இந்த உரசல்களில் சம்பந்தப்பட்டவர் யாரும், யாரும் என்று தெரிகிறதா…?

(ஜூ.வி.யிலிருந்து ஒரு சின்ன சுவாரஸ்யமான சேதி……)

“ஆளுங்கட்சி மூத்த தலைவர் ஒருவருக்கும், அமைச்சருக்கும்
இடையே உரசலாகி விட்டதாமே?”

“ஆமாம்… அதற்கு மதுபானக் கொள்முதல் விவகாரம்தான்
காரணம். அந்த மூத்த தலைவர் தரப்பு, சாராய ஆலை ஒன்றை
நடத்துகிறது. சில மாதங்களாக, அந்த ஆலையிலிருந்து மதுபானக் கொள்முதல் அளவைக் குறைத்துவிட்டதாம் டாஸ்மாக்.
லாபம் அடிவாங்குவதற்கான காரணத்தை ஆலையின் மேலாளரை அழைத்துக் கேட்டிருக்கிறார் அந்தத் தலைவர்.

‘நீங்க அந்த அமைச்சர்கிட்ட நேரடியாகப் பேசுனா, நமக்கு
அதிகமா கொள்முதல் ஆர்டர் கிடைக்கும்’ என்று மேலாளர்
ஆலோசனை சொல்ல,

‘நான் போய் அவனிடம் பேசுவதா…
நான் யார் தெரியுமா, என் தகுதி தெரியுமா..?’ என
ருத்ர தாண்டவமே ஆடிவிட்டாராம் மூத்த தலைவர்.


மனம் சாந்தமான பிறகு, வெட்கத்தைவிட்டு அந்த அமைச்சரைத் தொடர்புகொண்டு கூடுதல் கொள்முதல் ஆர்டர் கேட்டிருக்கிறார்.
‘அண்ணா, நீங்க கேட்டு தராமலா… நிச்சயம் பண்ணிடுவோம்ணா’
என்று போனை `கட்’ செய்திருக்கிறார் அமைச்சர்.”

“ஆர்டர் கிடைத்ததாமா?”

“டோஸ்தான் கிடைத்திருக்கிறது. மூத்த தலைவர் தன்னிடம்
பேசியதை அப்படியே ஆட்சி மேலிடத்திடம் போட்டுக் கொடுத்து
விட்டாராம் அமைச்சர்.

டென்ஷனான மேலிடம், ‘ஆட்சிக்குள்ள ஏன் தலையிடுறீங்க…?


“யாருக்கு எவ்வளவு கொடுக்கணும்னு எங்களுக்குத் தெரியும்.
நீங்க அதிலெல்லாம் மூக்கை நுழைக்கக் கூடாது”’ “என்று
மூத்த தலைவரை வெளுத்து வாங்கியிருக்கிறது.

( – இது கிச்சன் செய்த பங்கீடு. நாம் தலையிட வழி இல்லை
என்று மூத்த தலைவரிடம், அமைச்சர் முன்னதாகவே தெரிவித்திருந்தால்
பிரச்சினைக்கே இடம் இருந்திருக்காது, ஆனால், அமைச்சர்
வேண்டுமென்றே கிச்சனிடம் மூட்டி விட்டு, மூத்த தலைவரை
பழி வாங்கி இருக்கிறார் …அவர்களுக்குள் என்ன பிரசினையோ…? )

வெலவெலத்துப்போன அவர், ‘இவனை நம்பிச் சொன்னதை,
அப்படியே அங்கே போட்டுவிட்டுட்டானே… என் நேரம் வரட்டும். கவனிச்சுக்குறேன்’ என்று அந்த அமைச்சரைப் பழிதீர்க்க சூளுரைத்திருக்கிறாராம்.”

சம்பந்தப்பட்ட இருவர் யார் தெரிகிறதா ….?

.
…………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to இந்த உரசல்களில் சம்பந்தப்பட்டவர் யாரும், யாரும் என்று தெரிகிறதா…?

 1. புதியவன் சொல்கிறார்:

  அதிகமாகத் தன் கெத்தைக் காண்பித்துக்கொள்ளும் அந்த திமுக மூத்த அரசியல்வாதிக்கு, சேலம் வீரபாண்டிக்குப் பின்னான கதிதான் ஏற்படும். அவருக்கு என்று வாக்கு வங்கி கிடையாது. அதனால் இப்போதைக்கு வாரிசுக்கு ஏதோ முக்கியத்துவம் கொடுக்கிறார்ப்போல் தெரிந்தாலும் சமயம் வரும்போது வால் ஒட்ட நறுக்கப்படும் என்று தெரிகிறது. மாப்பிள்ளைக்குத்தான் வடபுலத்தில் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறார்கள். அது நேரம் வரும்போது நடக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். தென்மண்டலப் பதவி என்று ஒன்றைக் கொடுத்து, வடபுலப் பதவியைப் பறிப்பதா என்று ஒரு யோசனை ஓடுகிறதாம். பாராளுமன்ற உறுப்பினர் என்பதிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் என்று ஆக்கினால் அது பதவி இறக்கமாகுமா அல்லது பிற்காலத்தில் கமல் தயாரிப்பில் நடிக்கும் நடிகருக்கு இடைஞ்சலாகுமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல பல்லைக்காட்டி இளித்த அமைச்சரின் வாரிசுக்கும் வாய்ப்பு லேது என்று கிச்சன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரம்பலூர் நீலகிரி ஏரியாவைச் சேர்ந்தவருக்கு ஏற்கனவே நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தாகிவிட்டது. அதனால் உள்ளே போனாலும் ஆதரவு கிடைக்காது என்று முக்கிய வட்டாரத் தகவல்கள் சொல்கின்றன. மண்மூட்டை என்று முன்பு எகத்தாளமாகப் பேசியவருக்கும் பெப்பே என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இவை யார் யார் என்று கண்டுபிடிப்பது உங்கள் பொறுப்பு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   ” பெரம்பலூர் நீலகிரி ஏரியாவைச் சேர்ந்தவருக்கு
   ஏற்கனவே நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தாகிவிட்டது. ..”

   -அப்படி ஒன்றும் தெரியவில்லையே.
   கோவையிலும், ஊட்டியிலும், மேளதாளத்துடன்
   அமர்க்களமாக வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே..
   அபூர்வமாக கூட்டணி கட்சிகளும் கூட சேர்ந்துகொண்டிருக்கிறதே…
   எக்கச்சக்கமாக பணம் வைத்திருப்பவர். எனவே,
   தலைமை நினைத்தாலும் கூட அவரை
   கண்ட் ரோல் செய்வது கடினம்…!!!

   ” பல்லைக்காட்டி இளித்த அமைச்சரின் வாரிசு -”

   ” மண்மூட்டை என்று முன்பு எகத்தாளமாகப் பேசியவருக்கு -”

   இன்னும் கொஞ்சம் க்ளூ கொடுங்களேன்..
   கண்டுபிடிக்க முடியவில்லை….!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    பாருங்க…கலைஞருக்காக இந்த மண்மூட்டையை நான் சுமக்க வேண்டியிருக்குன்னு யார் சொல்லியிருப்பார்னு நினைக்கறீங்க?

    ஸ்டாலின் கண்ணீர் வராத குறையா புலம்பிக் கொண்டிருந்தபோது எகத்தாளமாகச் சிரித்துக்கொண்டிருந்த அமைச்சர் யார்?

    விழுப்புரத்தில், அரசு நிறுவனமான ஆவின் நிறுவன பூத்களில், அந்த அமைச்சரும், அவர் மனைவியும் உள்ள போட்டோ தொங்கிக்கொண்டிருக்கின்றன. எவ்வளவு அராஜகம் பாருங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s