
……..
நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே, திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
திருவாளர் திருமா’விடம் சொல்கிறார்…
” எனக்கு உங்க மேல பயம் இல்ல “
இந்த ஸ்டேட்மெண்டுக்கும், “எங்க அப்பன் குதிருக்குள் இல்ல”
என்கிற புகழ் பெற்ற சொல்வடைக்கும் எதாவது தொடர்பு
இருப்பதாகத் தோன்றுகிறதா….?
beautiful mind இருப்பவர்களிடம் – துவக்கத்திலேயே
பயம் பற்றிய பேச்சு ஏன் வருகிறது….?
லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் கேட்க வேண்டிய கேள்விகள்
நமக்கு நிறைய இருக்கின்றன…. இருந்தாலும், வீடியோவின்
ஒரு சிறு பகுதி மட்டும்தான் வெளிவந்திருப்பதால், மிச்சமும்
வந்த பிறகு மற்ற கேள்விகளை வைத்துக் கொள்ளலாம்.
முதலில் சில மட்டும் –
- இந்த கூட்டம் நிகழ்ந்தது எந்த அரங்கத்தில்….?
-இதை ஸ்பான்ஸர் செய்தது யார், எந்த நிறுவனம் …?
-அங்கே அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் யார்….?
-அந்த பார்வையாளர்களை அங்கே “ஏற்பாடு” செய்து
அழைத்து வந்தது யார்…? - பார்வையாளர்களுக்கு, நுழைவுக்கட்டணம் அல்லது அழைப்பிதழ்
எதாவது உண்டா…? - இந்த தலைப்பை – ” beautiful minds/மக்களுடன் திருமா “-
தேர்ந்தடுத்து கொடுத்தவர் யார்….?
-இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக,
உங்களுக்கும், திருமா அவர்களுக்கும் பணம்/சன்மானம்
எதாவது கிடைத்ததா…? என்ன/எவ்வளவு…?
சரி – காணொலி பேட்டியின் –
சிறு முதல் பகுதிக்குள் செல்வோம்….
.
……………………………………..
முதலில், சாம்பிளுக்கு,
லக்ஷ்மி ராம்கி’யின் ஷார்ட்ஸ் அறிமுகமொன்று –
…………………….
……………………
.
………………………………………………………………………………………………………………………………………
காசியில் மந்திரித்து எடுக்கப்பட்ட தாயத்து, சித்தமருத்துவர் சித் சபேசன், குபேர யந்திரம் போன்ற பலவற்றிர்க்கும் தொலைக்காட்சிகளில் விளம்பரதார்ர்களால் வாங்கப்பட்ட நிகழ்ச்சிகள் அவர்களுடைய தயார் செய்யப்பட்ட ஆடியன்ஸைக் கொண்டு நடைபெறுவதைப் பார்த்திருக்கிறோம். இத்துடன் சென்னைக்கு மிக அருகில் திருச்சிக்கு 100 கிமீ அருகில் கல்லூரி மருத்துவமனை நெடுஞ்சாலை அருகே உள்ள வீட்டுமனை விற்பனைக்கு என்ற விளம்பரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றைப் போன்றதொரு நிகழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்துகொள்வதில் உங்களுக்குள்ள மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக்கொண்டது. நன்றி.