எங்கே போகிறார் எடப்பாடியார்…???

நீண்ட நாட்களாக இருந்த பாஜக-வுடனான உறவை
முறித்துக் கொள்ள எடப்பாடியார் முடிவு செய்து விட்டதாக
அவரது அண்மைய பேச்சுகளும், நடவடிக்கைகளும்
வெளிப்படுத்துகின்றன.

மோடிஜியோ, அமீத்ஜீயோ தமிழகம் வரும்போது மட்டும்
தான் என்றில்லாமல், டெல்லி வரை தாமாகவே மெனக்கெட்டு தேடிச்சென்று, நேரம் கேட்டு சந்தித்ததெல்லாம் அண்மைக்காலம் வரை நடந்துகொண்டு தானிருந்தது….

ஆனால், சமீபத்தில் அமீத்ஜீ சென்னை வந்தபோது, தன்னை
வந்து சந்திக்குமாறு எடப்பாடியாருக்கு செய்தி அனுப்பியதாகவும்
எடப்பாடியார் போகாமல் தவிர்த்து விட்டதாகவும்
செய்திகள் வந்தன… இது குறித்து, 2-3 நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் கேட்டபோது, எடப்பாடியார் சொன்னது –

“அ.தி.மு.க தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க என்பது தேசிய கட்சி. ஒவ்வொரு முறையும் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் வரும்போது சந்திக்க வேண்டும் என்பதில்லை. அ.தி.மு.க – பா.ஜ.க என்பது இரு வேறு கட்சிகள்.”

…..

” 2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி நிச்சயம் அமையும். இதில் அ.ம.மு.க-வுக்கு ஒருபோதும் இடமில்லை.”

……………..

பாஜக தன்னை தனித்தலைவராக அங்கீகரிக்கவில்லை
என்பதாலும், திரும்பத் திரும்ப, ஓபிஎஸ், தினகரன், சசிகலா
ஆகியோருடன் இணைந்து செயல்பட வற்புறுத்துவதாலும்,
பாஜகவை விட்டு நகர எடப்பாடியார் தீர்மானித்து விட்டதாக
தெரிகிறது… மேற்கண்ட பேச்சு அதை உறுதி செய்கிறது…

1. ஆனால், பாஜக தலைமை அதை அவ்வளவு சுலபமாக அனுமதித்து விடுமா…? அவர்களை மீறிக்கொண்டு வெளியேறும் அளவிற்கு எடப்பாடியாருக்கு துணிச்சல் உண்டா….?

2. என்ஃபோர்ஸ்மெண்ட் டைரெக்டரேட், இன்கம் டேக்ஸ் ரெய்டுகளை எதிர்கொள்ள எடப்பாடியாருக்கும், அவரது கட்சியில் உள்ள இதர முன்னாள் அமைச்சர்களுக்கும் வக்கு இருக்கிறதா….?

3. அல்லது அதிமுக-வின் மூன்று அணிகளுடனும், பாஜக தலைமை தனித்தனியாக கூட்டணி ஒப்பந்தம் போட்டுக்கொள்ளுமா … ?

4. ஒரு வேளை எடப்பாடியார் வெளியேறி, காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தால், காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட கிடைக்காது என்பதால், நல்லதாப் போச்சு – தொலைந்துபோ என்று பாஜக அவரை விட்டு விடுமா….?

நிறைய கேள்விகள் – அதைவிட நிறைய சாத்தியக்கூறுகள்…!!!

……………..

இரட்டை இலை சின்னம், அநேகமாக யாருக்கும் கிடைக்காமல்
முடக்கப்படவே வாய்ப்புகள் அதிகம்…

அப்படியானால், எடப்பாடியார் வேறு யார் யாருடன் சேர்வார்…?

தமிழகத்தில் புதிதாக இன்னொரு கூட்டணி உருவாவது
நிச்சயம் என்றே தெரிகிறது… காங்கிரஸை தன் பக்கம்
இழுக்க முடியுமென்று நம்புகிறார் எடப்பாடியார்..

ஆனால், இரட்டை இலை இல்லாத, அரைகுறை அண்ணா திமுக
தலைவராக இருந்தால், எடப்பாடியாருடன் சேர காங்கிரஸ் முன்வருமா…?


எடப்பாடியாருக்காக, திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ்
வெளிவரும் என்று தோன்றவில்லை.

ஓரு வேளை, திமுக, தானாக –
காங்கிரஸை கழட்டி விட்டால், காங்கிரஸ் எடப்பாடியாருடன் இணைய வாய்ப்புண்டு…!!!) (யார் கண்டது, அதுவும் நடக்கலாம்….அரசியலில் எது தான் நடக்காது…? )

பாமக …? ஊஹூம்… பாமக, திமுக பக்கம் போவதற்கான
நேரத்திற்காகவே காத்திருப்பதாகத் தெரிகிறது.

ஒருவேளை, பாமக, திமுக கூட்டணியில் சேர்க்கப்பட்டால்,
அதை பொறுக்க முடியாமல், (விசிக) திருமா – எடப்பாடி பக்கம் வருவதற்கான வாய்ப்பு உண்டு…

காங்கிரஸ் எடப்பாடியாருடன் இல்லை என்றால்,
நாம் தமிழர் சீமான் கூட எடப்பாடியாருடன் இணையலாம்.

ம.நீ.மையம் கமல், திமுக கூட்டணியில் ஐக்கியமாவதற்கான
முகூர்த்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்பதால்,
எடப்பாடியார் பக்கம் திரும்ப மாட்டார்…

ஆக – தமிழகம் எடப்பாடியார் தலைமையில்
புதிய கூட்டணியை விரைவில் சந்திக்குமோ …???

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு – இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால் எடப்பாடியார் இன்னமும் கொஞ்ச காலம் பொறுப்பார்…. இதெல்லாம் நிதானமாகவே – கொஞ்சம் கொஞ்சமாகவே – ஆனால் – நடக்கும் என்று தோன்றுகிறது.

.
………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to எங்கே போகிறார் எடப்பாடியார்…???

  1. புதியவன் சொல்கிறார்:

    பாஜக, தலைவர் ‘கவுண்டர்’, அதனால் முக்குலத்தோர் வாக்குகளைப் பெற ஓபிஎஸ், தினகரன் என்ற கணக்கில் செல்லுவதாக எனக்குத் தோன்றுகிறது. இது சரியாக வரும் என்று எனக்குத் தோன்றவில்லை.

    அதிமுக தலைமை எடப்பாடி வசம்தான். எடப்பாடிக்கு மாத்திரம் மரியாதை கொடுத்தால், கவுண்டர் கட்சியாகிவிடும் என்று பாஜக யோசிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் ஓபிஎஸ், தினகரனை இணைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்றனர்.

    1. ஓபிஎஸ் அதிமுக என்ற கட்சிக்கு விசுவாசமில்லாதவர். அதிமுக தொண்டர்களிடையே அவருக்கு ஆதரவு கிடையாது, கிடைக்காது. அவர் கறையை அப்பிக்கொண்டுவிட்டார்.
    2. தினகரன், ஒருவர் கீழ் பணிபுரியும் இயல்புகொண்டவரல்லர். அதனால் அதிமுக தலைமைக்கு விசுவாசமாக இருக்கவே மாட்டார்.
    நான் அதிமுகவுக்கு எடப்பாடி தலைமை என்பதை ஆதரிக்கிறேன். ஆனால் எடப்பாடி, அதிமுக என்ற கட்சியின்மீது விசுவாசம் கொண்டவர்களை மேலே கொண்டுவரணுமே தவிர, காசை விட்டெறிந்தால் வாலாட்டுபவர்களை வளர்த்துவிடக்கூடாது. அவர்களால் கட்சிக்குச் சேதாரம்தான் ஏற்படும்.

    மக்கள் நீதி மையம் (ஹாஹாஹா கட்சி), நாம் தமிழர் கட்சி ஆகிய இரண்டும் எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் அடுத்த லெட்டர்பேட் கட்சி உதயமாகிவிட்டது என்றுதான் கொள்ளமுடியும். திமுகவும் மதிமுக என்ற லெட்டர் பேட் கட்சியைக் கழற்றிவிடவேண்டும். இதைத் தவிர பச்சமுத்து லெட்டர்பேட், கொங்கு முன்னேற்றக் கழக லெட்டர் பேட், வேல்முருகன் லெட்டர் பேட், விஜயகாந்த் லெட்டர்பேட் போன்ற கட்சிகளைக் கழற்றிவிட்டால்தான் “ஒரு நபர் கட்சி” உருவாவது குறையும்.

    நீங்கள் நினைப்பதுபோல், பாமக, திமுக கூட்டணியில் ஐக்கியமாகும், காங்கிரஸுக்கு குறைவான தொகுதிகள் கிடைக்கும்-போட்டியிட.

    இரட்டை இலை சின்னம் முடக்கப்படாது என்றே நான் நம்புகிறேன். ED/IT Raid – இதெல்லாம் விளையாட்டுகள். தேச நலனுக்குச் சம்பந்தமில்லா விளையாட்டுகள். ED/IT எதையும் இதுவரை நிரூபித்தது கிடையாது. முதலில் லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்தவர்களையும், பி எஸ் என் எல்லிலிருந்து கோடிக்கணக்காகத் திருடியவர்களையும் இதுவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. இதுல புது ரெய்டாம். ஹா ஹா ஹா

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    ஒரு வேளை எடப்பாடியார், பாஜகவை விட்டு நகன்று,
    வேறு புதிய கூட்டணி அமைத்தால், நீங்கள் யாரை
    ஆதரிப்பீர்கள்… பாஜகவையா அல்லது எடப்பாடியாரையா …?

    – வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      நான் இதுவரை தாமரைக்கு வாக்களித்ததில்லை. பாஜக மற்றும் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளை மனதில் வைத்துத்தான் நான் வாக்களிப்பேன். யாரைச்சேர்த்தாலும் கவலையில்லை என்று நினைக்க எடப்பாடி, இன்னும் ஜெ. நிலையை அடையவில்லை. எடப்பாடி, மாவட்ட செயலாளர்கள், மந்திரிகளைத் தக்கவைத்துக்கொண்டது, தலைமைக்குக் கமிஷன் தரவேண்டாம் என்ற டீலில் என்று எங்கோ படித்தேன். வலிமைமிக்க தலைவராக எடப்பாடி முதலில் ஆகட்டும். யாரைக் கூட்டணியில் சேர்க்கிறார் என்று பார்த்துத்தான் அதிமுகவிற்கு வாக்களிக்கவேண்டுமா என்று யோசிப்பேன். துரோகி விசிகவை அதிமுக கூட்டணியில் சேர்த்துவிடக்கூடாது.

      இப்படி எழுதும்போதே, அண்ணாமலை தனித்தலைவராக உருவெடுப்பதையும் பார்க்கிறேன்.

  3. புதியவன் சொல்கிறார்:

    கிறிஸ்தவர்கள், மிஷனரி பின்னணி உடையவர்கள் எல்லோரும் ஒன்று சேர்வார்கள். அதனால் திமுக, காங்கிரஸ், நாம் தமிழர், கமலஹாசனின் கட்சி, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றோர் ஒன்று சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலைச் சந்திப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். சாயம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக முஸ்லீம்களை முன்னிறுத்தும் கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இருக்கும்.

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .
    எடப்பாடியார் என்ன செய்யப் போகிறார் …????

    .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.