பாண்டே’யின் இந்த கேள்விக்கு… சீமான் மட்டுமல்ல,ஆ.ராசா, திருமா உட்பட எத்தனையோ பேர் பதில் சொல்லியாக வேண்டும்….

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, வேண்டுமென்றே,
திட்டமிட்டே, பொய் பேசி – தமிழ் மக்களிடையே
சாதி-மத பாகுபாடுகளை வளர்த்து, ஆரிய-திராவிட
இனம் பற்றிய வெறுப்புணர்வுகளை உண்டு பண்ணிய,
தொடர்ந்து உண்டுபண்ணிக் கொண்டிருக்கும் –

அத்தனை திராவிட அரசியல்வாதிகளும், ரங்கராஜ் பாண்டே
அவர்கள் இந்த காணொலியில் கேட்கும் கேள்விகளுக்கு
பதில் சொல்லியாக வேண்டும்…

வழுக்கி, நழுவாமல் – நேரடியாக பதில் சொல்ல வேண்டும்.


டாக்டர் அம்பேத்கர் அவர்களை வைத்து அரசியல்
வியாபாரம் பண்ணிக் கொண்டிருக்கும் இந்த அரசியல்
வியாதிகள், அம்பேத்கர் அவர்கள்-

“ஆரியர்-திராவிடர்” என்கிற தியரியே தவறானது; கற்பனையானது;
சுயநலவாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்படுவது ” –
என்று சொல்வதை “தவறு” என்று தைரியமாக, வெளிப்படையாக இவர்கள் சொல்வார்களா…? முடியுமா…?

பாண்டே சொல்ல மறந்த இன்னும் சிலவற்றையும் நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்… இவர்கள் அடிக்கடி சொல்வது –


சிவப்பாக இருப்பவர்கள் ஆரியர்கள்.
கருப்பாக இருப்பவர்கள் திராவிடர்கள்…..என்று.

அப்படியானால் –
சிவப்பாக இருக்கும் திமுக தலைவர் எந்த இனம்….?

நீண்ட நாட்களாக இந்த விஷயம் குறித்து, விமரிசனம் தளத்தில் விரிவாக ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்று நினைத்து, சில விவரங்களையும் சேகரித்து வந்தேன்… .

எழுத நினைத்து, நான் எழுத முடியாமலே போனதும் நல்லதாகப் போயிற்று.
ஏனெனில், ரங்கராஜ் பாண்டே அளவிற்கு என்னால் இதை எடுத்துச் சென்றிருக்க முடியாது.

ஜாதி, மதம், இனம் – என்று மக்கள் பிளவுபட்டதற்கு,
முன்பு அறியாமை காரணமாக இருந்தது;
தொன்மையான பழக்க வழக்கங்கள் காரணமாக
இருந்தன… பெரும்பாலும் அத்தகைய எண்ணங்கள்
இன்று மறைந்து விட்டன.

ஆனால், இந்த பாகுபாடுகள் மறைந்து விட்டால்,
இன்று அவற்றை வைத்து வியாபாரம் செய்யும் சுயநல அரசியல்வாதிகளின் மவுசு குறைந்து விடுமே.
பிசினஸ் படுத்து விடுமே.

ஆகையால், மக்கள் மறந்து விட்டாலும்,
விடாமல் அதை நினைவுபடுத்திக் கொண்டே,
நீ வேசி மகன், விபச்சாரி மகன் என்று
மக்கள் மனதில் விஷ வித்துக்களை ஊன்றிக்கொண்டே
இருக்கிறார்கள் இந்த சுயநலவாத போக்கிரிகள்.

மனிதராக பிறந்த எவரும், எவரை விடவும் –
உயர்ந்தவரும் அல்ல;
எவரும் எவரையும் விட தாழ்ந்தவரும் அல்ல.
நாம் இதில் உறுதியாக இருக்கிறோம்.

திராவிட அரசியல் பேசும் அரசியல்வாதிகள், முதலில் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். முக்கியமாக, திருவாளர்கள் ஆ.ராசா, சீமான், திருமா ஆகியோர் இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவில்லையெனில் –

தாங்கள் செய்வது “போலி” அரசியல் என்பதை அவர்களே ஒப்புக்கொள்வதாக ஆகும்.

பொதுவாக, பாண்டே சொல்லும் கருத்துகள் அனைத்தையும் நான் முழுமையாக ஏற்பவன் அல்ல. ஆனால் – இந்த காணொலியில் அவர் சொல்வதை நான் முற்றிலுமாக ஆதரிக்கிறேன்.


அவசியம் காண வேண்டிய ஒரு காணொலி….

……………….

.
…………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to பாண்டே’யின் இந்த கேள்விக்கு… சீமான் மட்டுமல்ல,ஆ.ராசா, திருமா உட்பட எத்தனையோ பேர் பதில் சொல்லியாக வேண்டும்….

 1. புதியவன் சொல்கிறார்:

  திமுக திக கும்பல்களின் பேச்சுக்கு ஆதாரம் தேடக்கூடாது. அவங்களுடைய ஒரே பர்பஸ், கிறித்துவ மதத்தைப் பரப்புவது. இந்தக் காரணத்தால்தான் இந்திய அரசை ஏமாற்றி, இந்து மத லேபிளில் சலுகைகளை மாத்திரம் பெற்றுக்கொண்டு, மற்ற மதத்திற்குக் கொத்தடிமையாக இருப்பது. இது பலப் பல வருடங்களாக நடந்துகொண்டு வருகிறது. இந்து மதத்திற்குப் பின்புலமாக இருப்பது பிராமணர்களும், சைவ ஆதீனங்களும். பிராமணர்களை ஒடுக்கிய பிறகு சைவ ஆதீனங்களையும் ஒடுக்க ஆரம்பித்தபோது, இந்துக்கள் ஒன்று திரள்வதைக் கவனித்துவிட்டார்கள்.

  சீமான், எந்த நாடார் அரசியல்வாதி/திரையுலகத்தினர் பாதிக்கப்பட்டாலும், கிறித்துவர்கள் பாதிக்கப்பட்டாலும் உடனே ஆதரவுக் குரல் எழுப்புவார். திருமாவும் இதே க்ரிப்டோ கிறிஸ்டியன். அவரும் திமுக திக கும்பல்களைப் போலத்தான். இவர்கள் அனைவரும் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவர்கள்.

  இவர்களுக்கு கொள்கை என்று இருந்தால், தமிழகத்தில் தமிழ் தவிர, உருது, அரபி, ஆங்கிலம் கூடாது, அந்த மொழிகளில் வழிபாட்டுத் தலங்கள் இருக்கக்கூடாது என்று சொல்வதுதானே. முஸ்லீம்களின் ஹதீஸ், குரான் மற்றும் சமயத் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கொண்டு, உண்மையைப் பேசியதால் அனைத்து முஸ்லீம்களும் ஒன்றுதிரண்டு போராடினர் (உண்மையைச் சொன்னதுக்கு). இதற்கு இந்தக் கொத்தடிமை அரசியல்வாதிகளும் குரல் எழுப்பினர். அதற்குக் காரணம் இந்து மத எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு ஒன்றேதான்.

  அதனால் பாண்டே போன்றவர்கள் எந்தக் கேள்விகள் எழுப்பினாலும் அதற்கு பதில் கிடைக்காது.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தங்கள் வியாபாரத்திற்காக, பிழைப்பிற்காக
  டாக்டர் அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவோர்
  கவனத்திற்காக, அவர் “ஆரியர்-திராவிடர்” தியரி
  குறித்து சொன்னவற்றை கீழே தந்திருக்கிறேன்.

  ஒன்று அம்பேத்கர் சொன்ன தத்துவத்தை
  வெளிப்படையாக ஏற்று,
  அவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்.

  இல்லையேல் – “அம்பேத்கர் சொன்னது தவறு” –
  என்று தைரியமாக மறுதளித்து தங்கள் நிலையை
  தொடரும் முன் தங்கள் தரப்பு ஆதாரத்தை
  தர வேண்டும்….

  செய்வார்களா …?

  ——————–

  தனது “Who were Shudras”,
  என்கிற புத்தகத்தில் chapter 4 -ல்
  டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார் –

  ஆரியர் -திராவிடர் தியரியே முற்றிலும்
  தவறானது; பொய்யானது.

  “Who were Shudras”, chapter 4;
  he gives detailed reasoning to
  debunk Aryan Invasion theory.

  He exposes the entire purpose,
  strategy and lie of this dubious
  theory.

  He compares this theory to Poison
  and calls it as dangerous as a
  snake which has to be killed.

  ……………

  ” In Rig Veda – there was no mention
  of Shudra to begin with. It came in
  later part of Rig Veda.

  – Shudra is created later from
  Kshatriya by denial of Upanayana
  through Smriti injunction.

  Specially this discrimination
  started in middle age after the
  fall of Buddhism.
  All Buddhists were made untouchables…”

  ……………….

  -Vol-7, Chapter – “Untouchables” –

  “….caste and race are different,

  The difference between castes
  are cultural, not racial.
  Caste cannot be race….”

  ……………

 3. Thiruvengadamthirumalachari சொல்கிறார்:

  The Britishersrefused to extend the privileges provided to SoC/ST people to those who were converted to Christianity and Islam stating that there are no such divisions in those religions. Recently some news was published the present government is trying to extend these privileges(reservation,financial help)etc. to them also. They are the people who still advocate the aryan theory tpO portray them as the victims a caste discrimination introduced by the aryans

  • புதியவன் சொல்கிறார்:

   அரசு மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையைக் கொண்டுவர முடியாது. ஆரியன் திராவிடன் தியரியே, தமிழர்களுக்கு எதிரானது. நீதிக்கட்சியினரால் தெலுங்குத் தலைவர்களை நம் தலைவர்கள் போல ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்ட வெற்று வாதம். நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால், திராவிடர்கள் என்பது பூர்வ பழங்குடியினரான பட்டியலினத்தவர்கள் மட்டும்தான் போலிருக்கிறது. மற்றவர்களெல்லாரும் வந்தேறிகளா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.