
தமிழக பாஜகவில் மோதல் முற்றி, வெளிப்படையாகவே
விவாதங்கள் நடந்து வருகின்றன.
உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதோடு,
பாஜகவில் உள்ள தலைவர்களே
போட்டி போட்டுக்கொண்டு, கட்சியின் மானத்தை
சந்திக்கு கொண்டு வருகிறார்கள்.
இப்போதைய உச்ச விவாதம் – இருக்கப்போவது யார்…
போகப்போவது யார்…? அண்ணாமலையா… கேசவ விநாயகமா…?
தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் – இப்படி பலவீனமடைந்து
வருவது யாருக்கு நல்லது ….?
இதை ஏன் சம்பந்தப்படவர்கள் புரிந்துகொள்ள
மறுக்கிறார்கள்…?
…………………
.
……………………………………………….
தராசு ஷ்யாம்லாம் உள்ளூரில் விலைபோனவர். இப்போ, பெரும்பாலான ஊடகங்கள் நிதியைப் பெற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு செய்திகளை வெளியிடுகின்றன, அல்லது வெளிநாட்டு நிதி மூலமாக (NGO) ஆரம்பிக்கப்படுகின்றன.
திமுக மாவட்டச்செயலாளர், நீதிபதி பதவியில் அமர்த்தப்பட்டது, தங்கள் கட்சி ஊழலுக்குச் சாதகமாகத் தீர்ப்புகள் வாங்கத்தான் என்று தராசு ஷ்யாம் கருத்துச் சொன்னால், பிறகு அண்ணாமலை பற்றி அவர் சொல்லுவதைக் கவனிக்கலாம்.
அண்ணாமலை அவர்கள் ரஜினி கட்சி ஆரம்பித்தால் தலைவராக வந்திருக்கவேண்டியவர் என்று நினைக்கிறேன். பிறகு பாஜக தமிழகத் தலைவராக வந்தார். அவர் அஜெண்டா, தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்துவது. அதனை மிகத் திறம்படச் செய்திருக்கிறார். அவரது வீச்சு, மக்களைக் கவரும் தன்மை, எதையும் நேருக்கு நேராக, நட்புடன் செய்தியாளர்களைச் சந்தித்துத் தன் கருத்துக்களைக் கூறுவது, காசு வாங்கிக்கொண்டு (வெளிநாட்டு நிதியாகவும் இருக்கும்) திமுக சார்பாகக் கேள்விகள் கேட்கும் கெட்ட நோக்குடைய பத்திரிகையாளர் போர்வையில் வரும் வெத்துகளுக்கும் மரியாதையான முறையில் பதில் கூறுகிறார் அண்ணாமலை. அவர் மீது நல்ல மரியாதையைப் பலரும் வைத்திருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். கேசவ விநாயகம் பற்றி ஆஹா ஓஹோ என்று சொல்லும் சிலரின் பேட்டியையும் நான் பார்த்திருக்கிறேன். தமிழகத்துக்கு, தமிழக பாஜகவுக்கு எது நல்லதோ அதனைத்தான் அண்ணாமலை செய்கிறார். இந்த கேவி லாம் யாரென்றே யாருக்குமே தெரியாது. அண்ணாமலை என்ற வெள்ளத்தில், கசடுகள் யாவும் அடித்துச்செல்லப் பட வேண்டியவை என்றே நான் நம்புகிறேன், விரும்புகிறேன், இல.கணேசன் உட்பட.
தமிழக எதிர்கட்சிகள், குறிப்பாக அதிமுக பலவீனமடைந்திருக்கிறது. இதற்கு மிகப் பெரிய காரணம் அதிமுக என்ற கட்சியின் துரோகியாக மாறிவிட்ட ஓபிஎஸ் அவர்களும், தினகரன் அவர்களும்தான். ஓபிஎஸ்ஸும் தினகரனும் சாதி ரீதியாகக் கட்சியை அணுகுகிறார்கள் கட்டமைக்கிறார்கள். ஓபிஎஸ் துரோகம் செய்யாதிருந்தால் அதிமுகவிற்கு இன்னும் 25 எம்.எல்.ஏக்கள் கிடைத்திருப்பர். பாஜகவை பலவீனப்படுத்த சதிச்செயல்கள் நடைபெறுகிறது. அதையும் மீறி அண்ணாமலை சாதிப்பார் என்று நினைக்கிறேன். அண்ணாமலை தவிர்க்கமுடியாத சக்தியாக (அந்தக்கால விஜயகாந்த் போல) மாறியிருக்கிறார். ஒரு சாதாரண மனிதனால் இந்தக் குறுகிய காலத்தில் இவ்வளவு மக்கள் ஆதரவைப் பெற முடிந்தது, அதிலும் பாஜக என்ற கட்சியின் நிழலே இல்லாத தமிழகத்தில் மாற்றத்தை நோக்கிச் செல்லவைத்தது மிகப் பெரிய சாதனைதான்.
இந்த பேட்டி கொடுக்கும் நபரை இப்பொழுதான் பார்க்கிறேன். ஆனால் அதற்குள்ளாகவே, இவர் ஒரு தீர்க்கதரிசி என்பதை போன்ற செய்திகள் தேவைதானா .
அண்ணாமலையை எல்லோரும் ரசிக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். உண்மையில் ஊடகங்கள் மக்களிடம் இருந்து விலகி, தாங்களாகவே ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயலுகிறார்கள். ஆனால் தேர்தல் ரிசல்ட்டுகளை பார்க்கும் பொழுது, என்னால் இந்த மீடியாக்களை நினைக்கும் பொழுது, சிரிப்பை அடக்க முடியவில்லை.
பிஜேபிக்கு பலமுனைகளிலும் எதிரிகள் …
சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்ற பிம்பங்கள் உருவாக்க முனையப்படுகிறது…
ஆனால் இவையனைத்தையும், தனி ஒரு கட்சியாக நின்று கொண்டு , எதிரிகளை பல திசைகளிலும் சிதறடிக்கும் பிஜேபியின் அழகை,கம்பீரத்தை மிகவும் ரசிக்கிறேன்…
2024 தேர்தலில் இவர்கள் ,கை கால்கள் நொறுக்கப்பட்டு,சிதறடிக்க பட போவதை காணுவதர்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
பிஜேபி தொற்கடிக்க படவேண்டுமெனில், உண்மையில் இவர்கள் பிஜேபிக்கு எதிராக பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் இவர்கள் அலறல்கள் அவர்களுக்கு விளம்பரமாகவே அமையும்.
இன்னும் எத்தனை காலம் தான் பிஜேபிக்கு எதிராக போராடப்போகிறார்களோ …
உலக அளவில் கூட, சம்பவங்கள் மோடி அரசின் புகழை பறைசாற்றுவதாகவே உள்ளது.தனி ஒரு சிங்கமாக, ரசியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் துணிவு, அசாத்தியமானது..
அவர் ஊர் சுற்றுகிறார் என்று அரை வேக்காட்டுத்தனமாக கிண்டல் செய்தவர்கள் கூட, இந்தியாவின் உலக அரங்கில் அதன் நட்பு பலம் மேலோங்கி இருப்பதை உணர தொடங்கியிருக்கிறார்கள்..இந்தியா உலக அரங்கில் மிக பெரும் சக்தியாக மெல்ல உருவாகி கொண்டிருக்கிறது என்பதை, உலக அரசியலை கவனித்து கொண்டிருப்பவர்கள் நிச்சயம் ஏற்று கொள்வார்கள் ..