விவேக் – கலைஞர் – மிமிக்ரி ….!!!

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்,
கலைஞர் கருணாநிதியை போற்றும் ஒரு நிகழ்ச்சியில்
கலந்துகொண்டு, அவர் பற்றிய சில நினைவுகளை
பகிர்ந்து கொண்ட…. ஒரு வீடியோவை நேற்று பார்த்தேன்…
பதிவு கீழே –

………….

.
…………………………..

காணொளியை கண்ட பிறகு எனக்குத் தோன்றியது –

நிகழ்ச்சி என்னவோ, கலைஞரின் புகழைப் பேசத்தான்….

விவேக் அவர்களும், நிஜமாகவே அந்த எண்ணத்தில் தான்
இவ்வளவு சிரமப்பட்டு பேசி இருக்கிறார்.

ஆனால், அந்த வீடியோ எத்தகைய எண்ணங்களை
பார்ப்பவர் மனதில் இப்போது தோற்றுவிக்கிறது….?

கலைஞர் மிகச்சிறந்த உழைப்பாளி என்பது உண்மை…
அவர் பல துறைகளிலும் வல்லவர் என்பதும் உண்மை…

ஆனால், இவ்வளவு பெரிய தமிழகத்தை நிர்வகிக்கும்
மிக முக்கியமானபொறுப்பை கலைஞர் ஏற்றிருந்த காலத்தில்,
பொதுமக்களுக்கு/பொதுநலனுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத
ஒரு சர்வசாதாரண விஷயத்திற்காக, அவர் தனது ஒரு முழு நாளை
செலவழித்தது – உண்மையில், பாராட்டத்தக்க விஷயமா….?

ஓரு முதலமைச்சர், மக்கள் நலன் சார்ந்த பணிக்காக தனது
நேரத்தை செலவழிப்பதற்குபதிலாக,
தன் தனிப்பட்ட சந்தோஷத்திற்காக, புகழுக்காக,
இப்படி நேரத்தை வீணடித்தது எந்த விதத்தில்
பாராட்டுதலுக்குரியது …?

அவர் பதவி வகித்த காலங்களில், பாதியை
பாராட்டு விழக்களில் செலவழித்தார் என்பது உண்மையே….
அவரது இந்த பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு,
பலர், “பாசத்தலைவனுக்கு பாராட்டு” என்று விழாக்கள் எடுத்து,
தங்கள் காரியத்தை சாதித்துக் கொண்டதும்
கசப்பான ஒரு உண்மையே.

.
………………………………………………………………………………………………………..…

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to விவேக் – கலைஞர் – மிமிக்ரி ….!!!

 1. Raghuraman சொல்கிறார்:

  Yes This is what Changes is to refer in his answers. It is easy to book hin for script writing and get things done.

  Regards

  Raghuraman

 2. புதியவன் சொல்கிறார்:

  எனக்கு கருணாநிதியைச் சுத்தமாகப் பிடிக்காது. ஊருக்கு உபதேசம் செய்து சொந்தக் குடும்பத்தை வளர்த்துக்கொண்டவர் அவர். அதற்காக எந்த நிலைமைக்கும் சென்றவர் அவர். ஊழல், லஞ்சம், மாட்டிக்கொள்ளாமல் சுருட்டுவது, எல்லாத்துறைகளிலும்-நீதித்துறை உட்பட, ஊழல் மயமாகச் செய்தது என்று அவர் செய்யாத அட்டூழியங்கள் கிடையாது. தன்னுடைய அரசியல் எதிரிகளைச் சாக்கடையிலும் மோசமாக விமர்சித்த மேதாவி. அதனால்தான் அவரை ஒருபோதும் மக்கள் தொடர்ந்து இருமுறை பதவியில் அமர்த்தியது கிடையாது, அவரது ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று அவரே சொல்லமுடிந்ததில்லை, அவர் காலம் முடிந்தபின்னும் அந்தப் பேச்சே எழுந்ததில்லை. இருந்தாலும்,

  /ஆனால், இவ்வளவு பெரிய தமிழகத்தை நிர்வகிக்கும்
  மிக முக்கியமானபொறுப்பை கலைஞர் ஏற்றிருந்த காலத்தில்,
  பொதுமக்களுக்கு/பொதுநலனுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத
  ஒரு சர்வசாதாரண விஷயத்திற்காக, அவர் தனது ஒரு முழு நாளை
  செலவழித்தது – உண்மையில், பாராட்டத்தக்க விஷயமா….?// – பொதுவாழ்வில் பலப் பல வருடங்கள் கழித்த கருணாநிதிக்கு, மக்களிடம் விளம்பரம் பெறவும், தன்னைப் பற்றிப் பிறர் புகழ்வதைக் கேட்கவும் நிரம்ப ஆசை உண்டு. இது அவரது பலவீனம்தான். மாற்றி மாற்றி அவரைத் தொடர்புகொண்டு தினமும் பேசுபவர்கள் எல்லோரும் ‘ஹாஹாஹா’ ரகத்தைச் சேர்ந்தவர்கள் (அதாவது உருப்படியில்லாத, தகுதியற்ற சாராயம், திருட்டு போன்றவற்றில் ஆரம்பித்துத் தங்கள் ‘தகுதி’யை வளர்த்துக்கொண்டவர்கள்). பொதுமக்களோ, எம் ஜி ஆர் அல்லது ஜெயலலிதா மீது வைத்திருந்த அதீத அன்பைத் தன்னிடம் வைக்கவில்லை என்பதை அறிந்தவர் கருணாநிதி. அதனால் அவருக்கு பிறர் தன்னைப் புகழ்வதை மிகவும் விரும்பும் குணம் இருந்தது. இது அவரது பலவீனம்தான். அது பெரிய தவறில்லை என்பது என் அபிப்ராயம். நாள் முழுக்க உடலுழைப்புச் செய்பவன், தன் உடல் வலி தீர சாராயத்தை நாடுவது போன்றது இது.

  இந்த பலவீனத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் வயிரமுத்து போன்ற மூன்றாம்தரமானவர்கள். அவரைப் புகழ்ந்து புகழ்ந்து அரசாங்கத்திலிருந்து நிலம் மற்றும் பல சலுகைகளைப் பெற்று வயிறு வளர்த்தனர். பொதுவாக விவேக், அதிமுக அனுதாபி என்று அறியப்படுகிறவர். அதனால் வாய்ப்பு கிடைத்தபோது கருணாநிதியைப் புகழ்ந்திருக்கிறார்.

  (கருணாநிதியிடம் இருந்த இன்னொரு மோசமான குணம், சொல்லிக் காட்டுவது. அதாவது இந்த வயிரமுத்தே அவருக்கு எதிராகப் பேசியிருந்தாலோ இல்லை மாற்று முகாமுக்குத் தாவியிருந்தாலோ, உடனே, ‘அன்று என் வீட்டில் வந்து நின்றாயே, என்னை அப்படிப் புகழ்ந்தாயே, என் வீட்டில் ஓசிக்கு இட்லி சாப்பிட்டாயே ரேஞ்சுக்குக் கேவலமாகப் பேசுவார். அப்படிப் பேசும்போது அவர்களின் நிலை என்ன என்பது அவர் நினைவுக்கு வராது. இந்திராகாந்தி, ராஜாஜி, காமராஜர் போன்றவர்களைப் பற்றி அவர் பேசாத பேச்சா?)

  • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

   மிகச்சரியாக கூறியுள்ளீர்கள்…

   குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
   மிகைநாடி மிக்க கொளல்.

   என்ற வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்த உத்தமர் 😂

   • புதியவன் சொல்கிறார்:

    இதோ நான் சொன்னபடி, வயிரமுத்து, உதயநிதியை, துணிவு, வாரிசு (அஜித் விஜய் படங்கள் பெயரை வைத்து) என்ற சொற்கள்மூலம் துதிபாட ஆரம்பித்துவிட்டார். இப்படிப்பட்ட குள்ளநரிகள்தாம் கருணாநிதி குடும்பத்தை வளைத்து, தங்களுக்கு வளம் சேர்க்கப்பார்க்கும், அல்லது செய்த தவறுகளிலிருந்து தப்பிக்க அவர்களது ஆதரவைப் பெறும். தன்னுடைய புத்தகங்களுக்கு நோபல் சிபாரிசு வேண்டும் என்பதற்காக கிறித்துவராக மாறியவர்தானே இந்த வயிரமுத்து.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.