“பாரத் ஜோடோ” வும் -இடது சாரி இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா’வும் –

பாடகர் கிருஷ்ணா, தமிழகத்தில், தன் கர்நாடக
இசைப் புலமைக்காக பிரசித்தி பெற்றவர்….ஆனால், தனது
தொழில் இயல்புக்கு முற்றிலும் மாறானதாக அவருக்கு
இன்னொரு பிம்பம் உண்டு… சிலர் அதை விரும்புவர்.
சிலருக்கு அது பிடிப்பதில்லை;

இடதுசாரி சிந்தனையாளர், மற்றும் சமூக ஆர்வலர்,
செயல்பாட்டாளரான அவர் அடிக்கடி வெளியிடும் சில
வித்தியாசமான கருத்துகள் இளைஞர்களில் பலரை கவர்ந்தாலும், பெரும்பாலான முதியவர்கள் அவற்றை ஏற்பதில்லை.

காங்கிரஸ் கட்சியை என்றுமே டி.எம்.கிருஷ்ணா ஆதரித்ததில்லை;
ஆனால், வித்தியாசமாக, பாரத் ஜோடோ யாத்திரையில்
மத்தியப் பிரதேசத்தில், அவர் ஒரு நாள் ராகுலுடன் சேர்ந்து நடந்தது, பலரை வியப்புடன் பார்க்க வைத்தது….

பாரத் ஜோடோ யாத்திரையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்,
சிந்தனைகளைப் பற்றி விவரித்து, டி.எம். கிருஷ்ணா,
டெக்கான் ஹெரால்டு ஆங்கில பத்திரிகையில் ஒரு கட்டுரை
எழுதி இருக்கிறார்.. அதனை இங்கு பதிப்பிட வேண்டுமென்று
எனக்கு தோன்றியது; கீழே – அப்படியே ஆங்கிலத்தில்…..!!!

இங்கே நான் இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கூற வேண்டி
இருக்கிறது… நான் கிட்டத்தட்ட கடந்த 13 வருடங்களாக இந்த
விமரிசனம் வலைத்தளத்தில் இயங்கி வருகிறேன்…. பழைய
வாசகர்களுக்கு எனது நிலை, எனது எழுத்து எல்லாமே நன்றாக
பழக்கமான விஷயம்.

ஆனால், அண்மையில் பல பாஜக உறுப்பினர்கள் மற்றும்
கட்சி ஆதரவாளர்கள், இந்த வலைத்தளத்திற்கு தொடர்ந்து
வரத்துவங்கி இருக்கிறாகள். வலைத்தளத்தின் வாசகர் எண்ணிக்கை
கூடுவது எனக்கு சந்தோஷமே.

ஆனால், இந்த வாசகர்கள், தாங்கள் விரும்பும் வகையில்,
தாங்கள் விரும்புவனவற்றை மட்டுமே நான் எழுத வேண்டுமென்று
விரும்புகிறார்கள். பாஜகவுக்கு எதிரான செய்திகளையோ,
அல்லது காங்கிரசுக்கு ஆதரவான தகவல்களையோ
நான் வெளியிடுவதையும், எழுதுவதையும் அவர்கள் விரும்புவதில்லை;
இடுகைகளில் வரும் பின்னூட்டங்களைத் தவிர, தனிப்பட்ட
முறையிலும் சிலர் எனக்கு இது குறித்து கடிதமும்
எழுதியிருக்கிறார்கள்.

அவர்களுக்கும், பொதுவாக இந்த வலைத்தள வாசக நண்பர்கள்
அனைவருக்கும் இங்கே நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் வலதுசாரியும் அல்ல…
இடதுசாரியும் அல்ல…
காங்கிரசும் அல்ல …
பாஜக-வும் அல்ல…
வேறு எந்த கட்சிக்காரனும் அல்ல…!!!

எந்தவித சித்தாந்தங்கள் அல்லது
கட்சிகளின் வளையங்களுக்குள் சிக்கி,
கட்டுப்பட்டு இருக்க நான் விரும்பவில்லை;
முற்றிலும் சுதந்திரமாக இருக்கவே/இயங்கவே விரும்புகிறேன்…

இது புதிய நிலை அல்ல…..
இவ்வளவு காலமாக அப்படித்தான் இருந்தேன்…
இனியும் அப்படியே இருக்கவே விரும்புகிறேன்…

எனவே, அத்தகைய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
தயவுசெய்து, என்னை, என் விருப்பம்போல் சுதந்திரமாக
இயங்க விடுங்கள்….

சரியோ, தவறோ – நல்லதோ, கெட்டதோ –
என் மனம் சொல்வதை எழுதத்தான் நான் விரும்புகிறேன்.

என் கோரிக்கை நியாயமானது என்று வாசக நண்பர்கள் பலரும்
ஏற்பார்கள் என்றே நம்புகிறேன்.

வாசக நண்பர்கள், தங்கள் கருத்துகளை, விருப்பங்களை,
தெரிவிப்பதற்கென்றே இருப்பது தான் பின்னூட்ட இடம்.

நான் எழுதும் கருத்துகளை ஏற்பவர்களும் சரி, மறுப்பவர்களும் சரி,
தங்கள் கருத்துகளை தாராளமாக பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள் –
தங்கள் கருத்துகளை தெளிவாக, நாகரிகமான முறையில்
ஏற்றுக்கொள்ளாதவர்களும் ரசிக்கும் விதத்தில் எழுதுங்கள்….!!!

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

கீழே – டி.எம். கிருஷ்ணாவின் டெக்கான் ஹெரால்டு கட்டுரை ……………………………………………………………………………………………………………

https://www.deccanherald.com/opinion/walking-with-rahul-for-a-politics-of-grace-compassion-togetherness-1172734.html

T M Krishna,
DEC 17 2022, 23:48 IST

Walking with Rahul: For a politics of grace,
compassion, togetherness

The Bharat Jodo Yatra began on September 7 in Kanyakumari, Tamil Nadu. Just before the long walk, there was a small prayer meeting at the Gandhi
Mandapam in which some of my students sang
multi-faith hymns.

Ever since then, I have followed the Yatra as it travelled through Kerala, Karnataka, Maharashtra
and onward. Civil society members like myself
grappled with the question of our participation
in it. The Yatra is led by Rahul Gandhi and
organised by the Indian National Congress.

Does our participation mean we subscribe to the
Congress ideology in its entirety? Does it strip us
of our political independence? Will it affect
people’s perception of us?

But, right from the outset, it was clear that this
was not a campaign rally. The messaging was
inarguably universal, welcoming and non-exclusive.
It was an invitation to everyone who believed in a democratic and secular India. A call to all to
awaken from moral stupor. India’s dangerously
steep downward political curve that has normalised
hate has to be arrested. Hence, it is imperative
that we participate in any movement that calls for social embrace and conscientious action.

Rahul must be applauded for walking the talk.
If we do not join the Yatra, we are failing the
nation and, above that, betraying our conscience.

Liberal intellectuals, who have been critical
of the Congress and its dependence on its ‘first family’, have been asking for the collapse of
the Congress’s present framework. But that
does not mean one needs to trivialise what is
a genuine exercise in nation-building. Their
ignoring the Yatra is as unacceptable as the BJP-dominated media keeping it out of the news.

I joined the Yatra for an afternoon in Agar,
Madhya Pradesh, in early December, just a day
before it crossed over into Rajasthan. The
atmosphere radiated positivity and happiness.
Though there were hardened Congress supporters
who just wanted to catch a glimpse of Rahul or
get a picture with him, there were also many who participated because of what the ‘walk’ signified.

An act of coming together that dissolved our differences, even if only for a morning or an
afternoon. This was evident in the little stories
of coming together and the need for harmony that
members of the public shared with Rahul as we
walked.

There was not an iota of hate or negativity toward
any person, political outfit or community.
No hateful sloganeering. The large embrace of the
fast-moving Yatra was beautiful. I also heard how
people from a village in Maharashtra felt
that communal tensions had subsided during the days
the Yatra passed through their region.

Rahul’s demeanour and accessibility has certainly contributed to the warmth that is overflowing
in the Yatra. Despite the many pulls and pushes
from people, he not only remained calm, but more importantly listened to every single person he
came across respectfully.

A person of the Islamic faith tried breaking through
the cordon. When the security stopped him forcefully, his cap fell off. Rahul asked that he be let through
and helped to find and retrieve that symbol of his faith. These little acts of kindness were wonderful
to witness.

They may not mean anything in the larger scheme of things, but when we discuss political leadership, goodness of heart must matter.

My conversations with Rahul were centred around the
need to give societal agency back to the people.
That we need to be driving cultural change that
rejects passivity and the subjugation of the mind
and cultivates harmonious and sensitive co-existence.

It was evident that he has realised that cultural transformation is at the core of inculcating
democratic values. For too long now, we have
neglected cultural realisations, dialogues and
habits. It is not enough for us to recognise that
we are a deeply divided society and put systems
in our Constitution that address this issue. T

his needs to be translated into collective public action, education, and celebration. I believe
that the Bharat Jodo Yatra can be the first step
in this direction.

Columnists and political opponents will want to
measure the Yatra’s success. It may not translate
into votes for the Congress.

For this to translate into anything fruitful for
the party, there is a need for serious changes
within.

But I wonder if the Congress is ready to accept
this new form of politics initiated by Rahul.
A politics that is not trapped purely in
electoral gains and challenges hierarchies within
its leadership. Will an empowered younger
generation and a vocal Congress worker be able
to push back the ‘old guard’?

Even in larger society, this Yatra may not result
in immediate results. But the nature of the
discourse that it has triggered is in itself a
paradigm shift. For too long, our politics
has been offensive, in both senses of the word.

To forge ahead with a politics of grace when we
are surrounded by shouting, chest-thumping,
vulgarity and reactionary abuse is indeed admirable.

Rahul, through this Yatra, has provided a more compassionate and delicate political discourse.
Walking together with people and taking them
along for as long as they want is a beautiful
act of togetherness. A collective movement of
the mind and heart.

About half a kilometre ahead of us was an old man,
in his eighties, walking at a brisk pace. I asked myself, “Why is he here?” Maybe he was an old-time Congress supporter or carried memories of the
freedom struggle. I did not speak to him,
but I would like to believe that the calling came
from within.

A need for a new language in politics, to
bring back the smiles: not the conniving smile of gleefulness, not the smile of a victor, but the
smile of fraternity.

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to “பாரத் ஜோடோ” வும் -இடது சாரி இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா’வும் –

  1. Ramachandran சொல்கிறார்:

    காவிரிமைந்தன் சார்,

    உங்கள் எழுத்தையும், எண்ணங்களயும் விரும்பி,
    10 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து உங்களை
    வாசித்து வருகிறேன். என் போல், பின்னூட்டம்
    எழுதாத உங்கள் வாசகர்கள் மிகப் பல பேருண்டு.
    உங்களைப்போலவே, எந்த கட்சியையும்
    ஏற்றுக்கொள்ள எங்களுக்கும் விருப்பமில்லை.
    நீங்கள் பலமுறை சொன்ன,
    எந்தக் கட்சி என்பதை தேர்தல் சமயத்தில்
    முடிவெடுத்துக் கொள்ளலாமே என்பது
    எனக்கு மிகவும் பிடித்த ஒரு கருத்து.
    தொடர்ந்து உங்கள் விருப்பம்போல், சுதந்திரமாக
    உங்கள் பாணியில் எழுதுங்கள். என்னைப்போல்
    எத்தனையோ சைலண்ட் வாசகர்கள் உங்களுக்கு
    உண்டு என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்களென்று
    நம்புகிறேன்.

    நல்ல ஆரோக்கியத்துடன், நீங்கள் தொடர்ந்து
    பல ஆண்டுகள் எழுதவேண்டுமென்று இறைவனை
    வேண்டுகிறேன்.

    அன்புக்குரிய,
    எஸ்.ராமச்சந்திரன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.