பெரியாரை ” தேசத்துரோக ” குற்றம் சாட்டி, சிறையில்அடைக்கத் துடித்த கருணாநிதியை தெரியுமா உங்களுக்கு….?

“தந்தை பெரியார்” என்று சொந்தம் கொண்டாடி புகழ்ந்து வரும்
இன்றைய திமுக-வை எல்லாருக்கும் தெரியும்…..

ஆனால், இதே பெரியாரை தேசத்துரோக குற்றம் சாட்டி,
சிறையில் அடைக்கச் சொல்லி கடுமையாகப் போராடிய கலைஞர்
கருணாநிதியை இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க முடியும்….?

11-3-1966 – காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது;
தமிழக சட்டமன்றத்தில் பெரியாரை பாதுகாப்பு சட்டத்தில் கைது
செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கருணாநிதி
முழங்கினார் ….. ஏன்….?

05/02/1966 – விடுதலை நாளிதழ் தலையங்கத்தில் பெரியார்
எழுதியது –

“நாளைக்கு ரஷ்யாகாரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால்,
நான் ரஷ்யாகாரனை ஆதரித்து சுட்டுக்கொல்லப்படவோ அல்லது
இந்நாட்டு சிறையில் இருக்கவோ தான் தயாராய் இருப்பேனே ஒழிய காங்கிரஸ் கட்சிக்கு, இந்திய தேசாபிமானத்திற்கு அடிமையாக
ஒரு நிமிஷமும் இருக்க சம்மதிக்க மாட்டேன்.”

அது திமுகவிற்கும் – பெரியாருக்கும் மனஸ்தாபம் இருந்து வந்த
காலம்…. தமிழ் நாட்டில் காமராஜ் அவர்கள் முதலமைச்சராக
இருந்த அந்த காலக்கட்டத்தில் பெரியார், காமராஜருக்காக,
காங்கிரஸை ஆதரித்து வந்தார்.

அதே காலக்கட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக
யாரும் பேசினால் கைது செய்யப்படுவர் எனும் நிலை இருந்தது..

இதை மனதில் வைத்து, கருணாநிதி பெரியாரை மட்டும்
இப்படிப்பட்ட தலையங்கம் எழுதியதற்காக ஏன் கைது செய்யவில்லை என்று காங்கிரஸ் ஆட்சியிடம் கேட்கிறார்…

சட்டசபையில் மு.கருணாநிதி பேசியது =


“பாதுகாப்பு சட்டம் எங்கே போயிற்று?
பாதுகாப்பு சட்டம், பெரியார் என்ற பெயரை கண்டவுடனே
மழுங்கி விட்டதா…? அவர் காலடியில் மண்டியிட்டு விட்டதா?

தேர்தலில் அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற
நப்பாசை காரணமாகத்தான் அவர் மீது நடவடிக்கை
எடுக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறதே தவிர வேறில்லை.
கேவலம் ஒரு சில வோட்டுக்களுக்காக இந்த நிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் போய்விட்டார்களே என்று கவலையாக உள்ளது”

 • என்று 11-03-1966 அன்று கருணாநிதி தமிழக சட்டசபையில் கொந்தளித்தார்.
 • (குறிப்பு: கலைஞரின் சட்டமன்ற உரைகள் புத்தகத்தில்,
 • 3-ஆம் பாகம், பக்கம் எண் 57-இல்)
 • ( நன்றி – சோழன் சிவபாதசேகரன் …)

…………………………………………………………………………………………………………………………………………………..

இது கொசுறு –
காலில் விழுபவர் யார் தெரிகிறதா…!!!

பொது இடத்தில், இத்தனை பேர் பார்க்க, காலில் விழுவது கொஞ்சம் கூட கூச்சமாக இல்லை இந்த சுயமரியாதைப் புலிக்கு…..

மரியாதை, மறுக்காமல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது….என்பது அதைவிட விசேஷம் ….. 😊


……………

.
………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to பெரியாரை ” தேசத்துரோக ” குற்றம் சாட்டி, சிறையில்அடைக்கத் துடித்த கருணாநிதியை தெரியுமா உங்களுக்கு….?

 1. புதியவன் சொல்கிறார்:

  திமுக கொத்தடிமைகளைப் பற்றி எதை எழுதினாலும் உபயோகமில்லை. அவர்களுக்குத் தெரியும், அவர்களது நிலைக்கு ஏற்றபடி பிச்சை போடப்படும். அதை வாங்கிக்கொண்டு திமுக தலைவர் குடும்பத்திற்கு கொத்தடிமையாக இருக்கவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும், கனவிலும் தாங்கள் எந்த முக்கியப் பதவிகளுக்கும் வந்துவிடமுடியாது என்று.

  திமுக தலைமை சொல்லும் அறிவுரை எல்லாம் எதிர்கட்சிகளுக்குத்தான். மற்றபடி திமுக காரர்கள், அவர்களின் காலுக்கும் கீழ்தான் இருக்கவேண்டும். ஆனால் கொஞ்சம்கூட சுரணையோ வெட்கம் மானமோ இல்லாமல், அதிமுக தலைவர்களைப் பற்றி அவர்கள் தலைமைக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று எழுதுவார்கள் (ஜெ காலத்தில்). இந்தக் கொத்தடிமை லிஸ்டில், திமுக உறுப்பினர்களாக இல்லாத, கி வீரமணி, சுபவீ, கோவன், திருமுருகன் காந்தி, சிவகுமார், சூர்யா, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், சித்தார்த் என்று மிகப் பெரிய லிஸ்ட் உண்டு.

  உங்கள் நல்ல நேரம், சட்டமன்றப் புத்தகத்தில் உள்ளதை இங்கு வெளியிட்டிருக்கிறீர்கள். ஈவெரா பெரியார், திமுக தலைவர்களைப் பற்றிப் பேசியதையோ எழுதியவைகளையோ இங்கு கொடுத்திருந்தால், அல்லது அண்ணா, கருணாநிதியைப் பற்றி பாரதிதாசன் எழுதியவைகளைக் கொடுத்திருந்தால், அண்ணா மற்றும் கருணாநிதி, ஈவெரா பெரியாரைப் பற்றி ஆபாசமாக அர்ச்சித்தவைகளை எழுதியிருந்தாலோ, உடனே ‘சட்டம் ஒழுங்கு’ப் பிரச்சனை என்று உங்கள் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கலாம். தமிழகத்தில் ‘கருத்துச் சுதந்திரம்’ என்பது பாஜகவை வசைபாடுவதில், இந்து மதத்தை, இந்து மக்கள் வழிபடும் கடவுளர்களை ஆபாசமாகப் பேசுவதில் மாத்திரம் காண்பிக்கவேண்டும். மற்றபடி திமுக தலைமையையோ இல்லை மற்ற மதத்தினரைப் பற்றி எந்த உண்மைச் செய்தியையும் சொன்னால், உடனே நடவடிக்கை எடுப்பார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.