
………………………………..
“பாரத் ஜோடோ ” யாத்திரையில் கலந்துகொள்ள
டெல்லி சென்ற ம. நீ. மன்ற மையம் தலைவர் கமல்ஹாசன்,
ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்….
பாரத் ஜோடோ தளத்தில் வெளியான அவர்களது பேட்டியை,
- முழுவதுமாக தந்தி டிவி தமிழ்ப்படுத்தி
வெளியிட்டிருக்கிறது….
- எடிட் செய்யப்பட்ட சில பகுதிகள் மட்டும் –
மற்ற மீடியாக்களிலும் வந்திருக்கின்றன…
பேட்டியில் பேசப்பட்டதைத் தவிர, இதன் பின்னணியில்
வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளன என்பது புரிகிறது.
தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி, திமுக அணியை விட்டு
வெளியே வந்து, தனியாக ஒரு கூட்டணியை உருவாக்குமோ
என்கிற எண்ணத்தை இது உருவாக்குகிறது.
திமுக, பாராளுமன்ற தேர்தலின்போது, கடைசி நேரத்தில் – தங்கள் கால்களை வாரிவிடும் என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவே கமலுக்கு காங்கிரஸ் இப்போது கொடுக்கும் முக்கியத்துவம்….
திமுக, இதற்கு எப்படி ரீ-ஆக்ட் செய்கிறது என்று பார்க்க வேண்டும்….!!!
அநேகமாக திமுக இந்த நிகழ்வை அலட்சியம்
செய்து விடும்….
கீழே – தந்தி டிவியில் வந்திருக்கும் காணொலி -தமிழ் சப்-டைட்டில்களுடன்..
–
………………………………………………..
.
………………………………………………
ராகுல் பேசுவதைக் கேட்டேன்.
மனிதர்கள் இருக்கும்வரை conflicts and difference of opinions இருக்கும். பாஜக வந்த பிறகுதான், ஜெய்ஹிந்த் என்ற முழக்கம், பார்த்மாதாகீ ஜே என்ற முழக்கமே வந்திருக்கிறது. அதாவது தேசிய உணர்வை பாஜக promote செய்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
2000 சொச்சம் கிமீ சைனா ஆக்கிரமித்துவிட்டது என்று சொல்லும் ராகுல், அவருடைய காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போதுதான் காஷ்மீர் பகுதி மற்றும் எல்லையோரப் பகுதிகள் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டன என்பதை பழங்கதை என்று மறந்துவிட்டார் போலிருக்கிறது. அதுபோல, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தாங்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தையும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள் ராகுல் மற்றும் சோனியா.
புதின், உக்ரைன் மேற்கத்தைய நாடுகளுடன் நட்பு வைத்திருப்பதை எதிர்க்கிறார் என்று சொல்கிறார். இதில் ராகுல் கருத்து, அவருக்கு உலக அரசியல் புரியவில்லை என்றே புரியவைக்கிறது. நாம் ஏன் இலங்கையில் சீனா நுழைவதை எதிர்க்கிறோம்? தாய்வான் மேற்கத்தைய நாடுகளுடன் தொடர்பு வைத்துக்கொள்வதை ஏன் சீனா எதிர்க்கிறது?
பலர் விமர்சனத்தை விரும்புவதில்லை என்று சொல்லும் ராகுல், எதற்காக வாசன் மூப்பனார் போல பல தலைவர்களை ஒதுக்கிவைத்து கத்துக்குட்டிகளை (சம்பந்தமில்லாத மாணிக் தாகூர், ஜோதிமணி போன்று) மேலே கொண்டுவந்தார்? ஏன் இன்று சசிதரூர் ஒதுக்கிவைக்கப் பட்டார்? அவர்கள் செய்யும்போது நியாயம். ஆனால் மற்றவர்கள் விமர்சனத்தை ஏற்பதில்லை, விரும்புவதில்லை என்று கூசாமல் சொல்லமுடிகிறது.
காங்கிரஸ்தான் கனிமொழிக்கு மெசேஜ் கொடுத்து தில்லி பேரணியில் கலந்துகொள்ளச் சொல்லிச் சொன்னார்கள் என்று கனிமொழி சொல்லியிருந்தார். அப்படியே கமலுக்கும் மெசேஜ் போயிருக்கும். அதனால் பரந்த வெளியில் தன் பெயர் வரும் என்று ராகுல் நினைத்திருக்கலாம். (கமல் Fashion businessல் இருப்பதாக ராகுல் சொல்கிறார். அப்படீன்னாக்க என்ன?) பாமக, ஒவ்வொரு தேர்தலுக்கும் செய்ய நினைக்கும் நாடகத்தை இப்போது காங்கிரஸ் கையில் எடுத்திருக்கிறது. அது, குறைந்தபட்சம் 8 சீட்டுகளையாவது காங்கிரஸ் போட்டியிட திமுக கொடுத்தாகவேண்டும் என்ற பேரத்துக்கு உபயோகமாக இருக்கும்.
மற்றபடி விக்ரம் போன்ற படங்களில் நடித்து நூறு கோடி, இருநூறு கோடி என்று கல்லா கட்டுவதை விட்டுவிட்டு, எதற்காக பிரயோசனமில்லாமல் அரசியல் வியாபாரத்தில் பணத்தை இழக்கணும், பேசாமல் காங்கிரஸுடன் இருந்து ஒரு ராஜ்ஜியசபா சீட் பெற்றுவிடலாம் என்று கமல் நினைக்கலாம்.
எனெக்கென்னவோ, திமுக, காங்கிரஸை தன் கூட்டணியில் இருத்திக்கொள்ள முயலும் என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் தங்களுடன் இல்லையென்றால் தங்களுக்கான வாய்ஸ் மத்தியில் இருக்காது என்று திமுக நினைக்கும். தேசியக் கட்சி இல்லாமல் திமுக பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்காது.
புதியவன்,
// எனெக்கென்னவோ, திமுக, காங்கிரஸை தன் கூட்டணியில் இருத்திக்கொள்ள முயலும் என்றே தோன்றுகிறது. ..//
இந்த ஒரு கருத்துக்கு மட்டும் நான் பதில் சொல்கிறேன்.
மற்றவை – பிற வாசக நண்பர்களுக்கு …..!!!
…………………….
திமுக நிச்சயம் காங்கிரசை தன் கூட்டணியில்
இருத்திக் கொள்ளவே விரும்பும்…. வேறு எந்த
காரணங்களுக்காக இல்லா விட்டாலும்,
மைனாரிடி ஓட்டுக்களில் கணிசமான பகுதி,
காங்கிரஸ் வெளியேறினால், அதனுடன் சென்று விடும் –
என்பதற்காக.
ஆனால், தன் விருப்பத்திற்கு மாறாகவே,
காங்கிரசை வெளியேற்றவும் செய்யும்… !!!
காரணம் – ?
பாஜக மத்திய தலைமையின் – ” காங்கிரசை கழற்றி
விடுகிறீர்களா அல்லது ரெய்டுகளையும், வழக்குகளையும்
எதிர்கொள்கிறீர்களா….? ” என்கிற கண்டிஷனல் ஆப்ஷன்…!!!
நீங்கள் திமுக தலை…. யாக இருந்தால்
என்ன முடிவெடுப்பீர்கள்….?
எனவே, காங்கிரஸ் தனி கூட்டணி அமைப்பது
அநேகமாக நிச்சயம்…. கவலை வேண்டாம், உங்கள் ஃபேவரைட்
எடப்பாடியும் அங்கே இருப்பார்… 😊
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//பாஜக மத்திய தலைமையின் – ” காங்கிரசை கழற்றி
விடுகிறீர்களா அல்லது ரெய்டுகளையும், வழக்குகளையும்
எதிர்கொள்கிறீர்களா….? ” என்கிற கண்டிஷனல் ஆப்ஷன்…!!!// – நீங்க வெள்ளைக் குடையைப் பிடித்துக்கொண்டு ஸ்டாலின் நின்றதை வைத்து அனுமானிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நான் ஸ்டாலின் இடத்தில் இருந்தால், ரெய்டு/வழக்குகளைப் பற்றிக் கவலைப்படமாட்டேன். (பாஜகவால் ஒன்றுமே செய்ய இயலாது. ஆனானப்பட்ட 66000 கோடி ரூபாயில் 30000 கோடி சுருட்டியவர்களையே ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏதாவது ஒரு, ஒரு வழக்கிலாவது யாரையாவது உள்ளே வைத்திருக்க பாஜகவால் முடியவில்லை. இதுவே இந்திராவாக இருந்திருந்தால், சட்டம், நியாயம் நேர்மை என்று ஒன்றையும் பார்க்காமல், உள்ளே வைத்து முட்டிக்கு முட்டி தட்டியிருந்திருப்பார். தனக்கு எதிராக ‘திராவிட’ என்று பேசும் விலைபோன ஊடகங்களையும் ஆட்டிவைத்திருப்பார் ). முழுக்க நனைந்த ….. க்கு மானமாவது வெட்கமாவது? பாஜக, திமுகவில் யார் மீது ரெய்டு விட்டாலும், கைது செய்து உள்ளே வைத்தாலும், திமுக, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியும், மக்களும் ரெய்டு/கைது இவற்றால் திமுகவைக் குறையாக நினைக்கமாட்டார்கள்.
ஒருவேளை, காங்கிரஸ், அதிமுக-எடப்பாடி, விசிக என்று கூட்டணி அமைந்தால், அது வரவேற்கத்தகுந்ததுதான். அப்போதான் பாஜக, அண்ணாமலை அவர்களின் தலைமையில் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று தெரியும். திமுகவை அறவே பிடிக்காதவர்கள் நாடக்கூடிய கட்சியாக இப்போது பாஜக-அண்ணாமலை வளர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது. குறைந்தது 10-14 சத வாக்குகளை பாஜக பார்லி தேர்தலில் வாங்கும் என்று நம்புகிறேன்.அதிமுக உட்கட்சி மோதலால், திமுக எதிர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக கைவிடுகிறது என்றே நினைக்கிறேன். அதிமுக பலவீனத்திற்கு, அல்லது எடப்பாடியின் பலவீனத்திற்கு, அதிமுகவிற்கு துரோகம் செய்யும் ஓபிஎஸ், தினகரன் போன்றோர்தான் காரணம்.
அது சரி…ராகுலின் நடைப்பயணத்தில் தில்லியில் கலந்துகொள்ளுமாறு தனிப்பட்ட அழைப்பு கனிமொழிக்குச் சென்றதே, அவரும் டி.ஆர்.பாலு மற்றவர்களிடம் தெரிவிக்காமல் கலந்துகொண்டாரே…. ஒருவேளை, எதிர்காலத்தில் கனிமொழியை வைத்து திமுகவை காங்கிரஸ் பிளக்க வாய்ப்பு இருக்கிறதா?
// ஒருவேளை, எதிர்காலத்தில் கனிமொழியை
வைத்து திமுகவை காங்கிரஸ் பிளக்க வாய்ப்பு
இருக்கிறதா? //
– ஆசை, தோசை, அப்பளம், வடை ….😊😊😊
//நான் ஸ்டாலின் இடத்தில் இருந்தால், ரெய்டு/வழக்குகளைப் பற்றிக் கவலைப்படமாட்டேன். (பாஜகவால் ஒன்றுமே செய்ய இயலாது. ஆனானப்பட்ட 66000 கோடி ரூபாயில் 30000 கோடி சுருட்டியவர்களையே ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏதாவது ஒரு, ஒரு வழக்கிலாவது யாரையாவது உள்ளே வைத்திருக்க பாஜகவால் முடியவில்லை.//
பிஜேபியின் நோக்கம் ஊழல் வாதிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பது அல்ல. அவர்களை அடக்கி வைப்பது மட்டுமே. உதாரணத்துக்கு தீதி! எவ்வளவு குதித்துக்கொண்டிருந்தார்! இப்போது சத்தத்தையே காணோம்! மிக சமீபத்திய உதாரணம் சந்திரசேகர் ராவ்! திமுக ரொம்ப குதித்தால் அவர்களுக்கும் இதே கதிதான். அது அவர்களுக்கும் தெரியும். அதனால்தான், வீர வசனமெல்லாம் தமிழ் நாட்டில் மட்டும் பேசிவிட்டு டெல்லியில் குழைகிறார்கள்.
கட்சியை பிளக்கும் அளவு கனிமொழி செல்வாக்கு மிகுந்தவர் அல்ல. என்ன இருந்தாலும் இன்னொரு (மூன்றாவது?) குடும்பத்திலுருந்து வந்தவர் என்பதால் ஒரு அளவுக்கு மேல் வளரவே விடமாட்டார்கள்!
//பிஜேபியின் நோக்கம் ஊழல் வாதிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பது அல்ல. அவர்களை அடக்கி வைப்பது மட்டுமே. உதாரணத்துக்கு தீதி! எவ்வளவு குதித்துக்கொண்டிருந்தார்! // – இதுதான் பாஜகவின் நோக்கம் என்றால், அவர்கள் நோக்கம் மிகத் தவறானது. இன்றைக்கு 2ஜி என்ற ஊழலே நடக்கவில்லை, உச்ச நீதிமன்றமே, 2ஜி ஊழல் நடைபெறவில்லை என்று சொல்லிவிட்டது, பாஜகவுக்காக வினோத்ராய் நடத்திய நாடகம் இது. இதில் அன்னா ஹசாரே போன்றோரும் அடங்குவர் என்று பேசும் அளவுக்குக் கொண்டுவந்துவிட்டது பாஜக தானே.
எல்லா அரசு அதிகாரங்களும் இருந்தும், ஒருவனையும் கம்பி எண்ணவைக்க முடியவில்லை என்றால், பாஜக எந்த முகத்தை வைத்துக்கொண்டு யாரையும் குற்றம் சாற்ற முடியும்? வாத்ரா, ப.சி, திமுக கும்பல். ஆ.ராசா, தயாநிதி மாறன், கலைஞர் தொலைக்காட்சி 250 கோடி லஞ்சம்…. என்று யாரையுமே வழக்கில் மாட்ட முடியாவிட்டால், அவர்கள் குற்றம் செய்தார்கள் என்று வெறும்ன சொல்லுவதில் என்ன பிரயோசனம்?
//வீர வசனமெல்லாம் தமிழ் நாட்டில் மட்டும் பேசிவிட்டு // – இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பிரதமர் முன்னாலேயே ஒன்றிய அரசு என்றெல்லாம் அளவுக்கு அதிகமாகப் பேசி அவமானப்படுத்திவிட்டு (தமிழக மக்கள் முன்பு. ஏனென்றால் தொலைக்காட்சிகள் ஊடகங்கள் இதனைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது), தில்லியில் காலில் விழுந்தால் யாருக்குத் தெரியும்? ஜெ.வுக்கு இருந்த சாமர்த்தியம் பாஜகவுக்கு இல்லையே. (கேகேஎஸெஸார் ராமசந்திரன், காலில் விழுந்ததை போட்டோ எடுத்து அன்றே மாலைமலரில் வரவழைத்தது சாமர்த்தியம் அல்லவா?). பாஜக இமேஜ் , மோடி இமேஜ் தமிழகத்தில் தவறாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறதே..
நான் எடப்பாடி பற்றி யோசித்துப் பார்த்தேன். அவரும் சசிகலா காலில் விழுந்தவர்தாம். ஆனால், மூன்று முறை முதலமைச்சராக ஜெ. வால் ஆக்கப்பட்ட ஓபிஎஸ் ஐ, சசிகலா எப்படி அவமானப்படுத்தி, தன்னை முதலமைச்சர் நாற்காலிக்கு உட்கார வைத்தார் என்பதை யோசித்துப் பார்த்திருப்பார். ஜெ.வை ஆட்டிப்படைக்க நினைத்த, ஜெ.வை முழுமையாக மாட்டிவிட்ட சசிகலா கும்பல், தனக்கும் பின்பு ஆப்பு வைக்க அஞ்சாது, கப்பம் தான் கொடுக்கணும், ஆனால் மாட்டிக்கொண்டால் தனக்குத்தான் சிறை என்பதைக்கூட யோசித்திருக்க மாட்டாரா எடப்பாடி? அதனால்தான் தனக்கு முதலமைச்சர் பதவி வந்ததும், கடவுள் கொடுத்த வரமாக சசிகலா உள்ளே சென்றதும், முதலில் சசிகலா கும்பலைக் கழற்றிவிட்டுவிட்டார். ஓபிஎஸ் அதிமுகவிற்கு உண்மையாக இல்லை, பாஜகவின் தாளத்திற்கேற்ப ஆடி அதிமுகவை, தன்னை பலவீனப்படுத்துகிறார் என்பதையெல்லாம் அவதானித்து, தன்னை பலவீனப்படுத்துவதற்காகவே அதிமுக தோற்றாலும் பாதகமில்லை என்று தென் மாவட்டங்களில் அதிமுக தோற்க காரணமாக இருந்து திமுகவை ஆட்சிக்கு வரவைத்தார் என்பதைக்கூட அவரால் கவனிக்காமல் இருந்திருக்கமுடியுமா? ஓபிஎஸ் பையன், அதிமுகவின் ஒரே எம்.பி ரவீந்திரன், ஸ்டாலினைச் சந்தித்து அவரைப் புகழ்ந்தது..என்றெல்லாம் அதிமுகவிற்கு குழியைத் தோண்ட ஓபிஎஸ் முயல்கிறார் என்பதைப் புரிந்து, முழுவதுமாக ஓபிஎஸ் ஐ, அவர் கழற்றிவிட்டுவிட்டார்.
ஓபிஎஸ் என்ன செய்திருக்கவேண்டும்? பாஜக என்ற கட்சியை, ஜெ. எவ்வாறு தூரத்தில் வைத்திருந்தாரோ அப்படி வைத்திருக்கவேண்டும். எடப்பாடிக்கு உறுதுணையாக இருந்து, கட்சியின் இரண்டாவது தலைவராக இருந்திருக்கவேண்டும். எப்போது தான் இருக்கும் மரத்தின் அடிமரத்தை வெட்ட, இன்னொருவரிடம் அருவாள் வாங்கினாரோ அப்போதே பதவிக்காக எதையும் செய்யும் எட்டப்பன் நிலையை அவர் அடைந்துவிட்டார் என்பது புரிந்துவிட்டது.
சசிகலா, ஜெ.வின் விருப்பத்துக்கு மாறாக, தினகரனை கட்சியில் கொண்டுவந்தது, ஜெ. உடல் நிலை சரியில்லாதபோது நடந்துகொண்டது என்று அதிமுக தொண்டர்கள் மனதிலிருந்து எப்போதோ தன் செயல்களால் வெளியேற்றப்பட்டுவிட்டார். அதிமுக தொண்டர்கள், எப்போதுமே, ஜெ. ஊழல் செய்தார், சொத்து சேர்த்தார் என்று நினைப்பதில்லை. சசிகலாதான் அத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்றே நினைக்கிறார்கள்.
அதனால்தான் அதிமுக என்றால் எடப்பாடி என்று நான் நினைக்கிறேன். அவர் ஜெ.வைப்போலவே பாஜகவை தூரத்தில் வைத்திருக்கிறார், அதனால் நினைத்த அளவு சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காதபோதும், அதிலும் கிறித்துவ வாக்குகள். அதனால்தான் அதிமுக என்ற கட்சியில் என் ஃபேவரைட் எடப்பாடி அவர்கள்.
.
//அவர் ஜெ.வைப்போலவே பாஜகவை
தூரத்தில் வைத்திருக்கிறார், //
😊😊😊😊😊😊😊😊