
ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியா-பாகிஸ்தான்
கிரிக்கெட் போட்டியின் –
கடைசி 8 பந்துகள் …. 28 ரன்கள் …
மிக மிக விறுவிறுப்பாக இருந்த இந்த நிலையை,
விமரிசனம் வாசகர்களுக்கு –
மீண்டும் பார்க்கத் தர வேண்டும் என்று ஆனமட்டும்
முயற்சித்தேன்.
ஆனால் மீடியா உரிமை பெற்றிருக்கும்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அதை அனுமதிக்க மறுக்கிறது….
யாரோ, புத்திசாலித்தனமாக, யூ-ட்யூபில் பதிவேற்றி
விட்டார்கள்… ஆனால் அதன் லிங்கை கூட மற்ற
இடங்களில் பதிய முடியவில்லை.
எனவே, என்னால் முடிந்தது கீழே –
முதலில் http://www என்று டைப் அடித்து விட்டு, பிறகு
இந்த லிங்கை தொடரவும் – youtu.be/feoQwM6hgaY
இதன் பின்னர், கீழே, சடகோபன் ரமேஷின் ஒரு
சுவாரஸ்யமான வர்ணனை –
நாம் ரொம்பவே உணர்ச்சிவசப்படுகிறோம். இந்தியாவிடம் சரியான பவுலர்கள் இல்லை. இருப்பவர்களையும் ஐபிஎல் என்ற பணம் பண்ணும் மிஷினிடம் விற்று அவர்களை இந்தியாவுக்காக விளையாடாத, ஆசையில்லாத நிலைமைக்கு ஆக்கிவிட்டோம்/ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.
பாகிஸ்தானை கடைசி சில ஓவர்களில் கட்டுபடுத்தத் தவறியது இந்திய பவுலர்களின் கையாலாகாத் தன்மை (கடைசி ஓவர் மிராகிள்). கோஹ்லி எப்போதுமே பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக விளையாடக்கூடியவர், தோற்கவேண்டிய மேட்சிலும் நன்றாகப் பிரகாசித்தார். அவ்ளோதான். நம்மிடம் சிறந்த பவுலர்கள் இந்த டீமில் இல்லை.
இதனை வைத்து நாம் சிறந்த டீம் என்ற நினைப்பே நமக்கு வேண்டாம். We don’t have a quality team this time என்று நான் நம்புகிறேன்.