
சிலருக்கு, மற்றவர்களிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள்
என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்;
மற்றவர்கள் தங்களை வித்தியாசமாக உணர வேண்டும்
என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இத்தகையவர்கள்
அடிக்கடி வித்தியாசமாக எதையாவது பேசிக்கொண்டோ,
செய்துகொண்டோ இருப்பார்கள்.
பொது கருத்துகளுக்கு, நம்பிக்கைகளுக்கு – மாறாக
எதையாவது பேசுவார்கள்; அவர்களின் பேச்சுக்கோ,
நடத்தைக்கோ – நியாயப்படுத்தக்க்கூடிய அடிப்படைகள்
இருக்காது.
இத்தகையவர்கள் பேச்சையோ, செயலையோ பற்றி
யாராவது விளக்கம் கேட்டால், தர மாட்டார்கள்; ஏனெனில்
விளக்கம் தரக்கூடிய வகையில், நியாயப்படுத்தக்கூடிய
வகையில்- அவர்கள் செயலோ, பேச்சோ – இருக்காது.
அது ஆ.ராசா-வாக இருந்தாலும் சரி, வெற்றிமாறனாக
இருந்தாலும் சரி… இவர்கள் எல்லாரும் ஒரே ரகம் தான்.
இவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும்
ஆரியர்-திராவிடர் தியரியை,
இவர்கள் தங்களது முன்னோடியாக, குருவாக –
ஏற்றுக்கொள்ளும் –
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் –
இந்த தியரியே தவறானது.
இந்திய மக்களில் எந்த பிரிவினரையும் –
ஆரியர், திராவிடர் என்று இனம் காணவே முடியாது.
அத்தகைய பிரிவுகளே உண்மையில் இல்லை;
வெள்ளைக்காரர்கள் வேண்டுமென்றே கற்பனையாக
உருவாக்கி, பரப்பிய பொய் அது என்று பலமுறை
பேசி இருக்கிறார். அவரது புத்தகங்களில் அதனை
உறுதிப்படுத்தி எழுதியும் இருக்கிறார்.
ஆனால், இதைப்பற்றி இவர்கள் தெரிந்தது போலவே
காட்டிக்கொள்ள மாட்டார்கள்.. டாக்டர் அம்பேத்கர்
சொல்வது தவறு என்று சொல்ல இவர்களுக்கு
துணிவு உண்டா…?
அண்மையில் வெற்றிமாறன், ராஜராஜ சோழன் இந்து அரசர்
அல்ல என்று உளறியதும் இத்தகைய செயல்களில் ஒன்று தான். வெற்றிமாறன் பேச்சை அடுத்து, ரங்கராஜ் பாண்டே சில
கேள்விகளை அவர் முன்வைக்கிறார்…
வெற்றிமாறன் இவற்றிற்கு பதில் சொல்வாரா …?
………………
.
………………………………………………………………………………………………………………………..……
வெற்றிமாறன்கள் விலைக்கு வாங்கப்பட்டவர்கள், இந்து மதம் பற்றிப் பேசுபவர்களுக்கு அஜெண்டா உண்டு. இவர்கள் மறந்தும்கூட கிறித்துவம் அதன் ஜாதிகள் மதங்கள் பற்றிப் பேசமாட்டார்கள். கொடுத்த காசைத் திருப்பிக் கேட்டால்?
ஹிந்து மன்னர் என்று யாரையும் கூறக்கூடாதாம்,ஏனெனில் ஹிந்து மதம் என்று ஒரு மதமே கிடையாதாம்.சைவம்,வைணவம் சமயம் என்று தான் கூறவேண்டுமாம் .ஆனால் மனும்ஸ்ம்ரிதி என்றால் மட்டும், அது ஹிந்து மதத்தில் உள்ளதாம் .அது சைவத்திற்கோ , வைணவத்திற்கோ என்று பிரித்து கூறக்கூடாதாம்.அதை வைத்து அரசியல் செய்ய வேண்டுமாம் ..
என்னமோ போங்க …இது போன்ற ஹிந்து மதத்தை பலவிதத்திலும் கேலி பொருளாக்கி ,மகிழும் போக்கை , அதனால் ஹிந்து மக்களிடையே ஏற்படும் அதிருப்தியை,கடைசியில் பிஜேபி கட்சி அறுவடை செய்து கொள்ளும்.பாவம் தாம் யாருக்காக உழைத்து கொண்டிருக்கிறோம் , என்பதை கூட அறியாத கூட்டம் ஒன்று…
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்,where is religion for tamil people. All religions are fake, money minded, do not encourage.Why I am replying, I used to read your almost all your writing.
//where is religion for tamil people// – What என்பதற்குப் பதிலாக where என்று வந்துவிட்டதா?
தமிழ் என்ற வார்த்தை இலக்கியத்தில் இருக்கிறது (5-7ம் நூற்றாண்டில்). ஆனால் தமிழர், தமிழ்நாடு என்றெல்லாம் வார்த்தைகள் இல்லை. சேரநாடு, பாண்டியநாடு, சோழநாடு என்பவைதான். பிற்காலத்தில் கொங்குநாடு என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவிற்கு native ஆன மதங்கள்தாம் இந்திய மதங்கள் (சுமார் ஆறு). மற்றவை, வெளிநாட்டினரால் வாள் முனையில் அல்லது பணப்பெட்டியினால் பயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வைக்கப்பட்டவைகளே.
Religions fake என்பது உங்கள் சொந்தக் கருத்துதான். ஆனால் உங்கள் பெயர் சேரநாட்டு அரசகுலத்தவன், பிற்காலத்தில் சமண சமயத்தைத் தழுவினான். அவர் இயற்றிய சிலப்பதிகாரத்தில் வருவது,
மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே?
சிலப்பதிகாரத்தில் சைவம், வைணவம் இரண்டும் வருகிறது, சமண பௌத்த மதங்களும்.
.
என் பங்குக்கு – கீழ்க்காணும் செய்திகள்-
(ஆதாரபூர்வமானவை …)
சிலப்பதிகாரம், புகழ் பெற்ற சேரமன்னன்
செங்குட்டுவனுடைய தம்பி இளங்கோவடிகளால் –
எழுதப்பட்ட காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு.
புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாகச்
சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது…
புகார் நகரத்தில் பலராமனுக்கும், கண்ணனுக்கும்
தனித் தனிக் கோயில்கள் இருந்ததைச்
சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
காவிரி, வைகை முதலான ஆறுகளும்
புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான
நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும்,
திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் சிலப்பதிகாரத்தில் நன்கு
வருணிக்கப்பட்டுள்ளன.
இளங்கோவடிகளின் கூற்றுப்படி,
சிலப்பதிகாரம் கீழ்க்கண்ட
3 கூற்றுகளை கருப்பொருளாக
கொண்டது –
1) அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதும்,
2) உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
3) ஊழ்வினை உருத்துவந்து உருட்டும் என்பதும் ….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இளங்கோவன்,
ஒரே வார்த்தையில் இதற்கு பதில் சொல்லி விட முடியாது.
என் இடுகைகளை தொடர்ந்து படித்து வருகிறீர்கள்
என்றால், என் நிலை உங்களுக்கு தெரிந்திருக்குமே….?
ஏற்கெனவே, பட இடங்களில், பல சமயங்களில்
தெளிவு படுத்தி இருக்கிறேனே…?
1) நான் ஜாதிவேறுபாடுகளை ஏற்பவன் அல்ல.
குலம் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம் என்கிற
பாரதியின் பார்வை தான் எனக்கு. பூணூலை அறுத்தெரிந்த
பிராமணர் பாரதி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
2) நான் ஆன்மிகவாதி….
– அடிப்படையில், அனைத்து மதங்களும் நல்லனவற்றையே போதிக்கின்றன. எனவே, எனக்கு எல்லா மதங்களும் சமமே… ஏற்புடையவையே.
நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்பதால், அதனைப்பற்றி
நான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறேன்.
அதனால், உரிமையோடு – அதைப்பற்றி பேசுகிறேன்.
உங்கள் கருத்து உங்களுக்கு ….
அதைப்பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை;
சரி… தொடர்ந்து என் இடுகைகளை படித்து வருவதாக
சொல்லி இருக்கிறீர்களே…. அவற்றைப்பற்றி உங்கள்
பொதுவான அபிப்பிராயம் என்ன இளங்கோவன் ….?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
உருப்படியான, சுவாரஸ்யமான
பின்னூட்டங்களை வரவழைத்தமைக்காக,
நண்பர் இளங்கோவனுக்கு
நான் நன்றி சொல்லியாக வேண்டும்…!!!
( இளங்கோவனின் ரீ-ஆக்-ஷனையும்
நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்…)
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வெற்றிமாறன் போன்றோர் உளறுவதற்கு நாம் பதில் சொல்ல தேவையில்லை .
ஒரு இரண்டு படங்கள் டைரக்ட் செய்து விட்டால் பெரிய அறிவு ஜீவி என்ற நினைப்பு .