
……………………….
நடிகர் விவேக் இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில்
கமல் ஹாசனுடன் இணைந்து படங்களில் நடிக்கவே இல்லை.
கடைசி வரை இது நிறைவேறவில்லை என்று கமல் ஹாசன்
கூட விவேக் மறைவின்போது, உருக்கமாக கூறியிருந்தார்.
காரணம் என்ன என்பது இப்போது தான் தெரிய வருகிறது…. விவேக், மேடையில் பேசிய வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகி
இருக்கிறது….
(2015- ல் விவேக் கதாநாயகனாக நடித்து வெளியான படம்
பாலக்காட்டு மாதவன்….)
………….
.
………………………………………………
1. பெரிய படங்களோடு சின்னப் படங்களோ கதையம்சம் உடைய படங்களோ கடந்த 20 வருடங்களுக்கு மேலாக போட்டிபோட முடிவதில்லை. அதன் காரணம் ரொம்ப சிம்பிள். பொதுமக்களுக்கு பொழுதுபோக்க தொலைக்காட்சி இருக்கிறது. முக்கியமான படங்கள் மாத்திரம் பார்த்தால் போதுமானது. விமர்சனம் பார்த்துவிட்டு, பிறகு செலவழிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொள்ளும் கூட்டம் பெருகிவிட்டது. இதனால்தான் ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்து ஒரு வாரம் ஓடினாலே வெற்றி என்ற நிலைமை வந்துவிட்டது.
2. ஒவ்வொருவரும் அவரது தயாரிப்பாளரின் கஷ்டத்தை மாத்திரமே பார்க்கும் கடமை பெற்றவர்கள். அதனால் கமலஹாசன் செய்தது சரிதான்.
3. நான் பாஹுபலி வெளிவந்தபோது, 4 நாட்களுக்குள் மூன்று ஷோ பார்த்தேன் (நான் இருந்த ஊரில் ரொம்ப சுலபமாக டிக்கெட் வாங்கிவிடுவோம். தியேட்டர்களில் தொடர்ந்து படம் ஓடிக்கொண்டிருக்கும். அதாவது காம்ப்ளக்ஸில் 5 தியேட்டர்களில் பாஹுபலி ஓடும் (இது தவிர பிற மால்களிலும்). பஹ்ரைனில் படத்தை வெளியிட்டவர், (அல்லது கல்ஃப் தேசங்களில்), தனக்கு அபரிமிதமாக லாபம் வந்தது என்று சொல்லி, 5 கோடி ரூபாயை பிறகு ராஜமௌலிக்குக் கொடுத்தாராம்.
4. பாபநாசமும் அன்றே வெளிவந்திருந்தால், நான் பாபநாசம் படத்தைப் பார்த்திருக்கும் வாய்ப்பே இருந்திருக்காது. உண்மையைச் சொன்னால், பாபநாசம் நெல்லை வட்டார மொழி, பலருக்குத் தடுமாறியிருக்கும், புரிந்திருக்காது. திரிஷ்யம் படம் போன்று பாபநாசம் இல்லை.
5. விவேக்கின் பாலக்காட்டு மாதவன் படம் வெகு வெகு சுமார். குழந்தைத்தனமான படம். அது மாத்திரம் பல தியேட்டர்களில் ஒரே சமயத்தில் வெளிவந்திருந்தால், தயாரிப்பாளரைக் காப்பாற்றியிருக்கும். மற்றபடி விவேக் சொல்லிக்கொளவதுபோல படம் நன்றாக இருந்த நினைவு இல்லை.
ஒரு தீபாவளியின்போது மூன்று பெரிய படங்கள் வெளிவந்து அனைத்தும் வெள்ளிவிழா கொண்டாடிய காலங்கள் உண்டு. அப்போது தீவிர ரசிகர்களும், வேறு பொழுதுபோக்கிற்கு இடமில்லாமையும் இருந்தது.
இந்த வீடியோ கமலுடன் விவேக் நடிக்காததற்கு காரணாமாக இருக்க முடியாது. பாபநாசத்துக்கு பிறகு கமல் நடித்தது மூன்றே படங்கள்தான். தூங்காவனம், விஸ்வரூபம் 2, விக்ரம். மூன்றிலுமே நகைச்சுவை பாத்திரம் கிடையாது. அடுத்து வரும் இந்தியன் 2 வில் விவேக் நடிக்க இருந்தார்.
பெரிய நடிகர்களின் படங்கள் என்பது மிகப்பெரிய பட்ஜெட். எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்கொள்ள முடியாது. எல்லோருமே அவரவர் படம் நன்றாக ஓட எதையும் செய்யத்துணிவார்கள். இந்த விஷயத்தில் கமல் செய்தது தப்பே இல்லை!