
டெண்டரில் ’கட்டிங்’ பேசும் ஆம்பூர் திமுக எம்எல்ஏ-வான விஸ்வநாதன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்
பரவி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில்
வரும் ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி
திட்டத்தில் வீடுகள் கட்டுவது தொடர்பான டெண்டர்களை
இறுதி செய்வதில் இழுபறி நீடித்ததாம். எல்லாம் கமிஷன்
பஞ்சாயத்து தான். பிரச்சினையை ‘சுமூகமாக’ முடிக்க
ஆம்பூர் எம்எல்ஏ-வான விஸ்வநாதன், யூனியன் சேர்மன்
சுரேஷ்குமார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்ததாம்.
அப்போது ஊராட்சிமன்ற தலைவர்களிடம் பேசிய எம்எல்ஏ,
“மொத்த கமிஷன்ல உங்களுக்கு 40 %, எங்களுக்கு 60 % ”
எனக் கறாராக ‘கட்டிங்’ பேசியுள்ளார்.
மேலும், திட்டத்தில் ஒதுக்கப்படும் வீடுகளில் பாதியை தனக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார் விஸ்வநாதன்.
தான் பேசுவது அனைத்தும் வீடியோ எடுக்கப்படுவது
தெரியாமலேயே பேசி இருக்கிறார் விஸ்வநாதன்.
எந்தவித அச்சமோ, கூச்சமோ இல்லாமல்,
பக்கத்தில் முதல்வர் படத்தை வைத்துக்கொண்டே இப்படி
எல்லாம் பேசுகிறார்….. வீடியோ எடுத்த புண்ணியவான்கள் இதை
அப்படியே சமூகவலைதளத்தில் வைரலாக்கிவிட்டார்கள்.
(நன்றி – காமதேனு – 1 Oct, 2022)
.
………………………………………………………………………………………………………………………..…
இதுவரை வீடியோவில் மாட்டிய யாரவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? அது போலத்தான் இதுவும்!
யாருக்கும் வெட்கம் இல்லை!
பேசாமல் வெளிப்படையாக லிஸ்ட் போட்டு விட்டால் இந்த ஸ்டிங் ஆபரேஷன்களுக்கு வேலையில்லாமல் போகும்!