
…………………………………………………………………………
விமரிசனம் தளத்தில், அநேகமாக தினமும் ( இன்ஷா அல்லா….!!!)
காலையில் 10.30 -11.00 மணிக்கு, ஒரு தமிழ் இடுகை பதிவிடுகிறேன்.
இது என் விமரிசனத்துடன் கூடியது….( இது இன்னும் எத்தனை நாட்கள் முடியுமோ … தெரியாது….. என் கையில் இல்லை; இறைவன் விருப்பம்…. வண்டி ஓடுகிற வரையில் ஓடட்டும்…!!!
இதைத்தவிர,
நான் பார்க்கும் சில செய்திகளை,
தகவல்களை, காணொளிகளை, ( இயன்றபோதெல்லாம், ) மாலை வேளைகளில்,
- விமரிசனம் செய்யாமல் –
தகவல் பரிமாற்றம் மட்டுமே என்கிற நிலையில்,
வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அவை அநேகமாக, ஆங்கிலத்தில் வரும் செய்திகளாக,
கட்டுரைகளாக, கார்ட்டூன்களாக, காணொளிகளாக
இருக்கும்….
இவற்றிற்கு என் விமரிசனம் தேவை இல்லை என்று
நான் கருதுகிறேன்… அவற்றை வாசக நண்பர்கள்
அப்படியே பார்த்து, படித்து – தங்களுக்கு தோன்றும் விதத்தில்
ரசித்து, ஏற்றுக் கொள்ளட்டும் என்று நினைக்கிறேன்…..
இவற்றிற்கும், பின்னூட்டம்/மறுமொழி எழுத விரும்பும்
நண்பர்கள் தாராளமாகச் செய்யலாம். அவை எனக்கு
நிச்சயம் உதவியாக இருக்கும்…..
கீழே இன்றைய முதல் ஈவினிங் போஸ்ட் –
கண்களுக்கும், நாவுக்கும் – விருந்துடன்,
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
………………………………………………..
Evening Post -1 – “வடா பாவ்”
– என் 4-வது வயதிலிருந்து,
என் நினைவு தெரிந்த பருவத்தில், முதல் முதலாக
நான் பார்த்து, அனுபவித்த – மஹாராஷ்டிரா மாநிலத்தின்
விசேஷ அடையாளமான “வடா பாவ்” ….
…………….
.
………………………………………………..
அந்தந்தப் பகுதியில் வாழும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் சிறப்பு உணவுகளைச் சுவைக்கும் வாய்ப்பு கிடைக்காது.
என் வீட்டில் இதனை விரும்புவர் (அதுவும் மிடில் ஈஸ்ட்டில் கிடைத்தது என்பதால்). எனக்கு உருளையுடன் மற்றும் ப்ரெட்டுடன் கூடிய இந்த உணவில் விருப்பம் இருந்ததில்லை.
உங்களுக்கு நிறைய இடங்களில் வாழும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சிறிய காணொளி என்னைக் கவர்ந்தது.