
திராவிட கட்சிகள் அனைத்தும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக,
திருவள்ளுவரை மதம் இல்லாதவராக்கி, கடவுள் மறுப்பாளராகவும்
கொண்டு செல்ல முயற்சிக்கின்றன. கலைஞர், அவரது திருக்குறள்
உரையில் தன்னால் இயன்ற வரையில் இதற்கு அடித்தளம்
போட்டிருந்தார்.
நமக்கு தெரிந்த வரை – திருக்குறள் என்றாலே
பரிமேலழகர் (13-ஆம் நூற்றாண்டு) உரை தான்.
நாம் சிறுவயதில் பள்ளியில் படித்தது இதன் அடிப்படையில் தான்.
திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும்
பெரும் புலமை பெற்றவர். ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்களுக்கு
இவர் பரிச்சயமானவராக இருப்பார். வழக்கமான நடைமுறை
கல்வியை படித்துக்கொண்டே, அதே சமயத்தில், ஆன்மிக
நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர். சார்டர்டு அக்கவுண்டண்ட்
உத்தியோகப் படிப்பு, அந்த தொழிலில் ஈடுபட்டிருந்தவர்,
ஆன்மிகப் பணியில் ஆர்வம் கொண்டு, 1991-ல்,தனது 28-வது வயதில்,
வைணவ மதம் சார்ந்த உரைகளை நிகழ்த்தத் தொடங்கினார்.
1996-ல் தனது சார்டர்ட் அக்கவுண்டண்ட் தொழிலில் இருந்து
முற்றிலுமாக விடுபட்டு, ஆன்மிகப்பணிகளில் தீவிரமானார்.
வேதங்கள், உபநிஷத்துகள்,புராணங்கள், நாலாயிர
திவ்யப்பிரபந்தம் தலைப்புகளில் இவர் தமிழில் ஆற்றும் உரைகள்
அற்புதமானவை. மத விஷயங்களில் ஆர்வம் இல்லாதவர்களைக் கூட,
இவரது தூய, அழகுத்தமிழ் ஆகர்ஷிக்கும்.
திருக்குறளில், சமயம், கடவுள் பற்றியெல்லாம் வள்ளுவர்
என்ன சொல்கிறார் என்பதை இந்த காணொலியில்
விவரமாக அலசுகிறார். நம்பிக்கை இல்லாதவர்கள் கூட,
அவரது தமிழைக் கேட்டு ரசிப்பதற்காகவாவது ,
இந்த காணொலியை காணலாம் …..
………
.
………………………………………………..
எஸ்.ரா .சர்குணம் , ஒரு பேட்டியில் திருவள்ளுவர் கிருத்துவ மதத்தை சார்ந்தவர் தான் , என ஒரே போடாக போட்டார். YOUTUBE இல் மேலும் மேலும் தேடி பார்த்ததில் கிருத்துவ அமைப்புகள் அவர் கிருத்துவர் தான் என பட்டிமன்றம் நடத்தி தீர்ப்புகள் வழங்குகின்றன .
திருவள்ளுவர் கூறும் அகழ்வாரை தாங்கும் நிலம் போல, என தொடங்கும் குறளும் ,கிருத்துவர்களின் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என பொருள்படுவதாகவும் ,எனவே அவர் கிருத்துவர் தான் என கூறுகிறார்கள் .இன்னும் அவர்கள் திருவள்ளுவரின் புலால் உண்ணாமை குறித்து மட்டும் பேசுவதில்லை.
மற்றோரு வீடியோ வில் , இந்துக்கள் வணங்கும் சிவனே கிருத்துவர் தான் எனவும் ஒரு குரூப் கூறி கொண்டு விவாதம் நடத்தி கொண்டிருக்கிறது .
இன்னும் விவேன்கானந்தரை விட்டு வைத்திருக்கிறார்கள் ..
பாவம் ஹிந்து மதமும், ஹிந்து கடவுள்களும் …
ஹிந்து கடவுள்களே எங்களை மன்னியும் ..உங்களுக்காக இனியும் வாதாட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.முடிந்தால் நீங்களும் மதம் மாறி கொள்ளுங்கள் .
முன்னப்பின்ன குறளைப் படித்திராதவர்களுக்கும், காசு வாங்கிக்கொண்டு பிற மதங்களுக்கு சாமரம் வீசுபவர்களுக்கும் மாத்திரம்தான் வள்ளுவர் யார் என்று தெரியாது, திருக்குறளும் எதனைச் சொல்கிறது என்றும் தெரியாது. டாஸ்மாக் நடத்துகின்ற அரசாங்கங்களுக்கு திருக்குறளைப்பற்றியோ திருவள்ளுவரைப் பற்றியோ பேசுவதற்கு அருகதை உண்டா என்று பலர் கேட்கின்றனர். ஏகப்பட்ட உதாரணங்கள் திருக்குறளிலிருந்தே தரலாம். ஒரு சிலவற்றைத் தந்திருக்கிறேன். திருவள்ளுவர் அவருக்கும் ஔவையாருக்கும் உள்ள தொடர்பு என்று நம் பண்டைய பாரம்பர்யப் புரிதலே உண்மை.
அதுவும் தவிர, எந்த அரசியல்வாதி படித்திருக்கிறார்? இவற்றைப் பற்றியெல்லாம் புரிந்துகொள்ள? தமிழே ததிங்கணத்தோம். இதுல இவங்க அதிகாரத்தில் இருப்பதால் உளறுபவைகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? ஆனால் பாரம்பர்யத்தை, கலாச்சாரத்தை மாற்றுவதை எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டும். திருவள்ளுவரை உருத்திராட்சம், விபூதி இல்லாமல் வரைந்தவரும், காசுக்காக விலைபோன துரோகிதான்.
குறள் 3: (திருமாலைப் பற்றிய குறிப்பு)
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
மு.வ உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
மு.வ உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்
குறள் 9: (கடவுளைப் பற்றிப் பேசுவதும் இந்து மதம்தான்)
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
மு.வ உரை:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
குறள் 18: (வானோர்க்குப் பூசை செய்வது இந்து மதம்)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
மு.வ உரை:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
குறள் 25: (இந்திரன்…. இந்து மதம்தானே)
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
மு.வ உரை:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்
கருணாநிதி உரை: (இதுல தன் கருத்தைச் சொருக முடியல கருணாநிதிக்கு)
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்
குறள் 30: (அந்தணர்)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
மு.வ உரை:
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
குறள் 179: (லக்ஷ்மி பற்றி)
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு
மு.வ உரை:
அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
குறள் 234: (தேவர்கள், வானுலகம்)
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு
மு.வ உரை:
நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..
குறள் 255:(புலாலுண்ணாமை – இந்துமதம் மாத்திரம் இதைப் பேசும்)
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு
மு.வ உரை:
உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
குறள் 257: (புலாலுண்ணாமை – இந்துமதம் மாத்திரம் இதைப் பேசும்)
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்
மு.வ உரை:
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
குறள் 259: (வேள்வி அதற்கான அவி – இந்துமதம் குறிப்பாக வேத மதம்)
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
மு.வ உரை:
நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
குறள் 266: (தவம் செய்தல் இந்து மதத்துக்கு மாத்திரம் உரியது)
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
மு.வ உரை:
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.
குறள் 267: (தவம் செய்தல் இந்து மதத்துக்கு மாத்திரம் உரியது)
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
மு.வ உரை:
புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்
குறள் 610: (வாமன அவதாரம்)
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
மு.வ உரை:
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.
பரிமேலழகரைப் பற்றி விக்கி கூறுவது…..
பரிமேலழகர் தம் உரையில் போசராசன் [7] வடமொழி நூலைக் குறிப்பிட்டுள்ளார். [8] எனவே 11 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.
பரிமேலழகர் தொல்காப்பியத்தில் இல்லாத நன்னூல் [9] குறியீட்டு ஒருபொருட் பன்மொழி என்பதனைப் பயன்படுத்துவதால் [10] 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.
காஞ்சி அருளாளப் பெருமான் கோயில் கல்வெட்டு [11] குறிப்பிடும் பரிமேலழகிய பெருமான் தாதரே [12] திருக்குறளுக்கு உரைசெய்த பரிமேலழகர் என்பது அறிஞர் [13] கருத்து. இதனால் பரிமேலழகர் காலம் 1271ஐ ஒட்டியது எனத் தெரிகிறது.
.
சுரனையற்று இருக்கும் இந்து(?) மக்களை ஒன்றிணைத்து , இந்துக்களை பிஜேபியை நோக்கி குவிய வைப்பதே இவரின் நோக்கம் என்றே எனக்கு சந்தேகம் வலுக்கிறது .வார்த்தைக்கு , வார்த்தை, காதுகள் கூசும் அளவிற்கு , இந்து மத துவேஷம் …
பாவம், சுடாலின் கஷ்டப்பட்டு பெற்ற அரியணையை இவர் அடுத்த தேர்தலுக்குளாகவே சின்னாபின்னமாகி விடுவார் .இதில் ஆர்.ராசாவா , நானா என்று பலத்த போட்டி ..இருவரும் அரியணைக்கு பலமாக குழி தோண்டும் சப்தம் கேட்டு கொண்டே இருக்கிறது .
மதத்தால்தான் இவர்கள் (திருமா, ஆ.ராசா) சீட் பெற்றார்கள். அதனால்தான் அவர்களுக்கு வாய்ப்பு. உடன் பிறந்தே கொல்லும் வியாதி, எட்டப்பன் குணம், நன்றி கெட்டவர், துரோகிகள் என்று எதைச் சொன்னாலும், இவர்களின் குணத்திற்கு 10 சதத்திற்கும் ஈடாகாது. தாங்கள் கொள்கையை மதிப்பவர்கள் என்றால் தைரியமாக தாங்கள் ‘இந்து’ மதம் அல்ல என்று ஒத்துக்கொள்ளட்டுமே… அப்புறம் கவுன்சிலராக ஆக முடிகிறதா என்று பார்ப்போம். இது செபஸ்டியனுக்கும் பொருந்தும். கொள்கையை நம்புபவர்கள், சுயமரியாதை உள்ளவர்கள் என்றால் சொந்தப் பெயரில் வெளியில் வராமல், திருமுருகன் என்று முகமூடி போட்டு வரும் கும்பல்களுக்கும் இது பொருந்தும்.