ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் ……

முதல் முறையாக காங்கிரஸ் கட்சியை ஆதரித்து,
ஒரு பத்திரிகையாளர், அதுவும் தமிழ் பத்திரிகையாளர்
பேசுவதைப் பார்க்க ஆச்சரியமாகத் தான் உள்ளது.

முதலில், பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அவர்களின்
பேட்டி கீழே –

பின்னர், பாரத் ஜோடோ யாத்திரையிலிருந்து
ஒரு சிறு காணோளி –

பின்னர் எனது கருத்துகள் –

………………

கோடீஸ்வரனின் வீடியோவுக்கு கொடுக்கப்பட்டுள்ள
தலைப்பெல்லாம் உண்மை நிலவரத்துக்கு சற்றும்
பொருந்தாதவை ….மிகை…!!!

…………………….

……………….

………….

துக்ளக் ஆசிரியர் சோ, தனது கடைசி வருட கூட்டங்களில்,
அதாவது, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு
பேசிய கூட்டங்களில் ஒரு கருத்தை வலியுறுத்தி பேசுவது வழக்கம்.

பாஜக முன்வைத்த ” காங்கிரஸ் முக்த் பாரத்”
( காங்கிரஸ் இல்லாத பாரதம் ) என்கிற கோஷத்தை
ஆசிரியர் சோ அவர்கள் ஏற்கவில்லை…

” மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் கூட,
காங்கிரஸ் கட்சி வலுவிழந்து போவதை நான் விரும்பவில்லை.
அது இந்த நாட்டிற்கு நல்லதல்ல.

இரண்டு தேசிய கட்சிகள், பாஜகவும், காங்கிரஸும்
ஒன்றுக்கு மற்றொன்று மாற்றாக எப்போதும் வலுவாக
இருக்க வேண்டும்… மாநில கட்சிகள், மத்திய ஆட்சியை
கைப்பற்றுவது நிச்சயமாக விரும்பத்தக்கதல்ல…”

இதே கருத்து தான் எனக்கும்….


காங்கிரஸ் உடனடியாக 24-ல் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு
பலம் பெறும் என்று நான் நினைக்கவில்லை… ஆனாலும் கூட,
கடுமையாக உழைத்து, அந்த கட்சி – மாநில கட்சிகளின்
முன்னிலையில், அகில இந்திய அளவில் காங்கிரஸ் தான்
பாஜவுக்கு மாற்றாக இருக்க முடியும் என்கிற நிலையை
உருவாக்கிக் காட்ட வேண்டும்…..

.
………………………………………………………………………………………………….…..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் ……

 1. புதியவன் சொல்கிறார்:

  தமிழகப் பத்திரிகையாளர்கள்/ஊடகவியலாளர்கள், திமுக தவிர, திமுக குடும்பத்திற்குத் துதிபாடுவது தவிர வேறு எதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்? காங்கிரஸ் ஊடகங்கள் மாத்திரம் ராகுல் காந்தி பற்றிப் பேசியிருக்கின்றன. அதனால் ஊடகங்கள், அவங்களுக்கு எது லாபம் தருமோ, யார் அவங்களுக்குத் தேவையானவற்றைத் தருகிறார்களோ அவர்களை மட்டுமே துதிபாடும், இந்து பத்திரிகை உட்பட. அதனால் ஊடக தர்மத்தை அகில இந்திய அளவில் கோடீஸ்வரன் பேசுவது நகைப்புக்குரியது.

  இரண்டாவது, ராகுல் காந்தி, தன்னுடைய அரசியல் பயணத்தில் சிறுபிள்ளைத்தனமாகவே நடந்துவந்திருக்கிறார். வாய்ப்புகள் இருந்தபோதெல்லாம் பணம் சேர்ப்பது, தாய்லாந்து பயணம், தன்னுடைய சொந்த நாட்டிற்கான பயணம் என்றே பிஸியாக இருந்திருக்கிறார். இல்லாவிட்டால், எங்கோ லண்டனில் இருக்கும் கம்பெனிக்கு எம்.டி.யாக அவர் இருந்திருக்கமுடியுமா? காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, லைம் லைட்டில் இருந்தும், அரசின் ஊழலுக்கு எதிராக ஒரு துரும்பையும் கிள்ளாதவர் ராகுல். தன் சகோதரியின் கணவன் வதேராவின் ஊழலுக்கும், சுருட்டலுக்கும் துணை போனவர் ராகுல் (வதேராவுக்கு ஏர்போர்ட்டில் செக்கிங் கிடையாது என்ற அரசாணை ராகுலுக்குத் தெரியாமலா போட்டிருப்பார்கள்?). ராகுலும் சோனியாவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தனிப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதையும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். அதனால் தேசம் என்று வந்தால், அதற்கு விசுவாசமாக சோனியாவின் கும்பலால் இருக்க முடியாது. அவர்களுடைய தேசம் இத்தாலிதான். அவர்களுடைய தலைவர் போப் தான்.

  அவருடைய நடைப்பயணத்திலும் அவர் செய்த செயல்கள், தங்கிய இடங்கள் எல்லாமே யார் சம்பந்தப்பட்டவை என்று பார்க்கவேண்டும். அவர் வெளிநாட்டு சக்திகள் சொல்படி ஆடுகிறார். இப்போதுகூட காங்கிரஸ் தலைமைக்கு ஒரு கிழட்டு பொம்மையைக் கொண்டுவந்திருக்கிறார்கள் இந்த சோனியா கும்பல்.

  வலுவான எதிர்கட்சி நிச்சயம் தேவை. காங்கிரஸால் அதனை பூர்த்தி செய்ய முடியும். அதற்கு, அந்தக் கட்சி ஒரு நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், ஆம் ஆத்மி காங்கிரஸின் வாக்குகளை, குறிப்பாக முஸ்லீம் வாக்குகளைக் கபளீகரம் செய்வதைத் தவிர்க்க முடியாது.

  ராகுல் காந்திக்கும் அரசியல் கட்சித் தலைவர்களிடத்தில் மரியாதை கிடைப்பதில்லை. சும்மா 4-5 சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு, எங்கள் கூட்டணிதான் இந்த இந்த மாநிலத்தில் ஆட்சி செய்கிறது என்று சொல்லிக்கொள்வதன் மூலம் அவருக்கு என்ன மரியாதை கிடைக்கப்போகிறது?

  //ஆனாலும் கூட, கடுமையாக உழைத்து, அந்த கட்சி – மாநில கட்சிகளின் முன்னிலையில், அகில இந்திய அளவில் காங்கிரஸ் தான்
  பாஜவுக்கு மாற்றாக இருக்க முடியும் என்கிற நிலையை உருவாக்கிக் காட்ட வேண்டும்// – இதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் சோனியா குடும்பத்தின் arrogance. அவர்களுக்குத் தேவை அடிமைகள். நல்ல நல்ல தலைவர்களை, தங்களின் arroganceசினால் இழந்தவர்கள் இந்த சோனியா கும்பல். இத்தாலி மற்றும் மதமாற்றும் கிறித்துவ வெளிநாட்டு சக்திகளின் ஆணைப்படி செயல்படும்வரை காங்கிரஸுக்கு வாக்குகள் கூடாது. அதே சக்திகளின் பார்வை ஆம் ஆத்மி பக்கமும் திரும்பியிருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.