
பாஜக தலைமைக்கு, முக்கியமாக பிரதமர் மோடிஜிக்கு
சுத்தமாக பிடிக்காது என்று தெரிந்திருந்தும், சகட்டுமேனிக்கு
முன்னாள் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கை புகழ்ந்து
தள்ளி இருக்கிறார் மத்திய போக்குவரத்துத் துறை
அமைச்சர் நிதின் கட்கரி…. இப்போது மட்டுமல்ல அடிக்கடி
இப்படிப் பேசுகிறார்.
கட்கரிஜியின் போக்கும், பேச்சும் – பாஜக தலைமையை,
முக்கியமாக பிரதமரை வெறுப்பேத்தும் விதத்திலேயே
அமைகின்றன. முக்கியமாக, அவர் எப்போதுமே
தனது துறையை மட்டும் தனிப்படுத்தியே பேசுகிறார்.
மத்திய அரசின் இதர சாதனைகளையோ, வளர்ச்சித்
திட்டங்களைப் பற்றியோ பேசுவதில்லை.
தன் துறையின் வளர்ச்சி பற்றி மட்டுமே பேசுகிறார்…
அண்மையில் டெல்லியில் மத்திய போக்குவரத்து துறை
அமைச்சர் நிதின் கட்காரி பேசினார். அப்போது அவர்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான
மன்மோகன் சிங்கைப்பற்றி மிகவும் பெருமையாக பேசினார்.
அவரது பொருளாதார சீர்த்திருத்தங்களை புகழ்ந்து
தள்ளினார். கட்கரிஜி பேசி வெளியான பத்திரிகைச் செய்தியிலிருந்து –
……………
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது தொடங்கிய பொருளாதார சீர்த்திருத்தங்களால் தான்இந்தியா புதிய திசையை நோக்கி பயணிக்க துவங்கியது.
இதற்காக நாடு எப்போதும் அவருக்கு கடன்பட்டுள்ளது …
1991ல் மத்திய நிதி அமைச்சராக மன்மோகன் சிங் இருந்தார்.
அவர் தொடங்கிய பொருளாதார சீர்த்திருத்தங்கள் மூலம்
இந்தியா புதிய திசையை நோக்கி பயணிக்க துவங்கியது.
அது தாராளமய பொருளாதாரத்துக்கு வழிவகுத்தது.
இந்த தாராளமயமான பொருளாதார கொள்கை என்பது விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கானது தான்.
இந்த பொருளாதார சீர்த்திருத்தங்களுக்காக முன்னாள்
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த நாடே கடன்பட்டுள்ளது.
1900-ன் மத்திய பகுதியில் நான் மகாராஷ்டிராவில்
அமைச்சராக இருந்தேன். அப்போது மகாராஷ்டிராவில்
சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலைகளுக்கு தேவையான நிதி திரட்டும் பணி துவங்கியது.
இதற்கு மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்த்திருத்தங்கள் முக்கியமாக கைக்கொடுத்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு
தாராளமயமான பொருளாதார கொள்கை எப்படி உதவும் என்பதற்கு சீனா சிறந்த உதாரணமாகும். இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விரைவுப்படுத்தவும்
நாட்டுக்கு அதிக முதலீடு தேவையானதாக உள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத்
துறை ஆணையம் சாமானியர்களிடம் இருந்து நிதி திரட்டி வருகிறது. தற்போது நாட்டில் 26 பசுமை வழி விரைவுச்
சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பணப்பற்றாக்குறை என்பது சுத்தமாக இல்லை.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சுங்கவரி
வருவாய் தற்போது ஆண்டுக்கு 40,000 ஆயிரம் கோடியாக
உள்ளது. 2024 இறுதியில் இது ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும்” என்றார்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
- – தனி ஆவர்த்தனம் நடத்தும் கட்கரிஜியின் மனதில் என்ன இருக்கிறதோ… ?
- – 2024 தேர்தல் நெருங்கும்போது தெரிய வரலாம்…!!!
.
………………………………………………………………………………………………….
தாராளமயமாக்கத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் நரசிம்மராவ். அவரது முயற்சியில்தான் மன்மோகன்சிங்கே வரமுடிந்தது.
கட்கரியின் துறையில் ஏகப்பட்ட சுருட்டல்கள் (நிறைய ப்ராஜக்டுகள்) நடப்பதாகக் கேள்விப்பட்டேன். நிறைய ப்ராஜக்டுகள் நேரத்துக்குள் முடிவதில்லை என்று பிரதமருக்கு வருத்தம் என்றும் கேள்விப்பட்டேன். நிற்க..
//தனி ஆவர்த்தனம் நடத்தும் கட்கரிஜியின் மனதில் என்ன இருக்கிறதோ… ?// – என்ன நடந்தாலும் பத்து வாக்குகளுக்கு மேல் தேறாது. மக்கள் வாக்களிப்பது பாஜக மற்றும் மோடிக்குத்தான் என்று நான் நம்புகிறேன்.
தாராளமயமாக்கல் – இதில் உள்ள நன்மை, மற்ற நாடுகளுக்கு இணையாக முன்னேறும், எல்லாவற்றையும் கொண்டுவரும் தன்மை. வெளிநாட்டு மோஹத்தால், நம் பணம் அதிகமாக வெளிநாடுகளுக்குச் செல்வது (Chain of restaurants, Western shops etc. Amazon…. போன்று)