
சென்னையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்த
பல சுவாரஸ்யமான தகவல்கள் –
நமக்கு முற்றிலும் புதிதானவை.
ஸ்ரீராம் அவர்களின் மற்றொரு பதிவு இங்கே –
சென்னை கொத்தவால் சாவடி வரலாறு பற்றியது –
நான் 1957-ல் சிறுபையனாக ஒரே ஒருமுறை
கொத்தவால் சாவடி போயிருக்கிறேன்..அப்போது
“சாவி” சார் சொல்கிற மாதிரி தான் இருந்தது….
அதன் பின்னர் இத்தனை வருடங்களில் ஒரு தடவை கூட
அந்தப்பக்கமே போனதில்லை ….!!!
………….
சிரபுஞ்சியில் தீபாவளி –
தீபாவளியின்போது இரண்டு மணி நேரங்கள்தாம் வெடிகள் வெடிக்கணும், இதை இதைத்தான் செய்யணும் என்று அரசு சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது?
சுதேசி கார்கள்தாம் வாங்கணும், பொதுமக்களுக்கான அரசுப் பேருந்துகள்தாம் உபயோகிக்கணும், சொந்த வாகனங்கள் வைத்துக்கொண்டு, கார்பண்டை ஆக்ஸைடு, மோனாக்ஸைடு புகைகளைக் கக்கக்கூடாது, யாரும் ஏர் கண்டிஷன்கள் உபயோகிக்கக்கூடாது, RO Water உபயோகிக்ககூடாது, ஒலி மாசு முற்றிலும் தடைசெய்யப்படவேண்டும் என்றெல்லாம் அரசு என்றாவது சொல்லியிருக்கிறதா?