் பேசியதை எதிர்த்து, சட்டமன்றத்திற்குள்ளாக போராட்டம்
செய்வது எந்தவிதத்தில் மாண்பு மிகுந்த செயல்…? - அரசு சொல்லும் – திராவிடம், திராவிட மாடல்
என்கிற சொற்கள் எங்கே இருந்து வந்தன….?
- அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை அம்பேத்கர்
அவர்கள் – திராவிடம், திராவிடர்-ஆரியர் என்றெல்லாம்
பேசுவதே நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியாக ஆங்கிலேயர்
கண்டுபிடித்தவையே…. அவை ” கொடிய பாம்பின் விஷம்” போன்றவை என்று தன் புத்தகத்திலேயே எழுத்து வடிவிலேயே கூறி இருக்கிறாரே…. - டாக்டர் அம்பேத்கருக்கு அறிவு, சரித்திர ஞானம் பத்தாது; எனவே இந்த விஷயத்தில் மட்டும் அவர் சொல்வதை
நாங்கள் ஏற்கவில்லை என்று இவர்கள் வெளிப்படையாக சொல்லி விட வேண்டியது தானே …? - அதென்ன மாடல்….? அதுவும் திராவிட மாடல்…?
யார் கண்டுபிடித்தது…? முதலில் திராவிடமே போலி
என்கிறபோது “திராவிட மாடல்” என்கிற போலியை
கவர்னர் உச்சரிக்காமல் போனது எந்த விதத்தில் தவறு…?
அரசியல் சட்டத்தில் எங்கேயாவது திராவிடம் என்கிற சொல் கூறப்பட்டியருக்கிறதா…? அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா….? எங்கே இருக்கிறது இவர்கள் சொல்லும் அந்த திராவிடம் …..?
= “நான் ஒரு முட்டாள்; மடையன், திருடன், மக்களை
ஏமாற்றுபவன் ” என்று இவர்கள் எழுதிக் கொடுத்தால்
அதையும் கவர்னர் படிக்க வேண்டுமா….?
- கவர்னர், தாங்கள் எழுதிக்கொடுத்ததை படிக்கவில்லை
என்பது, அவர் பேசிய பின்னர் தானே யாருக்கும்
தெரிய வரும்….?
அதெப்படி, முதல்வர் மட்டும், ஏற்கெனவே –
ரெடியாக, கவர்னர் படித்த உரையை ஏற்கக்கூடாது
என்று ரெடிமேட் தீர்மானம் தயாரித்து வைத்திருந்தார்….?
- தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை
நிறைவேற்றாமல், மக்களை திசைதிருப்ப –
அவ்வப்போது நடத்தும் இந்த மாதிரி நாடகங்களை
மக்கள் நம்புவார்கள் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்களா…?
மக்கள், இவர்கள் எல்லாரையும் விட புத்திசாலிகள்…
அதை -அடுத்த வாய்ப்பு வரும்போது,
வெளிப்படையாகவே நிரூபித்துக் காட்டுவார்கள்…!!!
.
……………………………………………………………………………………………………..
…
தமிழ்நாடு சட்டசபை விதி எண் 17 என்ன சொல்கிறது என்றால் ஆளுநர் உரை நிகழ்த்தும் முன்பும், பின்பும், உரை நிகழ்த்தும் போதும் அவரின் செயலுக்கு இடையூறு இருக்க கூடாது. அவருக்கு இடையூறாக செயல்பட கூடாது. அவர் அந்த அரங்கத்தை விட்டு வெளியேறும் வரை அவரின் செயலுக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்று விதி சொல்கிறது. இந்த விதி சபாநாயகருக்கும் பொருந்தும், முதல்வருக்கும் பொருந்தும்.
( https://tamil.oneindia.com/news/ )
…
“இருபது நொடிகளில் தயாரான முதல்வரின் பதில் உரை” என்று முட்டுக்கொடுத்த விகடன் போஸ்ட் பார்த்தீர்களா, ஐயா? ஒரு ஐயம், பெமென்ட் அட்வான்ஸ் கொடுப்பார்களா, இல்லை போஸ்ட் போட்டபிறகு கிடைக்குமா?
அதெப்படி, முதல்வர் மட்டும், ஏற்கெனவே –
ரெடியாக, கவர்னர் படித்த உரையை ஏற்கக்கூடாது
என்று ரெடிமேட் தீர்மானம் தயாரித்து வைத்திருந்தார்….?
பத்திரிகையாளர்களை, பத்திரிகைகளை விலைக்கு வாங்கியது போல, உங்களையும் வாங்கியிருந்தால், இரண்டு நொடிகளில் தயாரான என்று நீங்களும் எழுதியிருப்பீர்கள். நேற்று ஒரு விஷயம் படித்தேன்… Thatstamil….அம்பலம். போன்றவற்றில் மருமகனும் ஓனராமே (முதலீடு செய்துள்ளார்). அப்படீன்னாக்க, எங்கதான் உண்மைச் செய்திகளைத் தெரிந்துகொள்வது? தினமலர் ஓரளவு பரவாயில்லை.
கா.மை. சார்…நீங்களே எல்லாவற்றையும் எழுதிவிட்டால், நான் என்னதான் பதிலெழுதுவது?
1. ஆளுநர் ரவி அவர்கள், தமிழில் மேற்கோள் காட்ட நினைத்த ஔவையார், பாரதி வரிகளை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழில் சொன்ன ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை நீக்கியுள்ளனர்.
2. ஜனவரி 6ம் தேதி கிடைத்த அரசு தயார் செய்த உரையில் ஆட்சேபகரமான விஷயங்களை ஆளுநர் மாளிகை குறிப்பிட்டு அவைகளை நீக்கச் சொன்னபோது, ஏற்கனவே அச்சுக்குப் போய்விட்டது, நீங்கள் பேசும்போது தவிர்த்துவிடுங்கள் என்று அரசு சொன்னது ஆவண பூர்வமாக பதிவாகியுள்ளதாம்.
3. ஆளுநர் இருக்கும்போதே, ஆளுநர் உரைக்குப்பின் சபை முடித்துவைக்கப் படவேண்டும் என்ற மரபை மீறி தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். ஆளுநர் உரையை ஆரம்பிப்பதற்கு முன்பே சில ஜால்ரா கோஷ்டிகள் ஆளுநருக்கு எதிராக கூச்சலிட்டனர். அதனால் இது திட்டமிட்டே நடந்திருக்கிறது, பலவித ஊழல்கள், பொங்கல் பரிசு குளறுபடி, மருமகனின் 20 கோடி வாட்சுகள் என்று பல விஷயங்களை மறைக்கவே இது நடந்திருக்கிறது
4. “இந்த அரசு வீரம் மற்றும் வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் தொடரும்’ என்ற வார்த்தைகளை எவ்வாறு ஆளுநர் பேச முடியும்? அதீத புகழ்ச்சிகளைத் தவிர்ப்பேன் என்று ஆளுநர் ஏற்கனவே சொல்லியிருந்தார்
5. மாநிலம் அமைதி மற்றும் அமைதியின் சொர்க்கமாகத் திகழ்கிறது, வன்முறை இல்லை என்ற வார்த்தைகளை எவ்வாறு பேசுவார்? நம் கண் முன்னே கோவை பயங்கரவாதம், பாஜக அலுவலகத்தின்மீது நடந்த பயங்கரவாதம், பலவித அரசியல் கொலைகள், திமுக எம்பி நடத்திய கொலை, பெண் போலீசாருக்கு திமுக நிர்வாகிகள் செய்த பாலியல் தொல்லை என்று பல நடந்திருக்கும்போது யார்தான் இதனைச் சொல்ல முடியும்?
6. இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மாநில அரசு விடுவித்தது என்ற பொய்யை எப்படிச் சொல்லமுடியும்?
7. ஆளுநர் உரை முடிந்ததும் உடனே தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும். ஆனால் முன்னரே திட்டமிட்டது போல ஆளுநருக்கு எதிராக தீர்மானம் முதல்வர் கொண்டுவந்தது எவ்வாறு ஏற்புடையது? அப்படித் தீர்மானம் கொண்டுவரும்போது அங்கு எப்படி ஆளுநர் இருக்கமுடியும்? ஆளுநர் படித்தவர், இவங்க தற்குறிகள் என்று பலர் கருத்துச் சொல்வதையும் நாம் கவனிக்கணும்.
இந்த நாடகங்களெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்பதை யார்தான் நம்புவார்கள்? 20 கோடிக்கு விலைபோன கம்யூனிஸ்டுகள், 4-5 சீட்டுகளுக்கு பிச்சை எடுக்கும் நிலையில் உள்ள காங்கிரஸ், எப்படியாவது கூட்டணியில் சேர்ந்து 5 சீட்டுகளை வாங்கணும் என்று அதீத ஆசையில் இருக்கும் அன்புமணி, திமுக சின்னத்தில் நிற்கச்சொல்லி அவமானப்படுத்துவார்களா இல்லை பாமகவைக் கொண்டுவந்து தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியேற்றுவார்களா என்று புரியாமல், எதற்கும் இருக்கட்டும் என்று ஆளுநரை எதிர்க்கும் திருமா…… இவர்களெல்லாம் முன்பே பேசிவைத்துக்கொண்டு நடத்திய நாடகம் போல்தான் எனக்குத் தோன்றியது.
இந்த நிகழ்வில் நடந்த நல்லது ஒன்று உண்டு.
ThatisTamil போன்ற ஊடகங்கள், மக்களைத் திசை திருப்பும் விதமாக, நேற்று காலையில், ஆளுநர், தமிழக அரசைப் பாராட்டினார் என்றெல்லாம் புளுகினர். இன்றைக்கு ஆப்படித்த குரங்குபோல, தமிழக அரசு எழுதித் தருவதை கமா கூட மாற்றாமல் ஆளுநர் படிக்கவேண்டும் என்று சொல்கின்றனர். இந்த உண்மை அந்த ஜால்ரா கோஷ்டி ஊடகங்களுக்கு நேற்றே தெரிந்திருந்தால், ‘தமிழக அரசு எழுதிக்கொடுத்த அரசைப் பற்றிய புகழுரைகளை ஆளுநர் வாசித்தார்’ என்றல்லவா செய்தி போட்டிருக்கும்?
….
…
நாம என்ன சொன்னாலும் பெரும்பான்மையான பாமர மக்களுக்கு ( படித்தவர்களும்) திராவிட அரசு திட்டமிட்டபடி ஆளுநர் செய்தது தான் தவறு என்ற செய்தி ஊடகங்களால் சரியாக அவர்களை அடைந்துவிட்டது… தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது
சின்ன வயதில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுகிறேன் என்று சவால் விட்டு கூட்டம் கூட்டி காசை வசூலித்துக்கொண்டே பேசிப் பேசி கடைசியில் எதையும் காட்டாமல் வயிற்று பிழைப்பு என்று சொல்லி காலி செய்பவர்களை பார்த்திருக்கிறேன். அதே தான் இது. சும்மா ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். சத்தமே இல்லாமல் பரந்தூர் விமான நிலையம், எட்டு வழி சாலை.. சாரி.. பசுமை வழி சாலை.. எல்லாம் நிறைவேறிவிடும்.. நீட்டை விலக்காமல் தடுப்பார்கள். சாராயம் வழக்கம்போல் ஆறாக ஓடும் . தேனும் பாலும் ஓடுவதாக ‘ஊடக நண்பர்கள்’ எழுதிக்கொண்டே இருப்பார்கள். நாமும் பாம்பு கீரி சண்டையை பார்த்துக்கொண்டே எல்லாவற்றையும் மறந்துவிடுவோம்!