

காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் குறித்து
இப்போது பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள்.
(தமிழக அரசியல்வாதிகளின் உரத்த
எதிர்ப்புக் குரல்களின் மூலமாக …!!!)
இந்த நிகழ்ச்சியில் அரசியல் உண்டு தான்…
அந்த வாதத்தை நானும் ஏற்கிறேன்.
ஆனாலும் – இதில்,
அரசியலைத் தவிர்த்தும்
பிற நன்மைகள், பலன்கள் – ஏராளம், ஏராளம் உண்டு.
சில விஷயங்களைப்பற்றி மட்டும் நான் இங்கு
குறிப்பிட விரும்புகிறேன்….
- அகில இந்திய அளவில், எங்கோ அலஹாபாத்’தில்
நடைபெறும் ஒரு விழாவில், மேடையில், பின்னணியில்,
பேனரில், பளிச்சிடும் தமிழுக்கு முக்கிய இடம் ….. - பொதுவாக, ஹிந்தியில் பேசப்படும் உரையை –
தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு கேட்டு தான்
நமக்கு பழக்கம்…
- இங்கே முதன்முறையாக, மேடையில் –
- நிகழ்ச்சி அறிவுப்புகளில், தமிழில் முதலில் பேசப்பட்டு,
- பின்னர் அது ஹிந்தியில் மொழிபெயர்க்கப்படுகிறது…
- இங்கே தமிழுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்
- நம் எல்லாருக்கும் பெருமை…
ஹிந்தியைத் தவிர வேறு எந்த மொழியும் பேசாத – உத்திர பிரதேசத்து முதலமைச்சர் யோகியார், சிவபெருமானால் படைக்கப்பட்ட இரண்டு மிகப்புராதனமான மொழிகள் – தமிழும், சம்ஸ்கிருதமும் என்று அந்த பெரிய கூட்டத்தில் பேசுகிறார். ( மோடிஜிக்கு வேண்டுமானால், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால், யோகியாருக்கு ….??? !!! )
- எனவே பல நல்லவிளைவுகளை எண்ணி,
இந்த நிகழ்ச்சியைப் பற்றிய அரசியலை பேசுவதை
நான் தவிர்க்கிறேன்….
நேற்றைய முன் தினம் காசி பல்கலைக்கழகத்தில்
நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியின் சில
முக்கிய காணொளிகள் கீழே –
…………..
…………..
…………..
.
………………………………………..
தமிழ் மொழியைக் காப்போம், தமிழ், தமிழர் என்று பேசுகிறவர்களில் எத்தனை பேர், தமிழ் வழியில் கல்வி கற்கிறார்கள்? ஸ்டேட் போர்ட் பள்ளிகளை இத்தகையோரில் எத்தனைபேர் நடத்துகிறார்கள்? தமிழுக்குப் போராடுவோம் என்று சொல்பவர்களில் எத்தனைபேருக்கு தமிழில் தவறில்லாமல் பேசத்தெரியும்? இவர்களில் எத்தனைபேருக்கு தமிழ் தாய்மொழி? இதிலெல்லாம் இல்லாத அரசியல், பாஜக நடத்திய காசி தமிழ்ச்சங்கமத்தில் வந்துவிட்டதா?
நம் மொழிக்கும் காசிக்கும் தொடர்பு உண்டு. பாரதியாருக்குச் சிலை அங்கு இருப்பதும் நமக்குத் தெரியும். நம் மொழி இன்னொரு இடத்தில் முன்னிலை பெறும்போது, அதுவும் பிரதமர், உ.பி. முதலமைச்சர் போன்றோர் முன்னிலையில் பெருமை பெறும்போது நமக்கெல்லாம் இயல்பான மகிழ்ச்சிதான். இனியாவது மத்திய அரசுத் திட்டங்களுக்கு தமிழகத்தில், தமிழ்ப்பெயரையும் முன்னிலைப்படுத்தவேண்டும் என்பது எங்களின் விருப்பம். (ஆம் ஆத்மி பீமா யோஜன – இது மாதிரித் திட்டங்கள் தமிழ்பெயரை முன்னிலைப்படுத்தித் தமிழ்நாட்டில் செயல்படவேண்டும்)