
………………………………………………………
தொலைக்காட்சி பேட்டி என்கிற போர்வையில் இங்கே
அசிங்கம், ஆபாசம், அருவருப்பு அனைத்தும் சேர்ந்து
அரங்கேற்றப்படுகிறது…
மறைந்த தலைவர்களைப்பற்றி, மறைமுகமாக அவதூறுகள்
அள்ளி வீசப்படுகின்றன.
சட்டத்தின் பிடியினுள் வரமாட்டோம் என்கிற தைரியத்தில்
வாய்க்கு வந்ததை எல்லாம் வரைமுறையின்றி பேசுகிறார்கள்.
பேட்டி காண்பவரை பலருக்கும் தெரிந்திருக்கும்.
பேட்டி கொடுப்பவர் – முன்னாள் திமுக/அதிமுக அரசியல் பிரமுகர்
ராஜாராம் அவர்களின் தம்பி என்று சொல்லப்படுகிறார்.
இரண்டும் – இரண்டு வக்கிரங்கள் …
கண்டிக்கத்தக்க, தண்டிக்கத்தக்க ஒரு அசிங்கமான செயல்.
தமிழக அரசு இவர்கள் மீது அவசியம் நடவடிக்கை
எடுக்க வேண்டும்… இல்லையேல், இதுபோல் இன்னும் பல
வக்கிரங்கள் உருவாகும்.
இந்த காணொளியை இங்கே பிரசுரிக்க
எனக்கு பிடிக்கவில்லை. ஆனால்,
இந்த வக்கிரங்களை வெளிப்படுத்த வேறு வழி…..?
……………………….
.
………………………………………………..
//கண்டிக்கத்தக்க, தண்டிக்கத்தக்க ஒரு அசிங்கமான செயல்.
தமிழக அரசு இவர்கள் மீது அவசியம் நடவடிக்கை
எடுக்க வேண்டும்… இல்லையேல், //
கா.மை. சார் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை போலிருக்கு. அதுபோல தமிழ் பத்திரிகைகளையும் படிப்பதில்லை போலிருக்கு.
முஸ்லீம்கள், கிறித்துவர்கள், திக கும்பல், பிரிவினைவாதிகள், கூட்டணிக் கட்சிகள் சம்பந்தப்பட்டிருந்தால், தமிழக அரசு, நிர்வாகத்திற்குக் காது கேட்காது, கண் தெரியாது. ஊடகங்களைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். இந்து மதம், இந்துக்கள் சார்ந்த பிரச்சனைகள் தவிர மற்றவற்றைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். நான் சொல்வதில் உண்மையில்லை என்று நினைத்தால் உதாரணங்கள் பலவற்றை நான் தருகிறேன்.
இதில், தமிழக அரசாம், நடவடிக்கை எடுக்கணுமாம், கண்டிக்கத்தக்கதாம், அசிங்கமானதாம்……
இதெல்லாம் ‘தீப்பொறி’ ஆறுமுகம் பாணி பேச்சு / பேட்டி! பாப்புலாரிட்டிக்காக பேசும் மக்கள். என்ன டெக்னாலஜி முன்னேற்றம் வந்தாலும் அதை வைத்து அந்த காலத்தில் செய்ததையே செய்யும் ஆட்கள்!
கொஞ்சம் பரபரப்பு தலைப்பு மூலம் பலர் பார்ப்பார்கள். பின்னர் குறையும். பிறகு மறையும். கொஞ்ச நாள் கழித்து மறுபடி வரும்!
இதையெல்லாம் ஒழிக்கவே முடியாது. கண்டுக்காமல் செல்ல வேண்டியதுதான்!