அயோத்தி ராமர் கோவில் எப்படி உருவாகிறது, எந்த நிலையில் இருக்கிறது ….?

…………………………

…………………………………………….

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் பணியை,
எல்.& டி நிறுவனம் மேற்கொண்டுள்ளது….

இந்த கோவில் படிப்படியாக கட்டப்படுவது
எப்படி என்பது குறித்து எல்.& டி. நிறுவனம் தயாரித்துள்ள
ஒரு காணொளி – கோவிலை கட்டும் பொறுப்பினை மேற்கொண்டுள்ள
Shri Ram Janmabhoomi Teertha Kshetra -நிர்வாகத்தால்
வெளியிடப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான அந்த காணொளி கீழே –

தற்போது கட்டப்பட்டு வரும் ராமர் கோவில்
பற்றிய சில விவரங்கள் –


………………

ராமர் கோவில் கட்ட உத்தேச செலவு மதிப்பீடு –
சுமார் 1800 முதல் 2000 கோடி ரூபாய் வரை.

இது நாள் மட்டும் நன்கொடையாக கிடைத்திருக்கும்
நிதி, இதைவிட கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு –
ரூபாய் 3200/- கோடி… இன்னமும் நிறைய வரும்….!!!

161 அடி உயரத்தில், 3 அடுக்குகளாக
2.77 ஏக்கர் நிலப்பரப்பில் – உருவாக இருக்கிறது கோவில்.

கோவிலின் நீளம் 344 அடியாகவும்,
அகலம் 250 அடியாகவும் இருக்கும்.

இந்த கோவிலுக்கான, சுண்ணாம்பு கற்கள்,
ராஜஸ்தானில், பரத்பூர் மாவட்டத்தில் தோண்டி எடுக்கப்பட்டு,
சிரோஹி மாவட்டத்தில் வடிவமைக்கப்பட்டு,
அயோத்தி கொண்டு வரப்பட்டு, தொகுக்கப்படுகின்றன.

………………………….

ராமர் கோவிலைப்பற்றிய ஒரு 3டி அனுபவ காணொளி ஒன்று,

 • முழுக்க முழுக்க டிஜிடல் வடிவிலானது – மஹாராஷ்டிராவைச்
  சேர்ந்த ஒரு வடிவமைப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
  அதையும் கீழே வெளியிடுகிறேன். பொதுவில் நன்றாக
  இருக்கிறது என்றாலும் கூட –

அதில் தோற்றமளிக்கும் ராமரின் போர்க்கோல முகமும்,
தோற்றமும் காணச் சகிக்கவில்லை…

உண்மையில், அயோத்தி ராமர் கோவிலில் இத்தகைய கோர முகம் இருக்காது என்று நம்புவோம்….. அந்த ராமரையே
அதற்காக வேண்டுவோம்.

………….

……………..

கள நிலவரம் –

தற்போது கோவில் கட்டப்படும் இடத்தில் களத்தில் எடுக்கப்பட்ட
NDTV – தொலைக்காட்சியின் ஒரு காணொளி கீழே –
இது 5 மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி.
பணிகள் 2024 மார்ச் மாதம் முடியக்கூடும் என்று தெரிவிக்கிறார்
அந்த பொறியாளர்….

2024 – மே மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக – திறந்து வைக்கப்பட்டு விடுமென்று, நிச்சயமாக, உறுதியாக, நம்பகமாக நம்பலாம்….!!!😊😊😊

……………..

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அயோத்தி ராமர் கோவில் எப்படி உருவாகிறது, எந்த நிலையில் இருக்கிறது ….?

 1. புதியவன் சொல்கிறார்:

  தோட்டாதரணிக்கு 2 1/2 கோடி அள்ளி விட்டு கோபுரம் செட் போட்டு சோனியாவைக் கூப்பிட்டு அவசர அவசரமாக, பின்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ஆகப்போகும் புதிய தலைமைச் செயலகம் ரெடி என்று படம் காண்பித்து, தன் வாஸ்துக்காக மீன் வளர்ப்புத் தொட்டி அமைத்து, இன்னும் பல வழிகளில் அரசுப் பணத்தை வீணடித்த கருணாநிதி போல ஆகாமல் ஜனவரியிலேயே கோவில் திறப்புவிழா நடைபெற்றுவிடும் என் நம்புவோம்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   நீங்கள் கஷ்டப்பட்டு, இதற்காக வேண்டி,
   ப்ரார்த்தனை எல்லாம் செய்து கொள்ள வேண்டாம்.

   யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்,
   மே, 2024 தேர்தலுக்கு குறைந்த பட்சம் 2 மாதங்கள்
   முன்னர், அமீத்ஜி எப்போது விரும்புவாரோ, அப்போது
   “ராம் லல்லா” உள்ளே சென்று அமர்ந்து கொள்வார் –
   2-வது அடுக்கு, 3-வது அடுக்கு இல்லாமலே கூட,
   திறப்பு விழா நடந்து விடும்…. 😊😊
   கவலையே வேண்டாம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    அப்படி ஒருவேளை தயாராகவில்லை என்றால், மதுரா, ஞானவாபி பத்திரிகைகளில் அதிகமாக அடிபடுமா? யாராவது பாஜகவின் Road map தெரிந்தால், பகிர்ந்துகொண்டால் புரிந்துவிடும்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     // அமீத்ஜி எப்போது விரும்புவாரோ, அப்போது
     “ராம் லல்லா” உள்ளே சென்று அமர்ந்து கொள்வார் –
     2-வது அடுக்கு, 3-வது அடுக்கு இல்லாமலே கூட,
     திறப்பு விழா நடந்து விடும்…. 😊😊
     கவலையே வேண்டாம். //

     😊😊😊

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.