……………………………..

இதற்கெல்லாம் விமரிசனம் எழுதினால்
யாராவது என்னைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள்….?
நிறைவேற்றுவதாக உத்தேசம் இல்லாமலே, கொடுக்கப்படும் வாக்குறுதிகளுக்கு அகராதியில் “பொய்” என்று தானே போடப்பட வேண்டும்…?
.
………………………………………….

……………………………..
இதற்கெல்லாம் விமரிசனம் எழுதினால்
யாராவது என்னைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள்….?
நிறைவேற்றுவதாக உத்தேசம் இல்லாமலே, கொடுக்கப்படும் வாக்குறுதிகளுக்கு அகராதியில் “பொய்” என்று தானே போடப்பட வேண்டும்…?
.
………………………………………….
முதல் நாள் முதல் கையெழுத்து, நீட் ரத்து, பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய்……. என்று ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறதே…. ஒரு பழைய துண்டுச்சீட்டை எடுத்துப் போட்டால் போதுமா?
மதுவினால் பயன் பெறுவது திமுக சாராய ஆலை அதிபர்கள், டி.ஆர்.பாலு உட்பட. இதுல திமுக ஆலைகள் வியாபாரத்தைக் கெடுப்பார்களா?
அது சரி..நீங்க நடுநிலைமையா எழுதுவதில்லையே, தமிழக தொலைக்காட்சி பத்திரிகைகள் போல. உங்களுக்கு ‘நடுநிலைமை’னா என்னன்னு கொஞ்சம் சொல்லித்தர ஆசை.
ஈரானில் என்ன பிரச்சனை…நோ நோ.. அதுபற்றி எழுதக்கூடாது. முஸ்லீம்கள் வருத்தப்படுவாங்க. பாதிரியார் செய்த அடாத செயல்… ம்ஹும்.. அதெல்லாம் கிறிஸ்துவர்கள் வருத்தப்படுவாங்க. திமுகவின் தேர்தல் வாக்குறுதி… மூச் விடப்படாது. திமுகவைப் பற்றி ஏதாவது எழுதணும்னு உங்களுக்கு கை அரிப்பு எடுத்தால், ‘இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் என்ற லிஸ்டில் 3வதாக ஸ்டாலினைச் சொல்லியிருப்பது பார்ப்பனர்களின் சதி. முதலாவதாக வந்தவரை, ‘யாரோ’ தந்த அழுத்தத்தினால் மூன்றாவதாகச் சொல்லியிருக்கிறார்கள்’ என்றெல்லாம் பதிவு போடவேண்டும். இல்லையா… மத்திய அரசுதான் தமிழகத்தில் மது ஆறாகப் பெருகுவதற்குக் காரணம் என்று சொல்லி, அது எப்படி என்று ஜஸ்டிஃபை பண்ணணும் (நான் வேணும்னா சொல்லித்தர்றேன். மத்திய அரசு..நோ நோ.. ஒன்றிய அரசு, தமிழக அரசுக்கு மாதம் ஒரு லட்சம் கோடிகளைக் கொடுத்தால், அடுத்த நொடியிலேயே மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். ஒன்றிய அரசோ தமிழகத்தையும் தமிழக மக்களையும் வஞ்சிக்கிறது. அதனால் மதுக்கடைகளை தமிழக அரசினால் மூடமுடியாமல், கனத்த இதயத்துடன் நடத்துகிறது… இந்த மாதிரி எழுதணும்)… இல்லைனா, உத்திரப் பிரதேச கிராமம் ஒன்றில் வீட்டில் கதவு உடைந்திருக்கிறது. இதுபற்றி பாஜக அரசு கவலைப்படவில்லை. குஜராத்தில் எதிர்க்கட்சிகள் (காங்கிரஸ்னு எழுதக்கூடாது. திமுகவுக்கு கோபம் வரும்) மக்களுக்காக இலவசங்கள் தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளதால் பாஜக அரசுக்கு பீதி, குஜராத் முதல்வர், தானாகவே முன்வந்து ராஜினாமா செய்துவிடலாம் என்று தனிப்பட்ட முறையில் தன் மனைவியிடம் சொன்னார் என்றெல்லாம் எழுதவேண்டியதுதான்.
ஆனானப்பட்ட திமுக பத்திரிகை விகடனே ஒரு செய்தியைப் போட்டுவிட்டு, பத்து மணி நேரத்தில் அந்தப் பதிவையே ‘பயத்தினால்’ நீக்கிவிடுகிறது. இதுல ‘துண்டுச்சீட்டை’ எடுத்துப்போட்டு பதிவு போடறீங்க.
-செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை அடுத்த மல்ரோசாபுரத்தில் 20 ஆண்டுகளாக இயங்கி வரும் கார் உதிரி பாக தொழிற்சாலையின் முதன்மை செயல் அலுவலருக்கு மிரட்டல் விடுத்ததாக திமுகவை சேர்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வெளியாகியுள்ள வீடியோ –
எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் ரக்ஷகன் பத்தாயிரம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள சென்னை அக்கார்டு குரூப் உரிமையாளர். அது மட்டுமல்லாமல் இலங்கையில் 25000 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பவர். 2009இல் இவர் நடத்தும் மெடிக்கல் கல்லூரியில் mbbs சீட்டுக்கு 20 லட்சம் வாங்கியது ஒரு ஸ்டிங் ஆப்பரேஷன் மூலம் வெளிவந்தது (நீட்டுக்கு ஏன் எதிர்ப்பு என்று இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்!)
இவ்வளவு சொத்து ஒரு பாராளு மன்ற உறுப்பினருக்கு எப்படி வந்தது என்று கேட்க நேர்மையான பத்திரிக்கையாளர் ஒருவர் கூடவா இல்லை? இவ்வளவுக்கும் அப்புறம் அவர் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்றால் அந்த அளவு சொரணை கெட்டா போய்விட்டோம்?
திமுக என்றால் பத்திரிகையாளர்கள் பம்முகிறார்கள் இல்லையென்றால் கொத்தடிமை வேலை செய்கிறார்கள். இதற்கு எந்தப் பத்திரிகையும் விதிவிலக்கில்லை. பத்திரிகையாளர்கள் எத்தனைபேர் கோடீஸ்வரர்கள் என்று கணக்கெடுத்தால் தெரிந்துவிடும். ஆனானப்பட்ட ‘நடுநிலை’ என்று சொல்லிக்கொள்கிற சாவித்திரி கண்ணனே, கொத்தடிமை வேலை செய்கிறார், உண்மையை மறைத்து திமுகவுக்கு ஆதரவாகப் பேசுகிறார் எனும்போது மற்ற பத்திரிகையாளர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?
மக்கள், ஊழலை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை (வாக்களிக்கும் எளியவர்கள்). அவர்களைப் பொறுத்தவரை தங்களுக்குப் பங்கு வரவில்லை என்றால்தான் கோபப்படுவார்கள்.
இன்னொன்று முக்கியமான பாயிண்ட்….. ஜெகத்ரக்ஷகன் பணமெல்லாம் அவர் பணமா? யோசித்துப்பாருங்கள்.
But what has the government done to get back the ill-gotten wealth? BJP government is ruling for last 8 years, and so, why no action has been taken so far. Not only on this, but in most of these disproportionate assets corruption cases, we see the same lack of inaction. Proves அரசியல் ஒரு சாக்கடை
ஏன் அரசியலை மாத்திரம் சொல்றீங்க? சமுதாயத்தின் நான்கு தூண்களில் எது சரியாக இருக்கிறது என்று யோசியுங்கள். ஊழல் வழக்கு, தேசத்ரோக வழக்கு என்று எதை எடுத்தாலும் எப்படி தப்பிக்க முடிகிறது, ஜாமீன் பெற முடிகிறது? ஏன் தலைவர்களைக் கொன்ற பயங்கரவாத, இந்திய தேசத்திற்கு எதிரான வழக்குகளிலும் எப்படிப்பட்ட நிலைப்பாடுகள் எடுக்கப்படுகின்றன என்பதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?
மக்கள் சரியாக இருந்தால் மற்றவை எல்லாமே சரியாக இருக்கும். நாம் மக்களை மட்டுமே குறை சொல்லவேண்டும்.
// அந்த அளவு சொரணை கெட்டா போய்விட்டோம்? //
ஆமாம் – ஆமாம் – ஆமாம் …
அதில் எந்தவித சந்தேகமும் இல்லை…!!!