டாக்டர் சு.சுவாமியின் – BJP தலைமையை மாற்றும் முயற்சி பலிக்குமா …???

…….

தமிழில், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும்
விரிவான பேட்டி கீழே –

கடந்த சில மாதங்களாக சுப்பிரமணியன் சுவாமி,
பாஜக தலைமை மீது (மோடிஜி+அமீத்ஜி) மிகக் கடுமையான
விமரிசனங்களை செய்து கொண்டிருந்தார். அவரது
போக்கு, வெகு சீக்கிரம் ஒன்று பாஜக தலைமை அவரை
கட்சியை விட்டு வெளியேற்றும் அல்லது அவர் தானாகவே
வெளியேறி விடுவாரென்று பலரையும் நினைக்க வைத்தது.

ஆனால், இந்த லேடஸ்ட் பேட்டியின் மூலம் – அவரது போக்கு, எதிர்பார்த்ததற்கு மாறாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.

அவர், தானாக பாஜக-வை விட்டு கழண்டுகொள்வதாக இல்லை;
அவர்களாக வெளியேற்றவும் வழி செய்வதாக இல்லை;
மாறாக, உள்ளே இருந்துகொண்டே, தலைமையை மாற்றும்
முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு இறுதிவாக்கில், ஆர்.எஸ்.எஸ் தலைமை –
2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை
தெரியப்படுத்தக் கூடும்… அதுவரை, உள்ளே இருந்துகொண்டே, தலைமையை மாற்றும் தனது முயற்சியை சுப்ரமணியன்
சுவாமி தொடரக்கூடும்….

ஆர்.எஸ்.எஸ்.ஸில், மோடிஜி+அமீத்ஜிக்கு எதிரானவர்களை
ஒன்று திரட்டும் முயற்சியில் சு.சுவாமி இறங்கி இருக்கிறார்
என்று சில செய்திகள் கூறுகின்றன….ஆர்.எஸ்.எஸ்.ஸிலும்,
சு.சுவாமிக்கு ஓரளவு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு என்பது
இங்கு குறிப்பிடத்தக்கது.

அப்படியும், தனது முயற்சி பலிக்கவில்லையென்றால்….?

அடுத்த தேர்தலுக்கு முன்னதாக,
சு.சுவாமி, மம்தா பேனர்ஜியின் ராஜகுரு’வாக மாறக்கூடும்…!!!

விரிவான பேட்டி கீழே –

…………….

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to டாக்டர் சு.சுவாமியின் – BJP தலைமையை மாற்றும் முயற்சி பலிக்குமா …???

  1. புதியவன் சொல்கிறார்:

    இன்று என்னாச்சு… அத்தைக்கு மீசை முளைத்தால்… மாதிரியான தலைப்பு? அமைச்சராகவோ இல்லை போட்டியிட டிக்கெட்டோ தன் சாமர்த்தியத்தால், தன் influenceஆல் பெறமுடியாத சுப்ரமணி சுவாமியா தன் reachக்கும் மேலான, பிரதம மந்திரி வேட்பாளரை மாற்றும் காரியத்தில் ஈடுபடமுடியும்?

    பசி, சுசு போன்றவர்கள், தாங்கள் பதவியில் இருந்தபோது என்ன மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள், தாங்கள் achieve செய்தது என்ன? என்பதை முதலில் லிஸ்ட் போட்டுவிட்டு அடுத்தவருக்கு ஆலோசனையோ இல்லை தங்கள் விருப்பங்களை ஆரூடங்களாகவோ சொல்லலாம் என்பது என் அபிப்ராயம்.

    இப்படித்தான் நீங்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்த பொருளாதாரப் புலி, இலவச பேருந்து பயணத்தால் ஒவ்வொரு குடும்பத்தின் பெண்மணியும் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சேமிக்க முடிகிறது என்று ஒரு புள்ளிவிவரம் கொடுத்து, ‘அட…இது புது கண்டுபிடிப்பாக இருக்கே!’ என்று யோசிக்க வைத்தார்.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    “இன்று என்னாச்சு…”

    எனக்கு ஒன்றும் ஆகவில்லை;

    உங்களுக்குத்தான் ….

    ………………

    பாசம் கண்களை மறைக்கிறது.
    தனக்குப் பிடித்த தலைமையைப்பற்றி
    நெகடிவ்வான செய்திகள் ஏதேனும் வந்தால்,
    அதை படிக்கக்கூட பிடிக்கவில்லை;

    அந்த கருத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று
    யார் உங்களை இங்கே கட்டாயப் படுத்தினார்கள்….?

    ஆனால், படிக்கவே பிடிக்கவில்லை என்றால்
    அதற்கு யாருடைய மனநிலை காரணம்…?

    நான் திறந்த மனதுடன், எந்தவித கட்சி சார்பும் இன்றி,
    எல்லாவற்றையும் படிப்பவன், கேட்பவன், பார்ப்பவன்.
    நான் இப்படித்தான், பல்வேறு விஷயங்களைப் பற்றியும்
    இங்கே எழுதுகிறேன்.

    நேற்று முன் தினம் தான் விவரமாக எழுதியிருந்தேன்.
    நான், எனக்கு தோன்றும் எதையும் இங்கே பிரசுரிப்பதை
    தயவுசெய்து யாரும் தடுக்க வேண்டாமென்று….

    அந்த என் நிலை தவறு என்று அங்கே சொல்லாமல்
    இருந்துவிட்டு – இங்கே வந்து இப்படி மறைமுகமாக
    சொல்கிறீர்களா…?

    …………………………………………………………………….

    ” சுப்ரமணி சுவாமியா தன் reachக்கும் மேலான,
    பிரதம மந்திரி வேட்பாளரை மாற்றும் காரியத்தில்
    ஈடுபடமுடியும்?

    பாஜகவைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ். ஐச் சேர்ந்த
    யாரால் வேண்டுமானாலும் அந்த முயற்சியில்
    ஈடுபட முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா….?

    அந்த முயற்சியின் முடிவு எங்கே போய் நிற்கக்கூடும்
    என்கிற கேள்விக்கும் –
    நானே இறுதியில் கருத்து சொல்லி இருக்கிறேனே
    கவனிக்கவில்லையா….?

    ……………………………………………………………………..

    ” இப்படித்தான் நீங்கள் ஆஹா ஓஹோ என்று
    புகழ்ந்த பொருளாதாரப் புலி, ”

    – நான் எங்கே, எப்போது, யாரை –
    ” பொருளாதாரப்புலி” என்று
    வர்ணித்தேன் என்று தயவுசெய்து எனக்கு
    எடுத்துக் காட்டுங்களேன்…

    உங்களுக்கு பிடிக்காதவர்களைப்பற்றிய செய்தி,
    கட்டுரை, எதையாவது இங்கு வெளியிட்டாலே
    ஏன் உங்களுக்கு இப்படி அலர்ஜி’யாகி விடுகிறது….?

    …………………………………………………….

    தனக்கு எல்லாம் தெரியும் என்று
    நினைத்துக் கொண்டு, தான் சொல்வது மட்டும்
    தான் சரி என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டு,
    தனக்கு பிடிக்காத எதையும் பார்க்கவோ, கேட்கவோ,
    படிக்கவோ- விரும்பாதவர்களைப் பற்றி –
    உங்கள் அபிப்பிராயம் என்ன….?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      //அந்த என் நிலை தவறு என்று அங்கே சொல்லாமல்
      இருந்துவிட்டு – இங்கே வந்து இப்படி மறைமுகமாக
      சொல்கிறீர்களா…?// Please take this in lighter vain.

      பொருளாதாரப் புளி என்று எழுத நினைத்தது தட்டச்சுப் பிழையாக ஆகிவிட்டது. அவரெல்லாம் மத்திய அரசைப் பற்றிப் பேசினார் என்று முக்கியத்துவம் கொடுத்து இங்க பதிவு போட்டிருந்தீங்க. அப்போதே நான் எழுதினேன், மின்னம்பலத்திற்கு ஒரு அஜெண்டா இருக்கிறது என்று. தேர்தல் வந்தவுடன், திமுக மேடை ஏறிய புளி, பதவியை வாங்கிக்கொண்டு கொத்தடிமை வேலை செய்யப்போய்விட்டது. அதற்குப் பிறகு தமிழக இந்திய பொருளாதாரம் பற்றி அவருக்குப் பேசும் தைரியம் இல்லாமல் போய்விட்டது.

      /தனக்கு பிடிக்காத எதையும் பார்க்கவோ, கேட்கவோ,
      படிக்கவோ- விரும்பாதவர்களைப் பற்றி –// – சோவின் கட்டுரைகள், பேட்டிகள் போன்ற பலவும் பலருக்கு ஜீரணிக்க முடியாது, எரிச்சலாக இருக்கும், இவருக்கு ஒரு விலை வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கும். இருந்தாலும் அந்தப் பேட்டிகள், எழுத்துகள், பேச்சுக்களை அனைவரும் கவனிப்பர். காரணம் சோவின் நேர்மை. அது இல்லாத அல்லக்கைகள் மற்றும் கொத்தடிமைகளின் பேச்சைப் படித்து, பார்த்து எதற்கு நேரத்தை வீணடிக்கப் போகிறோம்? ஒரு ஊடகவியலாளர்/பத்திரிகையாளர் ஓரளவு நேர்மையாக அனலைஸ் செய்து பேசும்போது எல்லாத் தரப்பும் அதனைத் தெரிந்துகொள்ள ஆசைப்படும். எப்போது ஒரு கட்சி சார்பாகவோ இல்லை கொத்தடிமையாகவோ நடந்துகொள்ள ஆரம்பிக்கிறாரோ அப்போதே அந்தப் பேச்சை மக்கள் வெறுத்து ஒதுக்குவர்.

      சு.சுவாமியின் பேச்சுகள் எல்லாமே விரக்தியில் வருபவை. மு.ம.ஜோஷி, அத்வானி போன்றோர் அமைதியாகிவிட்டனர். சு.சுவாமி பேசுகிறார். அவ்ளோதான். அவரால் எதையுமே செய்ய முடியாது (அதற்குரிய வயதைக் கடந்துவிட்டார்). சோனியா கும்பலை, சிதம்பரத்தை உள்ளே வைப்பேன் என்றெல்லாம் பேசினார். ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால் இளமையோடு (30-40 வருடங்கள் முன்பு) இருந்திருந்தால் நடத்தக்கூடிய திறமைசாலி அவர். ஆனால் Negative energy கொண்டவர் அவர். (அவருடைய கல்லூரிக்காலத்தில் நடந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். வாட்சப் உபயோகத்தில் தெரிந்துகொண்டேன்)

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    ………………………………..

    // சோவின் கட்டுரைகள், பேட்டிகள் போன்ற பலவும் பலருக்கு ஜீரணிக்க முடியாது, எரிச்சலாக இருக்கும்,

    இருந்தாலும் அந்தப் பேட்டிகள், எழுத்துகள், பேச்சுக்களை அனைவரும் கவனிப்பர். காரணம் சோவின் நேர்மை. அது இல்லாத அல்லக்கைகள் மற்றும் கொத்தடிமைகளின் பேச்சைப் படித்து,
    பார்த்து எதற்கு நேரத்தை வீணடிக்கப் போகிறோம்?

    ஒரு ஊடகவியலாளர்/பத்திரிகையாளர் ஓரளவு நேர்மையாக அனலைஸ் செய்து பேசும்போது எல்லாத் தரப்பும் அதனைத் தெரிந்துகொள்ள ஆசைப்படும். எப்போது ஒரு கட்சி சார்பாகவோ இல்லை கொத்தடிமையாகவோ நடந்துகொள்ள ஆரம்பிக்கிறாரோ அப்போதே அந்தப் பேச்சை மக்கள் வெறுத்து ஒதுக்குவர். //

    ……………………………………………….

    நான் ஆசிரியர் சோ அவர்களை என்
    மானசீக குரு-வாக ஏற்றுக்கொண்டவன்…

    ஆனால் – அவர் இமயமலை
    என்றால் நான் பரங்கிமலை அளவு கூட இல்லை…

    இருந்தாலும் இயன்றவரை அவர் வழியில்
    செல்ல முயற்சிக்கிறேன் ….

    எனவே அவரது குணாதிசயங்கள்
    ஓரளவு என்னிடமும் பிரதிபலிக்கின்றன
    என்று நினக்கிறேன்…..

    இயன்ற வரை வெளிப்படையாக இருக்க/இயங்க
    விரும்புகிறேன்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.