

பெரும்பாலான அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு
ஹிந்திக்கு ஆதரவாக இயங்கி வரும் நிலையில்,
தலைவர்கள், எந்த மாநிலத்திற்கு போனாலும் ஹிந்தியிலேயே
பேசி வரும் நிலையில் – மத்திய அரசிலும் கிட்டத்தட்ட அனைத்து
நடவடிக்கைகளும் ஹிந்தியிலேயே நிகழும் நிலையில் –
கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தை ஒழித்துக்கட்டும்
முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் நிலையில் –
ஹிந்தி ஆட்சிமொழியாக உள்ள மாநிலம்,
ஹிந்தி பெல்ட்டின் முக்கியமான ஓரு மாநிலம்,
அதுவும், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலைச்
சந்திக்கவிருக்கும் ஒரு மாநிலத்தில் –
பொதுக்கூட்டத்தில் நேரடியாக மக்களிடையே,
” நீங்கள் இப்படியே இருந்தால் உருப்பட மாட்டீர்கள்….
ஆங்கிலம் கற்றுக்கொண்டாலொழிய உங்களுக்கு
வளர்ச்சி கிடையாது ” – என்று சொல்ல எந்தவொரு
அரசியல் தலைவருக்கு துணிச்சல் வரும்….?
பத்திரிகைச் செய்தியிலிருந்து ஒரு பகுதி –
…………………………………………………………………………………………..
ராகுல் காந்தி இப்போது ராஜஸ்தானில்
“பாரத் ஜோடோ” பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
ராஜஸ்தானில் ஆல்வார் நகரில் –
பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி,
உலக மக்களிடம் பேச இந்தி பயன்படாது என்றும் மக்கள்
ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“உலகின் பிற மக்களுடன் நீங்கள் பேச விரும்பினால்,
இந்தி உங்களுக்குப் பயன்படாது..
ஆங்கிலம் தான் பயன்படும்.
எனவே, அனைவரும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
நமது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள்
ஆங்கிலம் கற்று, வெளிநாட்டினருடன் போட்டியிட்டு
அவர்களை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
இதற்காகவே ராஜஸ்தானில் 1,700 ஆங்கில வழிப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே .. “
.
…………………………………………..
அப்படியா உண்மையிலயே தைரியமிருந்தால் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பேசட்டும்…
ராகுல் காந்தியின் “தாடி”யை தடவிப் பார்த்து
விளையாடும் மல்லிகார்ஜுன் கார்கே …!!!
…………………..
Appreciate the view. For a healthy democracy there should be contrarian view and absence of a strong opposition for a long time is dangerous.
ஆங்கிலம் மிக முக்கியமானது. அதுதான் நமக்கு ஜன்னல். எல்லோரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவேண்டும். தாய்மொழியும் அவசியம்.
மற்ற மொழிகளெல்லாம், நம் அவசியம் கருதி, அவசியம் ஏற்படும்பொழுது கற்றுக்கொள்ளலாம்.
ராகுல்காந்தியின் நிலைப்பாடு மிகச் சரியானது.
என்னுடைய எண்ணத்தில், ஆங்கிலம் பேசுவது அரசியல்வாதிகளின் தரத்தை உயர்த்தும். இப்படி எழுதும்போதே சாராய அமைச்சர்கள்-டி ஆர் நாலு, அணில், மதவெறியன் தேசத்துக்கு விரோதியான 2 ஜி நினைவில் வந்துபோகின்றனர்