‛‛திராவிடம் ஒரு வெங்காயம்” – 1961-ல் வெளியான புத்தகம்…

”திராவிடம், திராவிடர், திராவிட நாடு” என்ற கோஷத்தை
முன் வைத்து தமிழக மக்களிடம் தொடர்ந்து பிரசாரம் செய்து ஓட்டுகளைப் பெற்று வருகிறது திமுக. ‛‛நாமெல்லாம்
திராவிடர்கள், இந்த நிலத்தின் பூர்வ குடிகள் நாம் தான்”
என்று தொடர்ந்து பேசி தமிழர்களிடையே உசுப்பேற்றுவது
திமுக தலைவர்களின் வாடிக்கை. திமுக.,வை ஆரம்பித்த அண்ணாதுரை முதல் இப்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை
இதை திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர்.

தென்னிந்தியாவில் வசிப்பர்கள் திராவிடர்கள் என்றும்
மற்ற பகுதிகளில் வசிப்போர் வேறு நாடுகளில் வந்து குடியேறியவர்கள் என்றும் தமிழர்கள் மத்தியில் பேசி பேசி, அக்கருத்தை பதிய வைத்துக்கொண்டே இருக்கின்றனர்
திமுக.,வினர்.

பின்வாங்கிய ஈ.வெ.ரா. –

ஆனால் இக்கருத்துக்கு எந்த ஆதாரத்தையும் அவர்களால்
காட்ட முடியவில்லை. ஒரு காலத்தில் ‛‛திராவிடம்” என்ற வார்த்தையை முதன்முதலில் அரசியலில் பயன்படுத்திய
ஈ.வெ.ரா பிற்காலத்தில் அந்த கருத்து ஒரு செல்லாக்காசு
என்பதை புரிந்துகொண்டு, அக்கருத்தாக்கத்தில் இருந்து பின்வாங்கியதோடு,
‛‛திராவிடம் ஒரு வெங்காயம்” என்று குறிப்பிட்டதும்,
திராவிடத்தை தலையில் துாக்கி வைத்து ஆடும் திமுக.,வை ஈ.வெ.ரா.,வே கடுமையாக விமர்சனம் செய்ததும் வரலாறு.

இதன் பின்னணியில், திராவிடம் பற்றி திமுக.,வுக்கு ஏராளமான கேள்விகளை எழுப்பியும் திராவிட கருத்தில் இருந்து ஈ.வெ.ரா பின்வாங்கியது எதனால் என்பதை ஆராய்ந்தும் 1961ம் ஆண்டு ர.சண்முகம் என்பவர் ‛‛திராவிட நாடு ஒரு வெங்காயம்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். சென்னை 222 தம்புச் செட்டித் தெரு
என்ற விலாசத்தில் இருந்து மதுர நிலையம் என்ற பதிப்பகம் இந்நுாலை வெளியிட்டுள்ளது. அந்தக் காலத்திலேயே புயலை கிளப்பிய இந்த புத்தகத்தின் பக்கங்கள் இப்போது மீண்டும்
சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகின்றன.

அந்த புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பிட்ட
சில கருத்துகள் கீழே : –

‛‛திராவிடம் என்ற சொல் தமிழரின் நெஞ்சத்தில்
பாய்ச்சப்படும் கொடிய நஞ்சு”- மறைமலை அடிகள்

‛‛திராவிடம், திராவிடர் என்றெல்லாம் பரப்பப்பட்டு,
போலி தத்துவங்கள் தமிழ் மக்களின் இயல்பான தேசிய உணர்ச்சியை மங்க வைத்து, மழுங்க வைத்துக் கெடுக்கும்
நாசக் கருத்துக்களாகும்”

‛‛இந்த நாசக் கருத்துக்களை பரப்புபவர்கள் பெருகினால்,
நாட்டில் செல்வாக்கு பெற்றால் தமிழகத்தின் பெருமையும் தமிழினத்தின் சிறப்பும், தமிழகத்தின் பண்பும் அடியோடு
அழிந்து நாசமடைந்து விடும்”

‛‛அந்த வகையில், எந்த முறையில் ஆராய்ந்து பார்த்தாலும் திமுககாரர்களின் திராவிட வாதத்தில் பொருளில்லை.
இன்று வாழும் தென்னக மக்கள் தான் திராவிடர்கள் என்று நிரூபிப்பதற்கான ஆதாரத்தைக் காண்பிக்கவே முடியாது
இன்றுவரை அப்படி நிரூபிக்கப்படவில்லை”

‛‛தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னட நாடுகளின்
கூட்டாட்சி தான் திரவிட நாடு என்று கூறும் திராவிட
முன்னேற்றக் கழகத்தினர் அந்தக் கொள்கையில்
உண்மையாகவே பிடிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தால் வேங்கடத்துக்கு வெளியே தங்கள் செல்வாக்கைப் பரப்பி
மற்ற திராவிட இனத்தவரின் ஆதரவைப்பெற முயற்சித்திருக்க வேண்டும்”

‛‛திராவிடம் என்ற சொல்லே தமிழகத்துக்கு, தமிழுக்கு
புறம்பானது என்ற கருத்தை உறுதியாகக் கொண்டவர்கள்
நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்கள்”

‛‛திமுக பெருந்தலைவர்கள் என்னதான் சரித்திர ஆதாரம்
காட்டி ‘திராவிடம்’ பேசினாலும் வேங்கடத்துக்கு வடக்கே
அதைப்பற்றி மக்கள் சிந்திக்கவே தயாராக இல்லையே”

‛‛தாம் பெற்ற குழந்தையைத் தாமே கொன்று குழிவெட்டிப் புதைப்பது போன்று திராவிட நாட்டினய முழு உரிமையாளராக திகழ்ந்த பெரியார் ஈ.வே.ரா.வே –
திராவிட நாடாவது, வெங்காயமாவது என்று அந்தப்
பிரச்சனையை கைகழுவி விட்ட பிறகு திராவிடத்தைப்
பற்றியோ திராவிடர்களைப் பற்றியோ பேச்செடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணாக்களுக்கும், தம்பிகளுக்கும்
என்ன தகுதியிருக்கிறது”‛‛சந்தர்ப்பத்துக்கு ஏற்றமுறையில்
வேஷம் போட்டு, சூழ்நிலைகளுக்கு ஏற்ப குரலை மாற்றி
நாடகமாடி அரசியலையே ஒரு பொழுது போக்காக மாற்றி
விட்டனர் திமுகவினர்”

‛‛இளம் இதயங்களில் நச்சுத் தன்மையும், துவேஷத்தையும்
வளர்த்து தியாக உணர்ச்சிக்கு பதிலாக,
சேவை மனப்பான்மைக்கு மாற்றாக –
துஷ்டத்தனத்தையும், பலாத்காரப் போக்கையும் கற்பித்து
இளைஞர் வட்டாரத்தை பாழ்படுத்தும் பணியைத்தான்
அந்த நாள் முதல் இந்த நாள் வரை திராவிட முன்னேற்றக்
கழகம் தொடர்ந்து செய்து வருகிறது”

‛‛பெற்ற தாயை மறக்கும் பேதை மதியீனரைப் போல பிறந்த பொன்னாட்டை பேசும் மொழியை மறந்துவிட்டு மாற்றவிட்டு வழக்கில் இல்லாத திராவிடர் என்ற வெற்றுச் சொல்லை வைத்து சிலம்பாட்டம் ஆட வேண்டுமா?”

பின் குறிப்பு – பின் சேர்க்கை –

நண்பர் புதியவன் அவர்கள் ஒரு கார்ட்டூன்
சித்திரத்தை அனுப்பி இருக்கிறார்.
அதை பின்னூட்டமாக போட டெக்னிகலாக
வழியில்லை – எனவே இங்கே பிற்சேர்க்கையாக
பதிகிறேன்.
புதியவனுக்கு நன்றி –

.
…………………………………………………………………………………………………………….……….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ‛‛திராவிடம் ஒரு வெங்காயம்” – 1961-ல் வெளியான புத்தகம்…

  1. புதியவன் சொல்கிறார்:

    ஐயையோ…. விமர்சனம் தளம் காவிரி மைந்தன் சார் ஒரு சங்கியாகிவிட்டாரே…

    இந்தப் புத்தகமே வெளிவரவில்லை. இது சங்கிகள், பாஜகவைச் சேர்ந்தவர்கள் கிராபிக்கில் மாற்றி, தவறாக சமூக ஊடகங்களில் சித்தரிக்கிறார்கள் என்று சொல்லி, வார இறுதியில் கை நீட்டி ஆயிரங்கள் பெற்றுக்கொண்டு, ஊடகவியலாளர், மூத்த பத்திரிக்கையாளர், மூமூத்த பத்திரிகை ஜாம்பவான், நடுநிலை இணைய இதழ், இந்தியாவின் முதன்மை இணையச் செய்தித்தளம் என்று பெயர் எடுப்பதை விட்டுவிட்டு,

    இப்படிச் சொல்வதனால் என்ன லாபம்? மற்ற ஊடகவியலாளர்களைப் போல (சாவித்திரி கண்ணன் உட்பட), ஜால்ரா அடிக்கும் வாய்ப்பையோ, பல்லை இளித்துக் கைநீட்டி பணம் பிச்சை வாங்கும் வாய்ப்பையோ தவறவிட்டுவிட்டீர்களே.

    உங்களைப்போன்றவர்கள்தாம், தேவையில்லாமல், உண்மை வரலாறை வெளிப்படுத்துகிறேன் என்று சொல்லி, ‘பெரியார்’ சொன்ன, ‘தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி’, ‘இந்தியா பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டும்’, திமுகவைப் பற்றியும், தலித்துகளைப் பற்றியும் அவரது கருத்துகள் என்று பலவற்றையும் வெளிப்படுத்துகிறீர்கள். கண்ணுக்கு முன்னால் வீரமணியைப் பார்த்தும்கூட உங்களுக்குக் கற்றுக்கொள்ள இயலவில்லையே. அவருக்கு இறந்துபோன பெரியாரைப் பற்றிக் கவலைப்படுகிறாரா? இல்லை ஊரான் சொத்தைத் தன்னுடையதாக ஆக்கிக்கொள்ளப் போகும் தன் மகனைப் பற்றிக் கவலைப்படுகிறாரா என்று கண் முன்னே பார்த்தும் பாடம் படிக்கவில்லையே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.