ஆ ஆ ஆ – அவ்வளவு தானா…??? ….இன்னும் கொஞ்சம் நல்லா தேடிப்பாருங்க ஆஃபிசர்ஸ்… !!!

2ஜி-ஸ்பெக்ட்ரம் புகழ், திமுகவின் ஆ. ராசாவின்
பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை
நேற்று முடக்கி உள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை
வெளியிட்ட அறிக்கையில் கோவையில் ராசாவின் பினாமிக்கு
சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் ஆகும்.

2004 – 2007 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும்
வனத்துறை அமைச்சராக ஆ ராசா இருந்த போது
இந்த முறைகேட்டை செய்ததாக கூறப்படுகிறது.

அதாவது ஹரியானவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றிற்கு
ரியல் எஸ்டேட் அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதில்
இந்த நிலம் வளைக்கப்பட்டதாகவும். தனது நண்பர்கள்,
உறவினர்கள் நிறுவனங்கள் மூலம் பினாமி நிறுவனங்களை
உருவாக்கி இந்த நிலத்தை ஆ. ராசா வாங்கியதாக இந்த
அறிக்கையில் கூறப்படுகிறது. இதனால் அந்த நிலங்களை
முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் செய்தி இதழில் இவ்வளவு மட்டுமே உள்ளது….

இது குறித்து மேலும் ஆங்கில நாளிதழ்கள் சொல்வது –

அறிவிக்கப்பட்ட வருமானத்தை விட, 579 % அதிகம் சொத்து
குவித்து வைத்திருந்ததாக, ஒரு வழியாக பல வருட தாமதங்களுக்கு
பிறகு ஆ.ரா.. மீது வழக்கு சிபிஐ தொடுத்துள்ளது….

CBI charges ex-Telecom Minister A. Raja in disproportionate assets case
‘He was in possession of wealth and pecuniary
resources to the extent of ₹5.53 crore, a 579%
deviation from his known sources of income’

………….
“During the course of PMLA [Prevention of Money Laundering Act] investigation, ED has found that the real-estate company has given kickback to A. Raja as quid pro quo for awarding the environmental clearance, around the same period in the year 2007, in the garb
of land commission income in the hands of one
‘benami’ company of A. Raja,” said the ED statement.

The agency alleged that Mr. Raja had incorporated the company in 2007 in the name of his family members and his close family friend, “with the sole objective of using it as a vehicle to park the proceeds of crime”.


https://tamil.oneindia.com/news/chennai/is-enforcement-directorate-moving-its-focus-towards-tamil-nadu-is-dmk-being-targetted/articlecontent-pf831814-490916.html

https://www.thehindu.com/news/national/ed-attaches-45-acre-land-allegedly-linked-to-former-cabinet-minister-a-raja/article66292817.ece

.
…………………………………………………………………………………………………….…..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஆ ஆ ஆ – அவ்வளவு தானா…??? ….இன்னும் கொஞ்சம் நல்லா தேடிப்பாருங்க ஆஃபிசர்ஸ்… !!!

  1. புதியவன் சொல்கிறார்:

    இந்தியாவில் நீதி என்பது கிடைப்பது மிக மிகக் கடினம். நம் நீதித்துறை ஆமையைவிட மெதுவாகச் செயல்படும். 176000 கோடிகளைச் சுருட்டியவரிடம் இத்தனை யுகங்கள் தாண்டி 55 கோடியை முடக்கியுள்ளார்கள் சூரர்கள். அரசியல் திருடர்களை முதலில் சிறையில் போட்டு, அவர்கள் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கும்வரை உள்ளேயே இருத்திவைக்கவேண்டும். இல்லாவிட்டால், ஓசி டிக்கெட் காரன், ஒரு லட்சம் கோடி சொத்தை வைத்திருக்கமுடியுமா?

    முதலில், அனைத்து உறவினர்களின் சொத்தைக் கணக்கெடுத்து அதற்கு விளக்கம் கேட்டிருக்கவேண்டும் 2010லேயே. அப்படிச் செய்திருந்தால், அனைவரும் உள்ளேயே இருந்திருக்கலாம். அதைச் செய்யாமல் சும்மா இருந்தது யார் குற்றம்?

    ஒரு துண்டுச் செய்தியில் படித்தேன். ப.சி. கோஸ் (cabbage) விளைச்சலில்-அவர் வீட்டில் விளைந்தது, கோடிகளைச் சம்பாதித்ததாகக் கணக்குக்கொடுத்திருந்தார். 2014க்குப் பிறகு ஒரு முட்டைக்கோஸ் கூட விளைவிக்கமுடியவில்லை. அப்படி இருக்கிறது நம் தேசம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.