
தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள்
எல்லாரும் பம்மிப் பதுங்கி ஒதுங்கி இருக்கும்போது,
திருமதி குஷ்பூ, பிளந்து கட்டுகிறார்….
திருமதி குஷ்பு’ அவர்களின் செய்தியாளர் சந்திப்பு
காணொளி கீழே –
…
.
காணொளியில் அவர் பேசியதன் முக்கிய பகுதியை, தமிழகத்தின் எந்த மீடியாவும் பிரசுரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது …….!!!
……………………….
இதற்கு முன்னதாக,
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு,
பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், உடனடியாக வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் பா.ஜனதா நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு –
திருமதி குஷ்பு பேசியது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விலைவாசியை
உயர்த்தமாட்டோம் என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது. மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது.
பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா?
முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை
என்று நினைக்கிறேன்.
மழைக்காலத்துக்கு முன்பே முன்னேற்பாடுகள் செய்யாததால் சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய பள்ளங்களாக மாறி
உள்ளன. பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கிறார்கள். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. என்னை மிக மோசமாக பேசினார்கள். அது பற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன்.
இது சம்பந்தமாக முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும்
என்றேன். ஆனால் இதுவரை கருத்து சொல்லவில்லை.
இதே நிலை தி.மு.க.வை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டு
இருந்தால் சும்மா இருப்பார்களா? வீட்டில் கல் எறிவார்கள்.
வெளியே நடமாட விடாமல் போராட்டம் நடத்துவார்கள்.
இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் நடத்தும்
45 பள்ளிகளில் இந்தி கற்று தருகிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுவுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது ரூ.720 கோடிக்கு
மது விற்றதாக கொண்டாடுகிறார்கள்.
-இந்த செய்தி மட்டும் தந்தியில் வந்திருக்கிறது….!
.
…………………………………………..
இடுகைக்கு சம்பந்தம் இல்லாத – ஆனால்
சுவாரஸ்யமான ஒரு காணொளி –
https://youtu.be/Ij6A6UZ_P-8
“பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது”,
//காணொளியில் அவர் பேசியதன் முக்கிய பகுதியை, தமிழகத்தின் எந்த மீடியாவும் பிரசுரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ……//
இந்த இரண்டு வரிகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?
இந்த NGOக்கள், திருமுருகன் கும்பல்கள், கோவாலசாமி கும்பல்கள், கூடங்குளம் ஊழல் போராளிகள், மின்னம்பலப் புளிகள் என்று யாரையுமே நான் நம்பாததற்குக் காரணம், அவங்க அஜெண்டாவே வேறு. பணம் வாங்கிக்கொண்டு, அதற்கேற்ப நடப்பவர்கள் அவர்கள். சாராயத்தை ஒழிக்கணும் என்று தெருவில் கூச்சல் போட்டு நாடகம் நடத்திய வைகோ இப்போ என்ன செய்கிறார்? பொருளாதாரம் மோசம் என்று புகார்ப்பட்டியல் வாசித்த புளி இப்போது, எப்படி பொருளாதாரத்தைப் பெருக்கியிருக்கிறார்? தமிழிசை, கனடாவைச் சேர்ந்த பெண்ணுக்கு (கிறித்துவர்) எதிராகப் புகார் கொடுத்ததற்குப் பொங்கிய பயலுகள் எவனும் ஏகப்பட்ட மரணங்கள், போலிக்கைதுகள் நடந்தபோது ஜனநாயகம் காப்பதற்கு வெளியில் வரவில்லையே.. இவனுக சொல்வதை நான் எப்போதுமே நம்புவதில்லை. நீங்களும் எங்களிடம், சொல்பவனைப் பார்க்கக்கூடாது, சொல்லும் விஷயத்தைப் பார்க்கணும் என்று சொல்கிறீர்கள். நான் என்ன நினைக்கிறேன்னா, இந்தச் ‘சொல்லுபவனுகள்’ யோக்கியதையே ஊர் சிரிக்கும்போது அவன் என்ன சொன்னால் என்ன? அதை ஏன் கேட்கணும் என்பதுதான்.