பாண்டே – க்கு ஒரு எம்.பி.சீட் பார்சேல்….!!!!

………

” நான் பாஜக இல்லை…இல்லை… இல்லவே இல்லை.. “
என்று சொல்லிக்கொண்டே பாஜகவுக்காக கடுமையாக,
மிகக்கடுமையாக உழைக்கிறார் திரு.ரங்கராஜ் பாண்டே …


அவருக்கு இல்லாத சீட்டா….!!! பாண்டே தகுதியுள்ள நபர்… அவர் எம்.பி. ஆவது வரவேற்கத்தக்கதே …

தமிழ்நாடு இண்டெலெக்சுவல்ஸ் கூட்டத்தில் பாண்டே
அவர்களின் சுவாரஸ்யமான உரை …

……..

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to பாண்டே – க்கு ஒரு எம்.பி.சீட் பார்சேல்….!!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  தமிழக பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனேகமாக எல்லோரும், பணத்துக்கோ திராவிடக் கொள்கைகள் என்ற பெயரில் திமுகவிற்கான ஜால்ராக்களாகவோ, உண்மையை மறைப்பவர்களாகவோ, தங்களுக்கு எது நன்மை தரும் என்பதை மாத்திரம் பார்த்து அதற்கேற்றவாறு செய்திகளைத் தருபவர்களாகவோ இருக்கும்போது, விரல்விட்டு சிலர் தேசியச் சிந்தனையோடோ இல்லை பாரதத்திற்கு எது நல்லது என்று சிந்திப்பவர்களாகவோ இருப்பதைப் பார்க்கும்போது பாஜக ஆதரவாளர்கள் என்று அவர்களை வகைப்படுத்துவது சரியா இல்லை ஓரளவு நியாயமான பத்திரிகையாளர், ஊடகவியலாளர்களில் ஒருவர் என்று வகைப்படுத்துவது சரியா?

  மாரிதாஸ், ரங்கராஜ் பாண்டே, கிஷோர், ராஜவேல் என்று சிலர், ஓரளவு நேர்மையாகவே செய்திகளைத் தருகின்றனர். தேசியச் சிந்தனையையும் கொண்டிருக்கின்றனர்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   .
   நீங்கள் ஒப்புக்கொண்டாலும்,
   கொள்ளாவிட்டாலும், பாண்டே
   பாஜக ஆதரவாளர் தான்…

   பாஜகவுக்கு எதிராக அவர் செய்த
   எதாவது ஒரு விமரிசனத்தையாவது
   காட்டுங்கள் பார்ப்போம்.

   // மாரிதாஸ், ரங்கராஜ் பாண்டே, கிஷோர்,
   ராஜவேல் என்று சிலர், நேர்மையாகவே
   செய்திகளைத் தருகின்றனர். //

   மிகப்பெரிய ஜோக் இது..
   இதை சம்பத்தப்பட்டவர்களே
   ஏற்றுக் கொள்ள மாட்டார்களே…!!!!
   அவர்கள் திராவிட ஆதரவு கும்பலுக்கு
   எதிராக இயங்குகிறார்கள் என்று
   சொல்லுங்கள் … ஏற்றுக் கொள்கிறேன்.
   அதற்காக அவர்கள் சொல்லுவது அனைத்தும்
   சரி என்று ஏற்றுகொள்ள முடியுமா …?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

  எனது குடும்பத்திலிருந்து இனியோருவா் அரசியலுக்கு வரவாய்பில்லை….
  நான் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை…
  நான் அரசியலுக்கு செல்ல மாட்டேன் என சத்தியம் செய்ததாலே எனது மனைவி என்னை காதலிக்க ஒத்துக் கொண்டார்…
  எனக்கு மந்திரி பதவி தேவையில்லை வந்தாலும் அதனை ஏற்று கொள்ளமாட்டேன்…

  இப்படி நேரத்திற்கு ஏற்ற மாதிரி பேசுபவர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் ரங்கராஜ் பாண்டே பாஜகவை ஆதரிப்பதிலோ இல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஆவதில் தவறொன்றுமில்லை

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Karthikeyan Palanisamy,

   // ரங்கராஜ் பாண்டே பாஜகவை
   ஆதரிப்பதிலோ
   இல்லை பாராளுமன்ற உறுப்பினர்
   ஆவதில் தவறொன்றுமில்லை //

   – என்று எழுதி இருக்கிறீர்கள்.

   மேலே நான் எழுதி இருப்பதை மீண்டும்
   ஒருமுறை படித்து விட்டு சொல்லுங்கள் …
   இதற்கு எதிராக நான் எதாவது
   கூறி இருக்கிறேனா…?

   —————–
   பாஜகவுக்காக கடுமையாக,
   மிகக்கடுமையாக உழைக்கிறார்
   திரு.ரங்கராஜ் பாண்டே …

   பாண்டே தகுதியுள்ள நபர்… அவர் எம்.பி. ஆவது வரவேற்கத்தக்கதே …

   ————-
   நான் எழுதி இருப்பதை நீங்கள்
   ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் …?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    ஐய்யா இந்த திருட்டு திராவிட கும்பல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் செய்திருக்கும் செய்துகொண்டிருக்கும் துரோகங்கள் சில விஷயங்களை ஆழமாக படிக்கவிடுவதில்லை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.