
கீழே ஒரு பேட்டி….
ஆனால் அதில் ஒருவர் மட்டும் தான் பேபேபேபேபேபேசிக்கொண்டே
போவார். பேட்டி காண வந்தவர் நொந்து கொண்டு கையெடுத்து
கும்பிட்டு பேட்டியை முடித்து விடுவார்.
பேட்டிக்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பு –
“உன்னுடைய கீதையை விட எங்கள் திருக்குறள் சிறந்தது..”
இவரிடம் யார் கேட்டார்கள்…..?
சிறந்தது கீதையா அல்லது திருக்குறளா ..என்று…?
இரண்டையும் ஆர்வத்துடன் படித்து புரிந்துகொண்டவர்கள்
இந்த கேள்வியை கேட்கவே மாட்டார்கள்.
எதற்காக இந்த ஒப்பீடு….?
பழ.கருப்பையா – வயது 79 – ஆனாலும்
இவரால், யாருக்கு-என்னபயன்…?
தமிழ்ச் சமுதாயத்திற்கோ, தமிழ்நாட்டிற்கோ இதனை
வயதில் இவர் செய்தது ஏதுமில்லை…
ஆனால் – வாஆஆய் …?
அநேகமாக தமிழகத்தில் இருந்த, இருக்கும் கட்சிகள்
அனைத்திலும் இவர் இருந்திருக்கிறார்… ஓடி இருக்கிறார்.
காரணம் – பேராசை, சுயநலம்
வரிசையாக,
முதலில் காங்கிரசில் –
அது பிளவுபட்டபோது சிண்டிகேட் காங்கிரசில்,
பின்னர் -ஜனதா கட்சியில்,
பின்னர், ஜனதா தள்’ளில்,
பிறகு திமுக-வில்,
பின், மதிமுக-வில்,
மீண்டும் காங்கிரசில்,
பின், அதிமுகவில் (ஜெ. இருந்தபோது)
பின்னர் கலைஞர் கருணாநிதி முன்னிலையில், திமுக-வில்
பின்னர் – நமக்கு தெரிந்து கமல்ஹாசனின்
மக்கள் நீதிமய்யம் கட்சியில் ….
இப்போது எங்கே – வீரமணியாருடன் ஐக்கியமாகி
விட்டாரோ என்று தோன்றுகிறது….!!!
இவர் சொல்வதைக் கேட்கும் முன்னர்,
டாக்டர் அம்பேத்கர் இவர் போன்றவர்களைப்பற்றி
என்ன சொல்லி இருக்கிறார் என்பதை நினைவுபடுத்த வேண்டும்…
……………….
“ஆரியர் – திராவிடர்” என்கிற தியரியே பொய்யானது.
ஆங்கிலேயர்கள், இந்தியரை பிளவுபடுத்த, பிரித்தாள –
கண்டுபிடித்த ஒரு “மகத்தான பொய்…. கற்பனை”
எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாதது.
ஆரியர்-திராவிடர் என்கிற பேச்சே “கொடிய விஷம்”
போன்றது…. மிகவும் ஆபத்தான விஷப்பாம்பு போன்றது.
கண்டவுடனேயே அடித்து கொல்லப்பட வேண்டியது….”
…………………
இன்னும் சில விஷயங்கள்…
தமிழும், சம்ஸ்கிருதமும் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழகத்தில், தொடர்ந்து, இணைந்தே வழக்கத்தில்
இருந்திருக்கின்றன.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே,
கிபி 2-வது நூற்றாண்டில், இளங்கோவடிகள்
சிலப்பதிகாரம் எழுதியபோது அதில் –
கோவலன், கண்ணகி திருமணம் –
“தீ” – வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள்
முழங்க நடத்தி வைக்கப்பட்டது என்று எழுதி இருக்கிறார்.
வள்ளுவர், வேதங்களைப்பற்றி “வேத நெறி” என்று
குறிப்பிட்டு இருக்கிறார்…
பண்டைத்தமிழகத்தில், தமிழும் -சம்ஸ்கிருதமும்
என்றுமே ஒன்றுக்கொன்று எதிரியாக இருந்ததில்லை.
10-ஆம் நூற்றாண்டில் மாபெரும் “கம்ப ராமாயணம்”
காவியத்தை இயற்றிய பெருங்கவி கம்பன், அதன் மூல நூலான, சம்ஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை முழுவதுமாக படித்து ரசிக்காமல், இயற்றி இருக்க முடியுமா ….?
எனவே கம்பரும் சம்ஸ்கிருதத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்திருக்கிறார்.
திராவிட இயக்கங்கள் உருவான பிறகு தான்
இந்த விரோதமான கருத்துகள் எல்லாம் அவர்களது
வியாபாரத்திற்காக, சுயநலத்திற்காக – உருவாக்கப்பட்டு
பெரிது படுத்தப்பட்டன.
இன்னுமொரு சின்ன, சிந்தனைக்குரிய கேள்வி…..
ராஜராஜசோழன் காலத்தில் இருந்தது சைவ மதம் – இந்து மதம் அல்ல – என்கிறார். ஆனால் அதே காலத்தில் ஏகப்பட்ட ஜாதிப்பிரிவுகள் இருந்திருக்கின்றன…. கல்வெட்டுகள் சாட்சி.. அப்படியானால் சைவர்களால், உருவாக்கப்பட்டவை தானா ஜாதிகள்….?
இனி – எல்லாம் தெரிந்த கருப்பையாவின் உளறல்களை கண்டு/கேட்டு ரசிக்கலாம்…….!!!
…………………
.
……………………………………………….
போப் அவர்கள் கிறித்துவக் கடவுளைக் கும்பிடவில்லை, கத்தோலிக்கக் கடவுளையே கும்பிடுகிறார் என்று ஒருவன் சொன்னால், அவன் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவன் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். நம்ம பழ கருப்பையாவும் அப்படிப்பட்டவர்தாம்.
அவர் நிறையப் படித்தவர், நன்றாகப் பேசத் தெரிந்தவர். ஆனால் அவற்றை உபயோகித்துக்கொள்ள யாருமே இல்லை. காரணம் இவரால் எவருடைய கொள்கையுடனும் ஒத்துப்போக முடியாது. யாரையும் ஜஸ்டிஃபை பண்ணிப் பேசத் தெரியாது. அதனால்தான் இவரால் எந்தக் கட்சியிலும் இருக்க முடிவதில்லை. வீணாகப் போன திறமைசாலி. எனக்கு அவருடைய பேச்சுத் திறன் பிடிக்கும். பாலை நிலத்தில் ரோஜா பூத்து என்ன பயன்? தன் வாழ்க்கையே வீணாகிவிட்டதே, தன் திறமையைப் பயன்படுத்திக்கொள்வார் யாருமில்லையே என்ற விரக்தியில் பிதற்றல் காணொளிகளை வெளியிட்டுத் தன் இருப்பைப் பிறருக்கு உணர்த்தப் பார்க்கிறார்.
2ம் நூற்றாண்டில் (கிபி 275) ஆண்ட பல்லவர்கள், கற்றளிகளைக் கட்ட ஆரம்பித்தபோது பல்லவ நந்திவர்மன் 8ம் நூற்றாண்டில், காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலைக் கட்டியிருக்கிறான். அவன் காலத்தில்தான் கைலாசநாதர் கோவிலும் கட்டப்பட்டது. அவனுக்கு முந்தைய 4ம் 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்ம பல்லவன், குடவரைக்கோயில்களைக் கட்டியிருக்கிறான், சைவ வைணவ பேதம் அதிகம் பார்க்காமல். அப்படியென்றால் முதலாம் நூற்றாண்டிலேயே இரண்டும் இருந்திருக்கின்றன. மகேந்திரவர்மன் முதலில் ஜைன சமயத்தைச் சார்ந்தவனாக இருந்து பிறகு சைவ மதத்தைத் தழுவியவன்.
கோட்செங்கட் சோழன், மூன்று/நாலாம் நூற்றாண்டில் 70 (69) சிவாலயங்களை மணிமாடக் கோவில்களாகக் கட்டியுள்ளான். அவன் கட்டிய ஒரே வைணவக் கோயில் திருநறையூர் (நாச்சியார் கோவில், கல்கருடன்). யானை ஏறமுடியாத கோவில்களையே அவன் கட்டுவித்தான். இவன் தேவாரம் (6ம் நூற்றாண்டு) காலத்திற்கு முந்தையவன்.
ராஜராஜசோழன் காலத்தில், குந்தவை தேவியார், புத்த மடாலயங்களுக்கு நிவந்தங்கள் கொடுத்திருக்கிறார். ராஜராஜ சோழன் நிறைய சிவாலயங்களை எடுப்பித்திருக்கிறான். சோழ மன்னர்கள் தொன்றுதொட்டு நிறைய ஆலயங்களை எடுப்பித்திருக்கிறார்கள். அவர்கள் சைவர்கள்.
சைவம், வைணவம்னா என்ன என்றே பலருக்குத் தெரிவதில்லை. சைவர்கள், சிவனை வழிபடுவார்கள், அவர்களுக்கு திருமால், லட்சுமி ஆகியவையும் தெய்வங்கள். சிவனுக்கும் மேலான தெய்வங்கள் என்றாலும் (இது சனாதனத்தின்படி வருவது), சிவனை மாத்திரமே வழிபடுவார்கள். வைணவர்கள் திருமாலை மாத்திரமே வழிபடுவார்கள். வீர வைணவர்கள், வீர சைவர்கள் என்பார், திருமால், சிவன் ஆகியோரை மாத்திரம் வழிபடுபவர்கள். மற்ற சமயக் கோவில்களில் நுழைவதில்லை (ஆனை துரத்தினாலும் ஆனைக்கா புகேன் – அதாவது ஸ்ரீரங்கத்தில் இருக்கும் வைணவர், தன்னை யானை துரத்தினாலும், திருவானைக்கா கோயிலுக்குள் நுழையமாட்டேன் என்று சொவது, என்ற பழமொழி உண்டு). சைவம், வைணவம் இரண்டு மதங்களும் வேதங்களை ஏற்றுக்கொண்டவை.
அபூர்வமாக, ஒரு சில அரசர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் சமயம் அன்றி பிறிதொரு சமயத்திற்குக் கெடுதல்கள் விளைவித்திருக்கின்றனர். கிருமி கண்ட சோழன் எனப்படுபவன் (9ம் நூற்றாண்டு) வைணவ சமயத்தை மேலெடுத்துச் செல்ல முயன்ற இராமானுஜரின் கண்ணைப் பறிக்க முயன்றதும், வைணவக் கோயில்களை முடக்க முயன்றதையும் போல. திருவரங்கம் கோவில் மற்றும் சோழமண்டலத்தில் இருக்கும் வைணவக் கோயில்கள் எல்லாம் 6-7ம் நூற்றாண்டிலும் இருந்திருக்கின்றன. கோவில்களைப் பிறகு விரிவுபடுத்தியது 15, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்க மன்னர்கள்.
நம்ம பழ.கருப்பையா அனேகமாக உளறுகிறார் இந்தக் காணொளியில் என்றே நான் நினைக்கிறேன். ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி, “”ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந்” என ஆரம்பிக்கிறது. ஸ்ரீ திருமகள் போல (லக்ஷ்மீ நாதன்). அவனது பட்டப்பெயர்களில் சில, சத்ருபுஜங்கன், இராசசர்வக்ஞன் ஜனநாதன்…. பழ.கருப்பையா சொல்கிறார், சாதிகளாகப் பிரிந்துகிடந்த தமிழர்களை ஒன்று கூட்டி, தமிழினத்தைத் திரட்டி என்றெல்லாம், திராவிட கழகங்களில் உறுப்பினராக இருந்திருந்த காரணத்தினால், பிதற்றுகிறார். சைவமும் வைணவமும் கிமு விலேயே தமிழகத்தில் இருந்திருக்கின்றன (தமிழகம் என்பது இப்போது நாம் உபயோகிக்கும் சொல், இந்து மதம் என்று சொல்வதைப் போல. அப்போது தமிழர்கள் நான்கைந்து நாடுகளில் விரவிக் கிடந்தனர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, இலங்கை….. அதனால் பழ. கருப்பையா, வரலாறு பற்றிப் பேசத் துணிந்தால், சோழ நாட்டு மக்களை அவன் திரட்டினான், சாதியாகப் பகுத்தான் என்றெல்லாம்தான் பேசவேண்டுமே தவிர, தமிழனாக என்றெல்லாம் பேசுவது, வரலாற்றின்படி தவறு. தமிழர், தமிழ்நாடு என்பது இலக்கியங்களில் கிடையவே கிடையாது. அது ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முந்தைய விஷயம், அதிலும் பாரதிதான் ஆரம்பித்துவைத்தது)
ஆனால் ‘தமிழ்’ என்ற வார்த்தை பண்டைய இலக்கியங்களில் உண்டு. அதற்கு இலக்கண நூல்களும் உண்டு.
பழ கருப்பையா நல்லவர் என்பதையும் நாம் மனதில் வைத்துக்கொள்ளணும். பிறர் பணத்தைச் சுருட்டியவரல்லர். ஊழல் செய்தவரல்லர். என்னால் அவரை நினைத்துப் பரிதாபப் படத்தான் முடிகிறது.
.
புதியவன்,
“பழ.கருப்பையா நல்லவர்…”
மன்னிக்க வேண்டும். நான் அப்படி நினைக்கவில்லை.
அவர் – யாருக்கும் விசுவாசம் இல்லாதவர்.
எந்த கட்சியில் அவர் சேர்ந்தாலும், விலகினாலும்,
அதற்கு அவரது சுயநலமே காரணமாக இருந்தது.
79 வயதான அவர் – மிக நீண்டகாலமாக அரசியலில்
இருக்கும் அவர் – தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும்
செய்த நல்லது என்ன….?
பெரிய ஊழல் செய்யும் அளவிற்கு அவருக்கு
பதவிகள் கிடைக்கவில்லை; சின்ன சின்ன அளவில்
அவை நடந்துகொண்டே தான் இருந்தன.
இந்த பேட்டியையே பாருங்களேன்.
எத்தனை வன்மம்…?
எத்தனை கோபம்….?
ஏன் …? அவர் சொல்லும் காரணங்கள் சரியா…?
அவற்றை அவரால் நிரூபிக்க முடியுமா…?
ஆரியர் – திராவிடர் என்று பிரித்துப்பேசுவதே
ஃப்ராடு என்று அம்பேத்கர் சொன்னதை அவர்
படிக்காமலா இருந்திருப்பார்….?
பிறகு ஏன் இன்னமும் அதை பிடித்து
தொங்கிக் கொண்டிருக்கிறார்….?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
He is frustrated that nobody bothers about his preachings. அதனால ஏதேனும் உணர்ச்சியைத் தூண்டுவது போலப் பேசமுடியுமா என்று நினைக்கிறார் (சாகப்போகும் சமயத்தில் தன் இருப்பைப் பதிவு செய்வது போல). அவரிடம் யாராவது ஆர்க்யூ செய்து, அவர் அப்போது இப்படிப் பேசினீங்களே, இப்போது இதைச் சொல்றீங்களே, ஆரியர்-திராவிடர் என்பதற்கு என்ன ஆதாரம் என்றெல்லாம் நேரில் கேட்டால், அவரே தான் சொல்லும் பொய்யை எண்ணிச் சிரித்துவிடுவார். அப்படிப்பட்ட கேரக்டர் அவர். ஆனால் அவர் பணம் சம்பாதிக்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அது இருக்கட்டும். திருமா, ஆர்.எஸ்.எஸ் பற்றிப் பாராட்டி முன்பு பேசிய காணொளி பார்த்தீர்களா? பாஜகவை அவர் அளவுக்கு அதிகமாக எதிர்த்துக்கொண்டார். திமுகவோ அவரை door matஆகக்கூட மதிக்கவில்லை. இருக்கற கட்சியெல்லாம் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது. அதிமுகவோ இப்போது வரை பாஜக வுடன் இருக்கிறது. எப்படி அரசியல் செய்வது, மானம் இழந்து கொத்தடிமையாக திமுகவுக்கு இருக்கவேண்டி இருக்கிறதே என்று மனதளவில் வருந்துகிறார். என்ன செய்வது என்று அவருக்கு நீங்கள் ஏதாவது ஆலோசனை சொல்லக்கூடாதா?
Just a flashback.
He produced one film. Not bought by Jaya TV as per his quote. He wanted to sell to SunTv.. Had a deal with them, so he spoke against JJ in Thuqlaq anniversary function. Even Cho was surprised why he spoke like that – he mentioned in the same function. It was mentioned in Vikatan that Sabareesan left the function after his speech.
So, for the sake of his film rights, he could change the loyalty. His jumps to multiple parties are always based on expectations and not due to ideology.
You are right Raghuraman.
I was present in that meeting….
.
with all best wishes,
Kavirimainthan
இதன்மூலம், பாஜகவை, எம்பி எம்.எல்.ஏக்கள், கட்சித் தலைவர்களை விலைகொடுத்து வாங்குகிறது என்று குற்றம் சாட்ட, திமுகவுக்குத் துளியும் யோக்கியதை கிடையாது என்பது புரிகிறது. அவர்கள் எதைச் செய்தாலும், அதற்கு ஒரு விலை உண்டு, அதற்குத் தயார் என்றால்தான் திமுக அருகிலேயே செல்லவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. (அதாவது திமுகவை இணையத்தில் கொத்தடிமைபோல ஆதரிப்பவர்கள் அண்ணாமலை சொன்னதுபோல…. 300-3000 ரூ உபிஸ் தான் போலிருக்கு)