
……………..
சில நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ…..விதி அதையே அதிகம் நினைக்க வைக்கிறது…….!!
பேசாமல் இருந்து விட்டால் அழிந்து போவதுமொழிகள் மட்டுமல்ல, – சில உறவுகளும் கூடத்தான்..
உனக்கு என்ன கொடுக்க வேண்டும் உன்னிடம் எதை பறிக்கவேண்டும் என்பதை, இறைவனே முடிவு செய்கிறார்….
வலிகளுக்கும் வலிகள் இருந்திருந்தால்.. கண்ணீர் வரும் வரை
கத்தி அழுதிருக்கும்.. தாங்க முடியாமல்..
செய்த உதவியை சொல்லிக் காட்டாதே,..
எவரும் செய்ய தயங்கும் உதவியை செய்து காட்டு….!!
சுமந்து செல்லும் அந்த நான்கு பேர் யாரென்று
தெரிந்து விட்டால் கைமாறு ஏதாவது –
இப்போதே செய்து விடலாம்.!!
வாகனம் ஓட்டும் போது, மொபைலில் பேசுவதை விட
அபாயம் மிக்கது, வாகனம் ஓட்டும் கணவரிடம் –
மனைவி பேசிக் கொண்டே இருப்பது…!!!
படுத்துக்கிட்டு இருக்கும் போதே_
மரணம் வந்தால் பரவாயில்லை,… ஆனால்,
மரணம் வரும் வரை படுத்துக்கிட்டு இருக்கிறது
கொடுமையிலும் கொடுமை.
லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை, சேமிப்பதால் மட்டுமே ஆக முடியும்…..*
உழைக்கும்போது எதிர்காலத்தை நோக்கி சென்ற நினைவுகள்.
ஓய்ந்தபிறகு கடந்த காலத்தை நோக்கி செல்லும்…..
விதையை முழுங்கினால் வயிற்றில் மரம் வளருமென குழந்தைகளிடம் சொன்ன நாம்,
அதே விதையை நிலத்தில் புதைக்க சொல்லிக் கொடுக்க
மறந்து விட்டோம்!!!
நல்ல பெற்றோர், நல்ல துணை , நல்ல நட்பு – என்று
வாழ்ந்து கொண்டு இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட பணம் தான் வாழ்க்கை என்று ஒரு தடவையாவது
நினைக்க வைத்து விடுகிறது இந்த வாழ்க்கை.
பறவைகளை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,
அதுங்க நல்லாவே கூடு கட்டும்…..
அந்த காசுல ஒரு மரம் நடுங்க அது –
அதுகளுக்கும் சேர்த்து பயன்படும்..!!
நம் கனவுகளைப்பற்றி சிந்திப்பதை நிறுத்தி,
நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி
சிந்திக்க துவங்கும் பொழுது முற்றுப் பெறுகிறது –
நம் இளமை…!!!
இதுவும் கடந்து போகும் என்பதை விட,
“இதுவும் பழகி விடும்” என்பதே பொருத்தமாகி
விடுகின்றது பல சமயங்களில் …
பொறந்தா…எத்தனை மணிக்கு பொறந்தான்னு
கேப்பாங்க..!_
அதுவே, செத்தா… எத்தனை மணிக்கு பாடிய
எடுக்க போறாங்கனு கேப்பாங்க.!
- “எல்லாமே டைமிங் தான்”
சொந்த “கால்ல” நிக்கும் போதுதான்..
புது “செருப்பு” வாங்க கூட – யோசிப்போம்….!!!
ஒரே வயிறுனு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்காதீங்க …
அப்புறம் அது, தொப்பைனு பேர் வாங்கிட்டு வந்து நிக்கும் …!!!
எந்த உறவிலும் பிரிவின் வலி தீருவதற்குள் –
பேசி விடுங்கள் – ஏனென்றால்,
வலி பழகிடுச்சுன்னா உறவு நிரந்தரமாக முறிஞ்சுடும்…!!!
சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்,
உண்மையில் – அன்புக்காக ஏங்குபவர்கள்.
இரக்கமும், உறக்கமும் – ஒன்று தான்,
இரண்டையுமே அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்.
அதிகம் உறங்குபவன் -சோம்பேறி ஆகிறான்.
அதிகம் இரக்கம் காட்டுகிறவன் – ஏமாளி ஆகிறான்.
.
……………………………………………………………………………………….…..