……………………….








பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு நிகழ்வை
கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்…
என் கவனம் முழுவதும், முதல் வரிசையில் அமர்ந்து
அமைதியாக சிரித்துக் கொண்டிருந்த மணிரத்னம்
என்கிற அந்த மாபெரும் கலைமேதையின் மீது தான்.
படம் கமர்ஷியலாக வெற்றி பெறுகிறதோ இல்லையோ
தெரியாது; ஆனால் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று
மனதார விரும்புகிறேன்; வேண்டுகிறேன். மணிரத்னம்
என்கிற அற்புதமான தமிழ் படைப்பாளியின் பெயர்
உலக அரங்கில் இன்னும் பெரிய அளவிற்கு பேசப்பட வேண்டும்
என்று விரும்புகிறேன்.
இந்த அற்புத மனிதர் மூலம், 1000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் பெருமை, சரித்திரம் – உலகம் முழுவதும் பேசப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.
நிகழ்ச்சியில் என் கவனம் செல்லவில்லை; நான்
25 வருடங்கள் பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன்.
1997 – எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ( ப்ளஸ்) ஜெயலலிதா என்கிற
தமிழ்நாட்டின் மறக்க முடியாத அந்த ஆளுமைகளைச்
சுற்றி, அவர் பின்னிய அந்த இருவர் திரைப்படம்….
இருவர்படத்தின் சில வித்தியாசமான ஸ்டில்களை இடுகையில் பார்த்திருப்பீர்கள்… இருவர் படத்தைப்பற்றி சில வித்தியாசமான
விவரங்களை கீழே தருகிறேன்…..
உண்மையில் மணிரத்னம் 1995 அக்டோபரில் “இருவர்”
படத்தின் உருவாக்கத்தில் இறங்கியபோது மனதில் வைத்திருந்த
“கரு” விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும்
அவருக்கு மிகவும் நெருக்கமாக அவருக்கு அடுத்த இடத்தில்
இருந்து,
– பின்னர் பிரபாகரனுக்கே துரோகம் இழைத்து,
அவரால் தண்டிக்கப்பட்ட “மாத்தையா” ஆகியோர்
சம்பந்தப்பட்ட சம்பவங்களை வைத்து பின்னப்பட்ட கதையே…
மாத்தையா, விடுதலைப்புலிகளுக்கு துரோகம் இழைத்ததாக,
குற்றம் சாட்டப்பட்டு, டிசம்பர் 1994-ல் புலிகளால் மரண தண்டனை
வழங்கப்பட்டார்.
படம் திட்டமிடப்பட்டபோது, பிரபாகரன் உயிருடன் இருந்தார்.
மாத்தையாவுக்கு மரணதண்டனை நிறைவேறி ஒரு வருடம்
கூட ஆகியிருக்கவில்லை
மணிரத்னம் அப்போது சூடாக இருந்த இந்த சம்பவத்தைத்தான்
முதலில் மனதில் நினைத்திருந்திருக்கிறார்.
பிரபாகரன் வேடத்தில் மோகன்லாலும், மாத்தையா வேடத்தில்
ஹிந்தி நடிகர் நானா படேகரும் இணைக்கப்படவிருந்தார்கள்.
ஆனால், கதைக்கரு பற்றிய விஷயம் leak ஆகி,
சில பிரச்சினைகள் உருவாயின. ( மாத்தையா மீதான
அடிப்படைக் குற்றச்சாட்டு, அவர், இந்திய உளவு அமைப்பான
RAW-வுடன் நெருக்கம் வைத்து, பிரபாகரனுக்கு எதிராக
செயல்பட்டதாகவும், புலிகள் பற்றிய சில ரகசிய தகவல்களையும்
RAW -க்கு சொன்னார் என்பதும் தான்… )
இத்தகைய ஒரு “கரு”வுடன் படம் வெளியாவது கடினம்
என்கிற நிலை ஏற்பட்டவுடன், கதையில் அடிப்படை மாற்றம்
செய்யப்பட்டு, அது எம்.ஜி.ஆர்-கருணாநிதி ஆகியோரிடையே
இருந்த நட்பு-அரசியல் உறவு-பகை என்று ஒரு அரசியல்
கதைக்கருவாக உருமாறி விட்டது.
ஆனால், கதை மாற்றப்பட்ட இருவர் படமும் சென்சாரில்
பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற
இரண்டு அரசியல் தலைவர்களின் உண்மைக்கதை என்கிற
வகையில், இது ரிலீஸ் ஆவது சமூகத்தில் சட்டம் ஒழுங்கு
பிரச்சினையை உண்டாக்கும் என்று சொல்லி, சென்சார் சர்டிபிகேட் மறுக்கப்பட்டது.
பிறகு மணிரத்னம், அப்பீலுக்குச் சென்று, 8 பேர் கொண்ட
குழுவால் மறுபரிசீலனை செய்யப்பட்டு, சில காட்சிகள்
நீக்கப்பட்டும், சில வசனங்கள் முடக்கப்பட்டும், இறுதியில்
U/A சர்டிபிகேடுடன் ரிலீசுக்கு அனுமதி பெற்றார்.
மேலும், படம் உருவாகத் துவங்கிய சமயத்தில், ஜெயலலிதா
முதலமைச்சராக இருந்தார். ரிலீஸ் ஆகும்போதோ, கருணாநிதி
முதலமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆர். அவர்களோ -1987 வரை
முதலமைச்சராக இருந்தவர்…. அவர் மறைந்து விட்டாலும்,
மக்கள் மனதில் நிறைந்திருந்தார்.
தமிழ்நாட்டின் நடப்பு அரசியலில் உச்சத்தில் இருந்த இவர்களை
வைத்து படம் எடுப்பது சாதாரணப்பட்ட விஷயம் அல்லவே.
ஆனால், இந்த 3 பேரின் கௌரவத்திற்கும் சற்றும் இழுக்கு
ஏற்படாத வகையில் – மணிரத்னம் வெகு திறமையாக
திரைக்கதையை அமைத்திருந்தார்.
இதில் இன்னொரு சுவாரஸ்யம் – முதலில் கருணாநிதி
வேடத்திற்கு கமல்ஹாசனும், பிறகு சத்தியராஜும்
பேசப்பட்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் இருவருமே
அந்த ரோல் கருணாநிதி சம்பந்தப்பட்டது என்பதால்,
ஏற்க மறுத்திருக்கின்றனர். அதன் பின்னரே பிரகாஷ் ராஜ்
ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
படத்தில் பிரகாஷ் ராஜ், கலைஞருக்கான வசனங்களை தன் சொந்தக்குரலிலேயே பேசி இருக்கிறார்…!
கதையில் மாற்றம் ஏற்பட்டதும் நல்லதற்கே என்று சொல்ல
வேண்டும்….”இருவர்” படம் வசூல் ரீதியாக வெற்றி
பெறாவிட்டாலும், மணிரத்தினத்தின் தலைசிறந்த படைப்புகளில்
ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
( “Iruvar” tamil movie was included by
critic Rachel Dwyer in the 2012
British Film Institute Sight and Sound 1000
greatest films of all time. )
படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தன…
National Film Awards 1997 –
Best Supporting Actor – Prakash Raj
Best Cinematography – Santosh Sivan
………………………………
சரி பழைய கதைகளையே சொல்லிக்கொண்டிருக்கிறேனே…
மணிரத்னம் அவர்களின் லேடஸ்ட் பேட்டியிலிருந்து
கொஞ்சம் –
He surprises by sharing that he is glad
he couldn’t do Ponniyin Selvan earlier.
“Fitting Ponniyin Selvan into a single film
was the biggest challenge I had when thinking
of adapting. Today, the audience has embraced
the idea of duologies and trilogies, and
this seemed like the perfect time for me
to explore the format. If I had made the
material as a single film, I would have been
critical of myself for leaving out so many
details.”
Mani Ratnam hopes to break what is thought of
as ‘Mani Ratnam style’. “Being unpredictable
is my top priority. So, I try to avoid a distinct signature or style in my films. When someone
starts finding a pattern in my work,
I don’t see it as a compliment; instead, I push
myself harder to overwrite it,” he says,
“Each film dictates itself. I just have to
ensure that none of my previous influences
is infused into my current work.”
The veteran director shares that co-writing
with Jeyamohan and Elango Kumaravel has resulted
in a film that is fresh and highly accessible
to the audience. “Though I had a lot of support
from the source material of Kalki,
co-writing made my work easier. It’s not easy to ignore any chapter in the book; so, finding a
common thread for the screenplay was vital.
We have taken minor deviations from the original narrative, only to make it more interesting as a film.”
He adds that using multiple-narrative techniques
was essential in adapting Ponniyin Selvan into
a cinema. “While a novel can have an entire page
to explain the wave of emotions a character is
going through, a film can only utilise body
language and dialogues. So, we had to explain c
ertain things directly, certain things indirectly
and the rest in an intricate manner to ensure a gratifying viewing experience.”
Mani Ratnam and the team apparently did extensive research to get both facts and fiction right.
“As a significant portion of the novel is based
on real history, our research team worked hard
in getting the representation of the characters
and locations right. For instance,
the warriors in the film wear thick leather
armour, instead of those made of metal. Also,
we have humanised the characters as much as
possible. You will see Arulmozhi Varman and Vandhiyathevan using Tamil in a way that’s accessible.”
The auteur states that he lets his actors find
their path. “I just plant the idea in them and
guide them when they lose track. I believe in
my actors a lot. Once I finish casting,
I trust actors to transform themselves and
bring their characters to life.” But this
doesn’t mean he went easy on them. T
he taskmaster made sure that his actors
underwent multiple workshops and script-reading sessions. “It is a two-way process –
நான் அவங்களை படுத்தினேன்; அவங்களும் என்னை
படுத்தி எடுத்தாங்க…!!! “
He considers story to be the life of any cinema, regardless of the period it is set in.
“VFX and cameras are tools. If we had made
Ponniyin Selvan ten years ago, we would have
been forced to hunt for locations
- without lamp posts.
But now, we have the advantage of VFX to shoot anywhere we want and cut down needless visuals.”
What drives him?
“I am driven by the desire to outdo my previous
work. Telling stories in an honest manner and
the urge to remain unpredictable keep me going,”
he says, adding that he finds new stories to
tell every single day. ” சுத்தி நடக்கறது எல்லாமே
ஒரு புது கதை தான்… If we observe close enough,
everything around us can be an influence.
I will remain forever inspired to tell
new stories.”
.
…………………………………………….