
…………………………………….
குஜராத்திலும், ஹிமாசல் பிரதேசத்திலும் சட்டமன்ற
தேர்தல்கள் நடைபெறுகின்றன… ஹிமாசலில் முடிந்துவிட்டது.
குஜராத்தில் விரைவில் நடக்க இருக்கிறது. ஆனால்,
தேர்தல் முடிவுகள், 2 மாநில தேர்தல்களும் முடிந்த பின்னர்
ஒன்றாகத்தான் அறிவிக்கப்படும்.
இந்த 2 மாநிலங்களிலும், முன் எப்போதும் கண்டிராத
அளவிற்கு பாஜக-வில் அதிருப்தியாளர்கள் வெளிப்பட்டு
இருக்கிறார்கள். இந்த அளவிற்கு அதிருப்தியாளர்கள்
எப்படி உருவானார்கள்…? காரணமென்ன …?
பாஜக அகில இந்திய தலைமையே கவலைப்பட்டு களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது… இந்த அதிருப்தி, தேர்தலில் பாஜக-வின் வெற்றியை பாதிக்கும் அளவிற்கு இருக்குமோ….?
மூத்த பத்திரிகையாளர் மணி, இந்த விஷயத்தை, தன் பார்வையில், கோணத்தில் அலசுகிறார் இங்கே…
……………
.
…………………………………………………………………………………………………………………..….
இந்த மூத்த பத்திரிகையாளர் மணி படு வேஸ்டான ஆள். கம்யூனிஸ்ட், திமுகவிற்குக் கொத்தடிமையாகச் செயல்படக்கூடியவர். இவரைப் போன்றவர்கள் காசுக்கு கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பதால்தான் தமிழக மூமூத்த பத்திரிகையாளர் என்ற லேபிள் போட்டாலே வேஸ்டான ஆட்கள் என்ற எண்ணம் எனக்குத் தோன்றிவிடும். இவர்களுக்கு திமுகவில் நடக்கும் தகிடுதத்தங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது, தமிழகத்தில் நடக்கும் அநியாயங்கள் கண்ணுக்குத் தெரியாது, அல்லது சப்பைக்கட்டு கட்டுவார், இல்லை ‘பொருளாதாரப் புளி’ போல பதுங்குவார். இவர் ஏதோ, ‘தேசிய ஊடகங்கள் பேசவேண்டிய அளவுக்குப் பேசலை’ என்று சொல்பவர், தமிழகத்தில் 1 சதமாவது பத்திரிகையாளர்கள் நேர்மையாக செய்திகளைப் பேசுகிறார்களா? (இவர் உட்பட)
பத்துமாதம் ஆட்சியிலிருக்கும் கட்சிக்கே தமிழகத்தில் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். குஜராத்தில் பாஜகவோ ஐந்து முறை பதவியில் தொடர்ந்து இருக்கிறது. அதனால் கட்சிக்குள் அதிருப்தி இருக்கத்தான் செய்யும்.
குஜராத், ஹிமாச்சல் பிரதேஷ் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இவரைச் சந்திக்கலாம். ஹிமாச்சல் பிரதேஷில் பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை, குஜராத்தில் நல்ல ரிசல்ட் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். அது வரை, கம்யூனிஸ்ட்/திமுக கொத்தடிமை மணி கதறிக்கொண்டுதான் இருக்கணும்.
நேரமிருக்கும்போது, முன்னால் ‘நான் தமிழர்’ அனுதாபி, இந்நாள் தேசிய கட்சியின்பால் கவனம் வைக்கும் பேசு தமிழா பேசு ராஜவேல் அவர்களின் சமீபத்தைய பேட்டியைப் பாருங்கள். திருமுருகன் காந்தி போன்ற கும்பல்கள் நடவடிக்கையை, எதற்காக அவர்கள் மக்களுக்காகக் கவலைப்படுவதுபோல சென்ற ஆட்சியில் நாடகங்கள் நடத்தினர், 800க்கும் அதிகமான போராட்டங்கள் நடத்தினர், வெளிநாட்டு சதி இதில் எவ்வளவுதூரம் இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறார்.