திமுக – காங்கிரஸை கழட்டி விடுகிறது …!!!

……………………………………………….

நான் ஏற்கெனவே இங்கே எழுதி வரும்
விஷயம் தான் ……. அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக
திமுக – காங்கிரஸ் கட்சியை தங்கள் கூட்டணியிலிருந்து
கழட்டி விடுமென்பது…..ஆனால், இது நிகழ குறைந்த பட்சம் இன்னும் ஒரு ஆண்டு பிடிக்கலாம்….

ஆனால், நண்பர்கள் பலருக்கு இந்த விஷயத்தில்
நம்பிக்கை ஏற்படவில்லை.

எனக்கு தோன்றுவது – காங்கிரஸ், தானாக
வெளியேறாது… திமுக அதை அவமானப்படுத்தி,
தானாகவே வெளியேறக்கூடிய சூழ்நிலையை
உண்டு பண்ணும். பாமகவையும், தேமுதிகவையும்
சேர்த்துக்கொண்டு காங்கிரசுக்கான சீட்டுகளை
குறைக்கும்…


விளைவு – வெளியேறும் காங்கிரசுடன், திருமா,
கமல் ஆகியோர் சேர்ந்து கொள்வார்கள்.
எடப்பாடி, பாஜக-வை ஏமாற்றிவிட்டு,
இறுதியில் காங்கிரசுடன் சேர்ந்து கொள்வார்…
இன்னும் நிறைய காட்சிகள் அரசியலில்
அரங்கேறும்….

இப்போது, சவுக்கு சங்கரும் சொல்கிறார் – இன்னும் சில கூடுதல் விஷயங்களையும் சேர்த்து.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது நண்பர்களே …???

( சங்கர் சொல்லும் அனைத்து கருத்துகளையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தயவுசெய்து யாரும் நினைத்து விடாதீர்கள் அவர் சொல்லும் காரணங்களையும்
கேட்போமே என்று மட்டும் தான் சொல்கிறேன்…. !!! )

……………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to திமுக – காங்கிரஸை கழட்டி விடுகிறது …!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    மாடியில் சிபிஐ ரெய்டு…. அந்தத் தேர்தலில் கழுத்தில் கத்தியை வைத்து காங்கிரஸ் அல்லவா 64 சீட்டுகள் பெற்றது. இதில் கருணாநிதி சாமர்த்தியம் எங்கே வந்தது?

    தமிழகத்தில் காங்கிரஸுக்கு கிறிஸ்துவ வாக்குகள் அதிகம். இதை நேர் செய்யும் விதமாக உதயநிதி தான் கிறிஸ்துவர், தன் மனைவி கிறிஸ்துவர் என்று ஒத்துக்கொண்டுள்ளார்.

    காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பதை பாஜக முன்னெடுக்காது என்றே நான் நினைக்கிறேன். இப்போதே காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது. அதனால் முஸ்லீம் வாக்குகள் காங்கிரஸ்/ஆம் ஆத்மிக்குப் பிரிகிறது.

    ஓபிஎஸ் பற்றி சவுக்கு சொல்வது உண்மை. அவர் அதிமுகவின் துரோகி. தனக்கான வாக்கு சதவிகிதம் இல்லாதவர். அதிமுகவிற்கு தென் மாவட்டப் பகுதிகளில் வாக்குகள் மிகவும் குறைவதற்குக் காரணம், கவுண்டர்கள் மேலே வந்து தேவர்கள் தாழ்கிறார்கள் என்ற சாதிக்கணக்குதான்.

    கமலஹாசன் ராகுலுடன் சேர்வதற்கு (அந்த நடைப்பயணத்தில் இணைந்துகொண்டதற்கு) கிறிஸ்துவ சக்திகள்தான் காரணம்.

    எனக்கு, திமுக காங்கிரஸை விட்டுவிடாது என்று தோன்றுகிறது. பாமக வை உள்ளே கொண்டுவர முயலும். தேதிமுகவையும் முயலலாம் (அல்லது தேதிமுக பாஜக பக்கம் போகலாம்). பிரிந்த அதிமுகவுடன் பாஜக சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதைவிட பாஜக அதிமுகவை விட்டுப் பிரியவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். அதற்கான காரணம், பாஜக வின் வாக்கு வங்கி எவ்வளவு என்று தெரியவேண்டும். சும்மா 10 சதம், 12 சதம் என்று சொல்வதில் பிரயோசனமில்லை. திமுகவின் வாக்கு சதம் 22-24 இருக்கலாம் என்பது என் யூகம். காங்கிரஸ் 4 சதம், பாமக 4, விசிக 1.5, தேதிமுக 2 சதம் என்று இருக்கலாம். ஒன்றுபட்ட அதிமுக 30 சதம் இருக்கும் என்று நினைக்கிறேன் (மனதால் ஒன்றுபடணும். சட்ட மன்றத் தேர்தலில் ஓபிஎஸ் துரோகம் செய்ததுபோல ஆனால், அதிமுக வாக்கு சதம் குறையும்). நடுநிலை மக்களின் வாக்கு சதம் 20 இருக்கலாம். நான் குறிப்பிடும் வாக்கு சதம், கூட்டணியைப் பொருத்து அதிகமாகும், காரணம் நடுநிலை மக்களின் வாக்குகள்தாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.