……………………………

…………………………………………………………….
இன்டலெக்சுவல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,
புத்தக வெளியீட்டாளர், பதிப்பக உரிமையாளர், என்று
பல வேறு முகங்களுடன், பாஜக ஆதரவாளர்
என்கிற பெயரும் உண்டு பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு ….
இந்த விரிவான காணொலியில் –
இது நடந்தால் மிகவும் நல்லது,
ஆனால், நடக்குமா….?
என்கிற ஆதங்கத்துடன் பிரச்சினையை வெகு விவரமாக
அலசி இருக்கிறார் …
தமிழகத்தில் ஊழல் சர்வ சகஜம் என்கிற அவலம்
துடைத்தெறியப்பட வேண்டுமென்றால்,
அண்ணாமலை இந்த விஷயத்தில்
நிச்சயம் வெற்றி பெற வேண்டும் –
- என்கிற விருப்பம்,
பாஜக சார்ந்தவனல்ல என்றாலும் கூட,
தமிழகத்தின் நலனில் அக்கறை உடையவன்
என்கிற முறையில் – எனக்கும் உண்டு.
இந்த விஷயத்தை ஏப்ரல் வரை தள்ளிப்போடாமல்,
சூட்டோடு சூடாக,
( strike – when the iron is hot)
விஷயம் சூடாக இருக்கும்போதே –
விரைவாகத் துவக்க வேண்டும்.
பத்ரி போன்ற பலர் அவருக்கு உதவக்கூடும்…
அவர்களையும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்;
செய்வாரா அண்ணாமலை ….???
.
………………………………
முடியாது…முடியாது. நிச்சயம் முடியவே முடியாது.
ஒரு ஊழல் வழக்கிற்காக யாரையாவது சிறையில் தள்ளியிருந்தால் (நேரத்தில்) அரசியல்வாதிகளுக்கு இதைப்பற்றி ஒரு பயம் இருக்கும். அப்படி இல்லாமல், இந்திரா காந்தியைப்போல் நடந்துகொண்டு, அரசு இயந்திரத்தைத் தவறாக உபயோகித்து ரத்த சொந்தங்களை உள்ளே தள்ளி ஒடிக்க வேண்டியவற்றை ஒடிக்க முடிந்தால், ஒருவேளை முக்கியத் தலைவர்கள் பயப்படலாம். ஒரு குற்றச்சாட்டிலும் ஒருவரையும் தண்டிக்கவோ அரசியலிலிருந்து வீழ்த்தவோ எந்தக் கட்சியினாலும் முடியாது. நம் நீதிமன்றங்கள், சட்டங்கள் அவ்வளவு மாட்சிமை பெற்றவை.
மக்களே ஊழலில் மூழ்கித் திளைக்கும்போது, ஊழல் அரசியல்வாதிகளைப் பற்றி அவர்கள் ஏன் கவலைப்படப்போகிறார்கள்?
இன்றைக்கு அண்ணாமலையைச் சாய்க்க எந்த எந்த விதங்களில் திமுக முயற்சிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியாததல்ல. அதனையும் மீறி, மத்திய அரசின் முழு பக்கபலம் இருப்பதால், ஊழல் பட்டியல்களை அவ்வப்போது மக்களைச் சிந்திக்க வைக்க முடியும். அவ்ளோதான். மற்றபடி எந்த விதமான நடவடிக்கையையையும் யாருமே எடுக்க இயலாது.
இந்தியா ஊழல் அரசியல்வாதிகளின் சொர்க்கம்.
interesting re-actions …
….
interesting re-actions …..
ஊடகவியலாளர் மாலதி மாத்திரம் அல்ல, பலரும் திமுகவின் கொத்தடிமைகள்தாம். அப்படி இல்லையென்றால், அவர்களின் நிலை என்னவாகும் என்ற பயத்தால் கொத்தடிமையாகிவிட்டார்களா என்பது தெரியவில்லை. அல்லது வேறு ஏதாவது கட்டாயமா என்றும் புரியவில்லை
பத்திரிகையாளர் மணி என்றைக்கோ விலை போய்விட்டார். கம்யூனிஸ்டுகள் அல்லது அந்தப் பார்வை உள்ளவர்கள் விலை போகவில்லை என்றால்தான் ஆச்சர்யம். (25 கோடிக்கு விலை போன கட்சி நினைவுக்கு வருகிறதா?) மணியின் இன்றைய நிலை, திமுக கொத்தடிமை.
பிஜேபி ஆளும் மாநிலங்களில் பாலும் தேனும் ஓடுதா
அண்ணாமலை இருந்த கர்நாடகாவில் இல்லாத ஊழலா .
படைப்பை குணா போன்ற தாதாக்களை வைத்திருக்கும் அண்ணாமலையே ஒரு ஊழல் பேர்வழிதானே
பதவியில் இருந்தபோது அண்ணாமலை இதுவரை ஒரு அரசியல்வியாதி மேலாவது நடவடிக்கை ………………………………………………….?
vennilaa r,
மாறுபட்ட கருத்தைச் சொல்லலாம்… தவறில்லை.
ஆனால், தரக்குறைவான, மரியாதைக்குறைவான வார்த்தைகளை
இங்கே பயன்படுத்தக்கூடாது
இந்த தடவை ஒரு சொல்லை மட்டும் நீக்கி இருக்கிறேன்.
தொடர்ந்தால், உங்கள் பின்னூட்டத்தை தவிர்க்க வேண்டியிருக்கும்.
இனி இப்படி எழுதாதீர்கள். எந்த கருத்தைச் சொன்னாலும்,
நாகரிகமாக சொல்லுங்கள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மத்திய அரசை பொறுத்தவரை, காங்கிரஸ், பிஜேபி இரண்டுமே, ஒரே நோக்கத்தின் படி நடக்கின்றன. சட்ட ஒழுங்கு / ஊழல் போன்றவை மற்ற காட்சிகளை அடக்க ஒரு ஆயுதம். வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுப்பதைவிட, அதனால் தனக்கு என்ன ஆதாயம் என்றே பார்க்கின்றன. மேற்கு வங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தீதி எவ்வளவு குதித்தார்? எரிவதை பிடுங்கினார்கள். ஒரேடியாக அடங்கிவிட்டார்! பிஜேபியுடன் கூட்டணி என்று போகமாட்டேரே ஒழிய, மரியாதைக்குரிய எதிரியாக நின்றுவிடுவார்!
இப்போது திமுகவை எடுத்துக்கொள்ளுங்கள். ராஜா எவ்வளவு குதித்தார். தகத்தாய சூரியன் என்று என்னென்னவோ சொன்னார்கள்.. 55 கோடி சொத்தை முடக்கி மூன்று நாட்களுக்கு மேல் ஆகிறது. ஒரு முணுமுணுப்பு கூட இல்லை!
மத்திய அரசை பொறுத்தவரை ஊழல் திமுகவை அடக்கி வைக்க ஒரு ஆயுதம்! அவ்வளவுதான்!
ஆனால், இப்போது திமுக தானே வலியவந்து அடக்கி வைக்க மட்டுமல்ல. மாநிலத்தில் ஆளவும் ஆயுதம் எடுத்துக்கொடுக்கிறார்கள்!
ஊழலை பொறுத்தவரை திமுக தேனெடுத்தவன் புறங்கையை நக்குவான் என்பதை தாண்டி, அவர்கள் தேனை எடுத்தால் மக்களுக்கு புறங்கை மட்டுமே என்றாகிவிட்டது.
ஜகத் ரக்ஷகனை எடுத்துக்கொள்ளுங்கள். 2019இல் சில்வர் பார்க் இன்டர்நேஷனல் என்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட கம்பெனி 25000 கோடி (ஆம், 25000 கோடி தான்!) இலங்கையில் முதலீடு செய்தது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஜகத் ரக்ஷகன் மற்றும் அவர் குடும்பத்தினர் மட்டுமே. இப்போதும் சென்னையில் உள்ளை அக்கார்டு இன்டர்நேஷனல் மற்றும் இன்னும் ஐந்து ஓட்டல்கள் ஜே ஓட்டல் குரூப் என்ற கம்பெனியின் கீழ் வருகின்றன. இதன் மொத்த உரிமையாளர் ஜகத் குடும்பத்தினர்! இந்த ஜே குரூப் ப்பை பார்த்தால் 30-க்கும் மேல் கம்பெனிகளை கொண்டுள்ளது! மதிப்பு 10000 கோடியை தாண்டும்! 2019-இல் எலக்ஷன் கமிஷனில் இவர் சொத்து மதிப்பாக காட்டியது வெறும் 114 கோடி!
டீ ஆர் பாலுவை எடுத்துக்கொள்ளுங்கள். சொத்து மதிப்பாக 2019-இல் எலக்ஷன் கமிஷனில் இவர் காட்டியது வெறும் 20 கோடி! பாவம். அவரிடம் இருக்கும் ஒரே வண்டி ட்ராக்டர் மட்டுமே! அதில் தான் எல்லா இடத்துக்கும் போய்வருகிறார் போல!
ஸ்டாலின் சொத்துமதிப்பாக 2021-இல் எலக்ஷன் கமிஷனில் காட்டியது வெறும் 8 கோடி! அவரிடம் எந்த வண்டியும் இல்லை! எங்கு போனாலும் நடந்தே போகிறார் போல இருக்கிறது! பாவம்!
உதயநிதி சொத்து மதிப்பாக காட்டியது 29 கோடி! அவரிடம் இருப்பது ஒரே ஒரு வண்டி!
இவர்களை அண்ணாமலை முழி பிதுங்க செய்கிறார். இவர்கள் கொடுத்த சொத்து மதிப்பை போஸ்டர் போட்டு ஓட்டினால் வண்டவாளம் தெரியும்!
எலக்ஷன் கமிஷனில் காட்டியதே இவ்வளவு எனும்போது உண்மையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. ஊழலை பொறுத்தவரை திமுக ஒரு லோ ஹாங்கிங் டார்கெட்!
திருநெல்வேலியில் கார் ஓட்டுநர்கள் சொல்றாங்க, பாளை காவேரி மருத்துவமனை கனிமொழியுடையது. பழைய ஓனர்கள் மிரட்டி விரட்டிவிட்டு ஓனராகிட்டாங்கன்னு. திருச்சியில் இருக்கும் நேரு சென்னை காவேரி மருத்துவமனை ஓனராக பேப்பர் சொல்லுது. ஜெகத்துக்கு சத்தியமா 30,000 கோடி சொத்து இருக்காது. அவர் யாருக்கோ பினாமி.