
புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சனின்,
இல்லத்தில் 2 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட
மேக்கப் இல்லாத தோற்றம் இண்டியன் எக்ஸ்பிரஸ்
ஆங்கில நாளிதழில் வெளியாகி இருக்கிறது.
தலையில் விக் இல்லாமல், மேக் அப் இல்லாமல்,
வெளியாகி இருக்கும் அபூர்வ புகைப்படம் …
திடுக்கிட வைக்கிறது.
அவரை, விக்’ இல்லாமல் பொதுமக்கள் பார்த்ததே
இல்லை. அவரது வயதுக்கு, இது ஓகே தான்….
ஆனால், இவரை விட வயதுகுறைந்த ரஜினியின்
வழுக்கைத்தலை நமக்கு எந்தவித வியப்பையும் ஏற்படுத்துவதில்லை. அவர் ஒரிஜினல் தோற்றத்திலேயே
வெளியே பொதுநிகழ்ச்சிகளுக்கு வருவதால் –
நமக்குப் பழகி விட்டது….!!
நினைத்துப் பார்த்தேன்…
தமிழ்நாட்டில், நடிகர்கள் அல்லாமல்,
வயது கூடிய அரசியல்வாதிகள் சிலரும் கூட,
விக்’குடன், அல்லது தலைக்கும், மீசைக்கும் ‘டை’ அடித்துக்கொண்டு, இளமைத் தோற்றத்துடன் வலம் வருகிறார்கள்.
ஒரு நாள், அவர்களையும் – நாம் அமிதாப் பச்சன்
மாதிரி பார்க்க நேரிட்டால் – எப்படி இருக்கும்…!!! ???
.
………………………………………..


.
…………………………………………………………………………………………………………………………………………
சுடலை
விஜய் 😉
விக், மேக்கப், Pad, Dye இல்லாமல்,திரையுலகினரையும் அரசியல்வாதிகளையும் பார்த்தால் திடுக்கிடுவதைத் தவிர வேறு என்ன நேரும்? இதில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. பலரும் இயல்பாக தங்களுக்கு அமைந்த பிம்பத்தைத் தொடரவேண்டிய நிர்ப்பந்தம். முதல்வர் ஸ்டாலினுக்கு அது செயற்கையாக ஆரம்பித்த விளையாட்டு (தான் இன்னும் இளைஞன் என்றெல்லாம் புதிதாக பிம்பத்தைக் கட்டமைக்க ஆசைப்பட்டிருக்கிறார்)