நியூயார்க்’கில் – பனிம(ழை)லை …!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

7 Responses to நியூயார்க்’கில் – பனிம(ழை)லை …!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    எனக்கு வாழ்நாள் ஆசை இந்த மாதிரி இடங்களில் சில மாதங்களாவது, இந்தக் காலநிலையில் வாழணும் என்பது. ஆனால் எனக்கு வாய்த்திருந்ததோ கல்ஃப் தேசத்தின் காலநிலை. 90 சத நேரம் ஏஸியில் இருப்பது.

    ஆனால் பலரும் சொல்வது, இந்த மாதிரி – டிகிரில வாழ்வது கஷ்டம், வெளியில் நடப்பது, மரங்களின் கீழ் நிற்பது எல்லாமே ஆபத்து என்று. இருந்தாலும் அந்த அனுபவம் பெறணும் என்று ஆசை. இதை முன்னமேயே சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. கனடாவில் படிக்கும் தன் குழந்தைகளுக்காக, கல்ஃப் தேசத்திலிருந்து ஆறு மாதம் அல்லது ஒன்பது மாதங்களுக்கு ஒருமுறை செல்லும் தாய், 25 வெரைட்டி சைட் டிஷ்களைச் செய்து டிரேக்களில் வைத்து ஃப்ரீசரில் வைத்துவிடுவாராம். பசங்க அவ்வப்போது எடுத்து சூடு படுத்தி, அடுத்த ஆறுமாதத்தை ஓட்டணும். பண்ணிய உணவு ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப்போகாது என்று சொல்வார்… (எனக்கு அத்தகைய உணவே பிடிக்காது. கேட்கும்போதே விசித்திரமாக இருந்தது. ஆனால் கல்ஃபில் கணவன் மனைவி இரண்டு பேரும் வேலை பார்க்கும்போது, சில குடும்பத்தில் வார இறுதியில் பலவகை காய், கூட்டு, குழம்பு செய்து ஃப்ரிட்ஜில் வைத்து அன்றன்றைக்கு சாதம் அல்லது சப்பாத்தி செய்து மற்றவற்றை ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து உபயோகிப்பர்)

  2. bandhu சொல்கிறார்:

    பனிப்பொழிவு படங்களை பார்க்க பிடிக்கும்!

    இரண்டு முறை இந்த பனிப்பொழிவினால் கஷ்டப்பட்டிருக்கிறேன்.

    ஒரு முறை அலுவலக விஷயமாக டென்வர் சென்றிருந்தபோது உடனிருந்தோர் பக்கத்தில் மைதானத்தில் ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கொண்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் வரப்போகிறார்கள். பார்க்கப்போகலாமா என்று கேட்டார்கள். அப்போது மாலை நான்கு மணி. இன்னமும் வெய்யில் இருந்தது. பண்ண ஒரு வேலையும் இல்லாததால் ஆர்வமுடன் நானும் போனேன். ஜோதி வர லேட் ஆகிக்கொண்டே இருந்தது. அதற்குள் பருவநிலை மாறி வெய்யில் குறைந்து பனி பொழிய ஆரம்பித்துவிட்டது. ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் நான் போட்டிருந்த ஷூ பனி குளிரை சமாளிக்கும் தன்மையில் இல்லாததால் கால் இரண்டும் மரத்துப்போக ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் தாக்குப்பிடிக்க முடிந்தது. பிறகு காலை ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. எலும்பை ஊடுருவும் குளிர்! மற்றவர்கள் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என்று சொல்லியும் விடாப்பிடியாக அங்கிருந்து எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு கி மீ நடந்து அங்கிருந்த காப்பிக்கடையில் நுழைந்து அமர்ந்ததும்தான் போன உயிர் வந்தது!

    மற்றொருமுறை குடும்பத்துடன் காரில் போய் பனியில் காரை நிறுத்த முடியாமல் சாலையோரம் இருந்த கம்பங்களில் இடித்து.. கார் நகர முடியாமல் நின்று, கார் கதவுகளில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீர் ஐஸ் ஆக மாறி, பல மணி நேரம் உதவிக்கு யாரும் வராமல் தவித்து நின்று… எப்படியோ கடவுள் புண்ணியத்தில் உயிர் தப்பினோம்!

    பனிப்பொழிவை பார்த்தால் வரும் ஒரே உணர்ச்சி… நல்லவேளை நான் அங்கு இல்லை என்பது தான்!

  3. Arul சொல்கிறார்:

    IT is very difficult to live for another 4 months here in Michigan. I’m in Michigan since 2018…But no other chance as of now..Initial winter is enjoyable for my kids..but after october to March the temparature is always negative (minus -1 to minus -13)..

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Arul,

      I used to see you occassionally
      in this column…
      But I never imagined that you
      will be living in such a terrific
      environment…
      I wish and pray you move to a
      better place early…

      When I went to Gulmarg a few years
      ago, I was caught in a lodge in the night
      with power failure for hours and had
      a small bit of what you are experiencing now.

      I am able to understand your background
      and wondering how you and your family
      are withstanding….

      -With all best wishes,
      Kavirimainthan

      .

      • புதியவன் சொல்கிறார்:

        அழகில் பெரும் ஆபத்து உண்டு என்று இப்படிப் பட்டவர்த்தனமாக எழுதி என் நீண்ட நாள் ஆசையில் எல்லோரும் மண்ணள்ளிப் போடுகிறீர்களே.

      • Arul சொல்கிறார்:

        Thank you KM sir. I’m following your website since 2015 onwards. Even We had little heated argument when you supported JJ in 2016 and you understood my intension not against JJ only about corruption. As of now my kids have got good friends here and not allowed to move other locations though I have got good opportunities…I always used to visit your website and read yours.. Thank you for kind words..

        • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          Dear Arul,

          Fantastic…
          I really do not remember anything
          about what you have said about 2016.

          Is memory loss a Gift or Curse …??? -!!!

          I am happy to know that this Blog
          is liked by you and you are reading since then…

          God is Great..
          I am ageing fast and I do not know
          what is waiting for me.

          I am happy and much relieved to know
          that your kids love that place.
          I wish you and your family
          a very happy life…
          God bless you.

          .
          -with all best wishes,
          Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.