
இந்நாள் வரை அற்புதமான இந்த காணொளியை
நான் எப்படி காணாமல் இருந்தேன் என்பது
எனக்கே தெரியவில்லை.
எத்தகைய உளப்பூர்வமான பேச்சு….
ஆணவம் இல்லை…
அகம்பாவம் ஒரு சிறிதும் இல்லை…
அலங்கார வார்த்தைகள் ஏதும் இல்லை …
பொய்யோ, புனைவோ – சேர்க்கவே இல்லை…
அடக்க முடியாத அழுகை ….
அத்தனையும், உள்ளத்தின் உள்ளேயிருந்து அப்படியே
வெளியே வரும் சொற்கள்….
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், கவிஞர் கண்ணதாசனுக்கும்
தனக்கும் இடையே இருந்த நட்பைப்பற்றி சிறந்த சில
பாடல்களூடே சொல்கிறார்….
பாருங்கள்… அவசியம் அனுபவித்து பார்க்க வேண்டிய
ஒரு காணொளி –
…..
.
……………………………………………………………………………………………………….
கவி அசுரன், இசை அசுரன். ஒருவரை இன்னொருவர் நினைவுகூர்ந்தது.. அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்றது…. அருமை அருமை
நிறைகுடங்கள் தளும்புவதில்லை
ஆனால் இப்போதோ குறை குடங்களின் கூத்தாட்டங்கள்தாம்
அந்த இமயங்கள் பணத்தாசையோடு இருந்திருந்தால் சென்னைக்கே அவர்கள்தாம் சொந்தக்காரர்கள்
.
அற்புதமான கலைஞர்கள்.
இந்த மாதிரி மாமனிதர்களை இனி நாம்
எங்கே பார்க்கப் போகிறோம்….
.