“மோர்பி பிரிட்ஜ்(குஜராத்)” அறுந்து விழும் நேரடி காணொளி-நம்புவோம் – நிர்வாகத்திற்கு எதுவுமே தெரியாதாம்….!!!

குஜராத்திலுள்ள ” மோர்பி பிரிட்ஜ் ” அறுந்து விழும்
நேரடி காணொளி காட்சி கீழே –

…………..

…………..

அரசு இயந்திரம் சொல்கிறது –

இந்த ப்ரிட்ஜ் Ajanta Oreva என்கிற கம்பெனிக்கு
ஜனவரி 22-ல் குத்தகைக்கு விட ஒப்பந்தம்
செய்யப்பட்டது.

15 வருட குத்தகை காலத்துக்கு இந்த ப்ரிட்ஜை சீர்செய்து
நிர்வகித்து, உபயோகிப்பாளர்களிடமிருந்து
பணமும் (கட்டணம்) வசூலித்துக் கொள்ளலாம்.

காண்டிராக்டர் வருடத்திற்கு 2 ரூபாய் கட்டண உயர்வு செய்துகொள்ளலாம்.

(துவக்க கட்டணம் எவ்வளவு என்பதை நிர்வாகம்
வெளியிடவில்லை; ஆனால் வேறு செய்திகள்
சொல்கின்றன – ஒவ்வொரு நபருக்கும் -ரூபாய் 17/-

5 மாத பராமரிப்பு/ரிப்பேர் வேலை நடந்த பிறகு,
அக்டோபர் 26-ந்தேதி முதல் பொதுமக்கள் பயன்படுத்த
அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாவட்ட நிர்வாகம் சொல்கிறது….
கலெக்டருக்கோ, மாவட்ட காவல் துறைக்கோ –
இந்த ப்ரிட்ஜ் பயன்பாட்டிற்கு 26-ந்தேதி முதல்
துவக்கப்பட்டதே தெரியாதாம்.

ஆக – நிர்வாகத்திற்கு இந்த விபத்தில் எந்தவித
பொறுப்பும் கிடையாதாம். அவர்களுக்குத்தான்
ப்ரிட்ஜ் பயன்பாட்டிற்கு வந்ததே தெரியாதே ….!!!

நம்புவோம்….

.
………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

8 Responses to “மோர்பி பிரிட்ஜ்(குஜராத்)” அறுந்து விழும் நேரடி காணொளி-நம்புவோம் – நிர்வாகத்திற்கு எதுவுமே தெரியாதாம்….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  //5 மாத பராமரிப்பு/ரிப்பேர் வேலை நடந்த பிறகு,
  அக்டோபர் 26-ந்தேதி முதல் பொதுமக்கள் பயன்படுத்த
  அனுமதிக்கப்படுகிறார்கள்.// – பாவம் அதன் ஊழியர்கள். அவங்க, பொதுமக்களுக்கு டிக்கெட் போடணும், பணத்தை வாங்கணும், போன்பே கூகுள் பே போன்றவற்றிர்க்கு வழி செய்யணும் என்று கடுமையாக உழைத்துக்கொண்டிந்தார்கள். அவசரத்துல, பாலத்துக்கு ரிப்பேர்/பராமரிப்பு செய்யணும் என்பதை மாத்திரம் மறந்துவிட்டாங்க. இது ஒரு குத்தமா?

  /நிர்வாகத்திற்கு இந்த விபத்தில் எந்தவித பொறுப்பும் கிடையாதாம்.// – நிச்சயமாக நிர்வாகத்திற்கு எந்த ஒரு பொறுப்பும் இந்த விபத்தில் கிடையாது. 5 மாடிக்கு அனுமதி வாங்கிட்டு திநகர்ல 12 மாடி கட்டி அதுல பிஸினெஸ் நல்லா நடந்துகிட்டிருக்கு. அரசு அதிகாரிகள் யாருமே அதற்குப் பொறுப்பேற்கலை. அதனால எந்தப் பிரச்சனைக்கும் அரசு அதிகாரிகள் நிர்வாகிகள் பொறுப்பல்ல. எப்படி நம்ம லாஜிக்?

 2. TAMILMANI சொல்கிறார்:

  வீடியோவில் ஒரு ஆள் பிரிட்ஜின் இரண்டு பக்க கம்பிகளை பிடித்து ஆட்டுகிறான்.
  பிரிட்டிஷ் காலத்திய சஸ்பென்ஷன் பிரிட்ஜ் அது.இப்போது புனரமைக்க பட்டுள்ளது. மோர்பி நகரின் முக்கிய சுற்றுலாதலம் கூட. எத்தனை பேரை ஒரே நேரத்தில் அனுமதிக்க வேண்டும் என்ற பாதுகாப்பு விதி
  காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.1979ல் மோர்பி அணைக்கட்டு பெரும் மழையின் காரணமாக உடைந்து
  ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டனர்.மோர்பி ஒரு சபிக்கப்பட்ட நகரம்.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  சிலரின் – ( அதிகாரிகள், அரசியல்வாதிகள், காண்டிராக்டர் …)
  பேராசை ….

  பலரின் கவனக்குறைவு, அக்கரையின்மை ….

  விளைவு 152 உயிர்பலிகள்….(இதுவரை தெரிந்தது)

  – என்று உணர, திருந்தப்போகிறார்கள் இவர்களெல்லாரும்….???

  பணம் கொடுத்தால் – குடும்பத்தினருக்கு இழந்தது
  கிடைத்து விடுமா…? அவர்கள் மனம் சாந்தி அடைந்து விடுமா…?
  அவர்கள் மனமெரிந்து கொடுக்கும் சாபம் இவர்களை சும்மா விடுமா…?

  இவர்கள் ஏன் இதை உணர மாட்டேனென்கிறார்கள்….?

  .
  -காவிரிமைந்தன்

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   This is a tweet from former
   Reserve Bank Governor Raghuram Rajan….😊

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நான் – ரகுராம் ராஜன் சொல்வதை
    வரவேற்கிறேனா இல்லையா என்பதை விட,
    ராகுல் காந்தியின் ஸ்டேட்மெண்டை
    வரவேற்கிறேன் என்பது பொருத்தமாக இருக்கும்…

    • புதியவன் சொல்கிறார்:

     ராகுல் காந்த் பேசியது வரவேற்கத்தகுந்தது. நன்றாகச் சொல்லியிருக்கிறார். ரகுராம் ராஜன் அருமையான அரசியல்வாதி. காங்கிரஸில் ஒருவேளை ராஜ்யசபா எம்பி சீட் கேட்டிருக்கிறாரோ என்னவோ

   • R KARTHIK சொல்கிறார்:

    Not sure whether it is from Raghuram rajan the former RBI governor. There is no Blue tick!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.