……………….

…………………….
ஓரு சுவாரஸ்யமான அலசல்…
இந்தியாவுக்கு வெளியே – இந்தியர்கள் அதிகமாக
வசிக்கும் முக்கியமான நாடுகள் எவை….?
ஒவ்வொன்றிலும் எவ்வளவு பேர்…. ?
1) USA – 44,60,000
2) UAE – 31,04,586
3) Malaysia – 29,87,950
4) Saudi Arabia – 28,14,568
5) Myanmar – 20,08,991
6) UK – 18,25,000
7) South Africa – 13,00,000
8) Mauritius – 8,85,000
9) Réunion(France) – 2,20,000
10) Nepal -40,00,000
( நேபாளம் போக – இந்தியருக்கு விசா தேவை இல்லை…!!! இந்தியாவுக்குள் வருவதற்கு, அவர்களுக்கும் விசா தேவை இல்லை….!!!)
.
………………………………………………..
பஹ்ரைனில், 6.5 லட்சம் வெளிநாட்டவர்கள். அவர்களில் 3.5 லட்சம் இந்தியர்கள்.
கேனடாவில் 10 லட்சத்திற்கும் மேல். ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 8-10 லட்சம்.
ஒரு இண்டெரெஸ்டிங் விஷயம். பஹ்ரைனில் சில வருடங்களுக்கு முன்பு, அங்குள்ள பெருவாரியான ஷியா மக்களுக்கும் ஆட்சி செய்யும் சுன்னி முஸ்லீம் ஆட்சியாளர்களுக்கும் சண்டை நடக்கும். ரோட்டில் பெட்ரோல் குண்டு, டயர் எரிப்பது என்பது அவ்வப்போது நடக்கும். ஆனால் அவர்கள் (ஆட்சியாளர்கள் மீது கோபம் கொண்டு சண்டையிடும் இளைஞர்கள்), இந்தியர்களுக்குத் தொந்தரவு தருவதில்லை. டயர் எரிப்பு, பெட்ரோல் குண்டு வீசுவது என்று 50 அடி தூரத்தில் நடக்கும், போலீஸ் ஆயுத வாகனம் வந்து, போலீஸ்காரர்கள் ரப்பர் குண்டு அல்லது சில நேரங்களில் கண்ணீர்புகை குண்டுடன் இருப்பார்கள். நாங்கள் இந்தப் பகுதியில் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், வேடிக்கை பார்க்காமல் நடந்துகோண்டிருப்போம்.